About Us
கவனத்திற்கு
யெஹோவா சாட்சி கூட்டத்தாருக்கும்(Jehovah’s Wittnesses) எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
நாங்கள் அவர்களிடம் உள்ள தவறான போதனைகளை எதிர்க்கிறோம். நாங்கள் வேதாகமம் சொல்லும் சத்தியத்தை மட்டுமே நம்புகிறோம். வேதாகம வசனங்கள் சொல்லும் உண்மையை அன்றி சுய கருத்துக்களையோ சபைகளின் கோட்பாடுகளையோ நாங்கள் பேசுவதில்லை.
Disclaimer:
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா தேவ செய்திகளும் பாஸ்டர் ரசல் மற்றும் அவர்களோடிருந்த சகோதரர்களின் கட்டுரைகள் மற்றும் தேவ செய்திகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டவை. சில தமிழாக்கங்கள் “தேவ ஏற்பாடு” பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.
எந்த கட்டுரைகளிலும் எங்களது சொந்த கருத்துக்கள் இல்லை. ஏழு சபை கால கட்டத்திலும் யேசு கிறிஸ்து பரிசுத்தவான்கள் மூலம் வெளிப்படுத்திய நிகழ்கால வேதாகம சத்தியங்கள் மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
எங்களது ஐக்கியம்
நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
நாங்கள் வேதாகம சத்தியங்களை ஆழ்ந்து படிக்கும் சத்தியத்திற்காக நிற்கும், எளிமையான சகோதரர்களின் ஐக்கியமாக சத்தியத்தின்படி இயங்கும் ஒரு இயக்கமாக இருக்கிறோம். எந்த ஒரு மானிட ஸ்தாபனத்தையோ நாசியில் சுவாசமுள்ள எந்த ஒரு மனிதனையோ உயர்த்தாது, வேத சத்தியத்தையே உயர்த்தி மகிமைப் படுத்துகிற ( 2 தீமோ 4: 3-5 ) சபை பாகுபாடு அற்ற கொள்கை பிரிவு அற்ற ஒரு ஐக்கியமாக இருக்கிறோம். ( 1 தெசலோ 2: 3-5 )
இந்த ஐக்கியம் எந்தவொரு மனுஷருடைய கற்பனைகளாலும், நிர்வாக ஒழுங்குகளினாலும் கட்டுப்பட்டிருக்காது ( மத்தேயு 15:9 ), தேவ தீர்மானத்தைப் பற்றிய சத்திய அறிவினால் ஈர்க்கப்பட்டு (மத்தேயு 24:28 ) இருதயத்தில் சுயமாய் ஒருமைப்பட்ட ( எபே 4:3 ,பிலிப் 2:2 ) ஆவியின் இயக்கமாகும். ( யாக் 1:25 )
இதற்கும் வேறெந்த மார்க்க பேத வகுப்பாருக்கும், இயக்கங்கள், கூட்டங்களுக்கும் ஒருவித சம்பந்தமும் கிடையாது
இது பிற உலக தத்துவ வெளிச்சத்தை கொண்டல்லாது, தேவனுடைய வெளிச்சத்தையே கொண்டு தேவனுடைய தீர்மானங்களைப் பற்றிய கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய ஏற்பாட்டின் வெளிச்சத்தைக் கண்டு கொள்ள உதவி செய்கிறது. ( சங் 36:9; எபே 3:9-11; ஆப 2:2 )
இந்த இயக்கம் பரலோக ராஜ்யத்துக்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டு தேறினவனாய் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக் கொடுகிற வீட்டெஜமானுக்கு ஒப்பாயிருக்கிறது. ( மத்தேயு 13: 52 )
தேவனுடைய வார்த்தைகள் விதைக்கப்பட்ட வயலாகிய கிறிஸ்தவ மண்டலத்தில், சத்துரு விதைத்த விதைகளால் செழித்து வளர்ந்திருக்கும் தப்பறைகளை உணர்த்தி வருகிறோம். கிறிஸ்துவின் ராஜ்ஜியம் பூமியில் ஸ்தாபிக்கப்படுவது பற்றிய நிகழ்கால சத்தியத்திற்கு சாட்சி கூறியும் ( மத் 6:10; ஏசா 2:2; வெளி 21:3), வரவிருக்கும் அர்மகெதொன் யுத்தம் பற்றி எச்சரித்தும் வருகிறோம் (வெளி 16:16,13 ), இது சத்தியத்திற்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு அழைப்பு கொடுத்து தொனிக்கிற எக்காளமாகவும் இருக்கிறது. ( வெளி 18:4; ஏசா 52:11; எரே 51:6 )
பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். -Rev 18:4