Basic Articles

இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் மற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறும் கிறிஸ்தவ நண்பரே, கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் பண்டிகை என்று கூறி வாழ்த்து சொல்கிறீர்களே, உலகத்துக்கு என்ன வாழ்த்துதலை சொல்கிறீர்கள்?

கிறிஸ்து பிறந்து விட்டார் ஆகவே உலகத்துக்கு மிகுந்த சமாதானம் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம் என்று கூறுகிறீர்களா? ஆனால் கிறிஸ்தவ சபை கோட்பாடுகள் போதனைகள் என்ன சொல்கிறது? கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நரக வேதனை என்றும், ஏற்றுக் கொள்ளும் கிறிஸ்தவர்கள் மட்டுமே பரலோகம் செல்வார்கள் என்றும் சொல்கிறார்களே. ஒரு சிறு கூட்டமான பரிசுத்தவான்கள் மட்டும் பரலோகம் சென்றுவிடுவார்கள், பூமி முழுவதும் அக்கினியால் அழிக்கப்படும் என்றால் அது சமாதானமான செய்தியா? அது எல்லா ஜனத்துக்கும் சந்தோஷமான செய்தியா?

ஆனால் வேதாகமத்தில் யேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.” (லூக்கா 2:10) என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இன்றைய கிறிஸ்தவர்கள் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் இந்த நற்செய்தியை அறிவிக்காமல், இந்த உலகில் கிறிஸ்துவை அறியாதவர்கள் புற மதத்தவர் எல்லோரும் உயிர்த்தெழுப்பப்பட்டு வேதனையை அனுபவிக்க நரகத் தீயில் தள்ளப்படுவார்கள் என்று தவறான போதனையை பரப்புகிறார்கள்.

“ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” – 1 கொரி 15:22. மரணத்தில் இருந்து எழுப்புவது அவர்களை திருத்தி தம்மிடம் கூட்டிச் சேர்க்கவே, “அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி,...” - 2 கொரி 5:19 

உயிர்த்தெழுந்தபின் தீமையை வெறுக்கவும் நீதியாய் நடக்கவும் கிறிஸ்துவின் ஆளுகையில் கற்றுக் கொள்வார்கள். உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” – ஏசாயா 26:9  

நியாயத்தீர்ப்பு நாளான கிறிஸ்துவின் நாள் என்று சொல்லப்படும் அவரது ஆளுகையில் பூமியின் ஜனங்கள் எல்லோரும் உண்மையான ரட்சகரை கண்டுகொண்டு அவரிடம் வருவார்கள். தீமையான காரியங்கள் உடனே தண்டிக்கப்படுவதால் அநியாயம் குறைந்து இல்லாமல் போகும். மனுக்குலம் முழுவதும் ஒரே ராஜாவின் கீழ் ஒரே நீதியான ராஜ்யத்தில் மிகுந்த ஆசீர்வாதத்துடன் இருக்கும். 

“கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்

 

அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” – ஏசாயா 2:2, 4

ஆகவே வேதாகமம் நியாயத்தீர்ப்பு நாளில் மனுக்குலம் முழுவதும் நீதியில் வளர, கிறிஸ்துவிடம் சேர்க்கப்பட இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருப்பதை பற்றி கூறுகிறது. 

 “பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது. பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.  சங்கீதம் 98:3, 4  

 

இந்த பூமியில் நியாயத்தீர்ப்பு நடைபெறும் நாட்களில் பூமி தீமைகள் அற்று செழிப்புடன் இருக்கும் என்று கூறுகிறது. இப்பொழுது பரலோகத்தில் கடவுளின் சித்தம் செயல்படுவது போல பூமியிலும் அவருடைய சித்தத்தின் படியே காரியங்கள் நடக்கும். இதற்காக ஜெபிக்க நமது ரட்சகர் யேசு கிறிஸ்துவும் கற்றுக் கொடுத்திருக்கிறார். “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” மத்தேயு 6:10

 

துன்மார்க்கரின் முடிவு என்ன?

ஆயினும் ஆயிரவருட அரசாட்சியில் முற்றிலும் திருந்தாத, கபடுள்ளவர்கள் நியாயத்தீர்ப்பு காலத்தின்  இறுதியில் இரண்டாம் மரணத்துக்குள் போவார்கள், அதாவது நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள். இது நித்தியமான அழிவு, மாறாக நித்திய வேதனை அல்ல. நித்தியமாக அவர்களை எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் நரகத்தில் உயிரோடு வைத்துக் கொண்டிருக்க அவசியம் இல்லை. தேவனும் துன்மார்க்கன் நித்தியமாய் இருக்க அனுமதிக்கவில்லை. கீழ்ப்படிகிறவர்களுக்கு கிறிஸ்துவின் மூலம் நித்திய ஜீவன், கீழ்ப்படியாதவர்களுக்கு பாவத்திற்கான தண்டனை மரணம் என்று வேதாகமம் தெளிவாக சொல்கிறது.

“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” – எசேக்கியேல் 18:4

“பாவத்தின் சம்பளம் மரணம்.” 

தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்”. - ரோமர் 6:23 இந்த வரத்தை துன்மார்க்கனுக்கு தேவன் கொடுப்பதில்லை. 

இந்த தீமைகள், பாவம் நுழைய காரணமான சாத்தானையே தேவன் நிரந்தரமாக அழிக்கப் போகிறார். ஆகவே துன்மார்க்கரும் அவனோடு சேர்ந்து அழிந்து, இனி ஒருபோதும் இருக்கப் போவதில்லை. (அக்னி = அழிவு , நித்திய அக்கினி = நிரந்தர அழிவு )

“மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,” எபிரெயர் 2:14

“இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார்” – எசேக்கியேல் 28: 14, 19

 

பூரண நீதியும் பூரண அன்பும் கொண்ட கடவுள்:

நித்தியமாய் வதைத்துக் கொண்டிருக்க அவர் கொடூர மனம் கொண்டவர் அல்ல. நமது வல்லமையுள்ள தேவன் அன்பாகவே இருக்கிறார். மற்றும் பூரண நீதியுள்ளவராகவும் ஞானமுள்ளவராகவும் இருக்கிறார்.

“ துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” - எசேக்கியேல் 18:23  

“எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.1 தீமோ 2:4  

இந்த நீதியான ஞானமுள்ள தேவனுடைய திட்டம் எவ்வளவு அருமையாக சந்தோஷத்தை கொடுக்க கூடியதாக இருக்கிறது! உண்மையாகவே இது எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் நற்செய்தி.

 

தவறான போதனைகள் எப்படி வந்தது?

ஆனால் ஆதி சபையில் அப்போஸ்தலர்கள் நித்திரையடைந்த பின், யேசு கிறிஸ்து எச்சரித்தது போலவே சாத்தான் வேதாகமத்தில் சொல்லப்படாத தவறான போதனைகளை கிறிஸ்தவ மண்டலத்தில் விதைத்து விட்டான். 

“ மனுஷர் நித்திரைபண்ணுகையில் (but while men slept, )அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.மத்தேயு 13:25

சாத்தானின் நரக உபதேசம் , மனிதர்கள் இறந்த பின்னும் ஆவியாக இருத்தல், உலகம் அக்கினியில் அழிந்து போதல் போன்ற தவறான கோட்பாடுகள்  கடவுளின் குணத்தை கீழ்த்தரமாக, கொடூரமாக சித்தரிக்கிறது. மேலும் வேதாகமத்தில் உள்ள தேவ திட்டத்தை புரிந்து கொள்ள முடியாதபடி, கிறிஸ்தவர்களை குழப்பத்தில் வைப்பதற்கே சாத்தான் இந்த தவறுகளை விதைத்திருக்கிறான். வேதாகமத்தில் இல்லாத, தேவனை தூஷிக்கும் இந்த தவறான போதனைகளை  இன்று கிறிஸ்தவ சபைகள் பிரசங்கித்துக் கொண்டிருக்கின்றன.

ஆகவே சாத்தானின் தவறான உபதேசங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவராக நீங்கள் இராதபடி விழித்து கொண்டு சத்தியத்தை கண்டு கொண்டு குழப்பத்தில் (பாபிலோன் அடையாளப்படுத்தும் கிறிஸ்தவ மண்டலம்.) இருந்து வெளியே வாருங்கள்.

“ என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”– வெளி 18:4  

✡✡✡✡✡✡✡



மேலும் பல சத்தியங்களை விளக்கும் பிரதிகள் உள்ளன:

மரணம் என்றால் என்ன?

ஆத்துமா என்றால் என்ன?

நரகம் என்றால் என்ன?

இறந்துபோனவர்கள் மீண்டும் வருவார்களா?

அன்பின் கடவுள் தீமையை ஏன் அனுமதிக்கிறார்?

ஜெயிப்பது கடவுளா, சாத்தானா?

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

பூமியில் தேவனுடைய ராஜ்ஜியம்

நியாயத்தீர்ப்பு நாள் என்பது என்ன?

இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் மற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறும் கிறிஸ்தவ நண்பரே, கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் பண்டிகை என்று கூறி வாழ்த்து சொல்கிறீர்களே, உலகத்துக்கு என்ன வாழ்த்துதலை சொல்கிறீர்கள்?

கிறிஸ்து பிறந்து விட்டார் ஆகவே உலகத்துக்கு மிகுந்த சமாதானம் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோசம் என்று கூறுகிறீர்களா? ஆனால் கிறிஸ்தவ சபை கோட்பாடுகள் போதனைகள் என்ன சொல்கிறது? கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நரக வேதனை என்றும், ஏற்றுக் கொள்ளும் கிறிஸ்தவர்கள் மட்டுமே பரலோகம் செல்வார்கள் என்றும் சொல்கிறார்களே. ஒரு சிறு கூட்டமான பரிசுத்தவான்கள் மட்டும் பரலோகம் சென்றுவிடுவார்கள், பூமி முழுவதும் அக்கினியால் அழிக்கப்படும் என்றால் அது சமாதானமான செய்தியா? அது எல்லா ஜனத்துக்கும் சந்தோஷமான செய்தியா?

ஆனால் வேதாகமத்தில் யேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.” (லூக்கா 2:10) என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இன்றைய கிறிஸ்தவர்கள் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் இந்த நற்செய்தியை அறிவிக்காமல், இந்த உலகில் கிறிஸ்துவை அறியாதவர்கள் புற மதத்தவர் எல்லோரும் உயிர்த்தெழுப்பப்பட்டு வேதனையை அனுபவிக்க நரகத் தீயில் தள்ளப்படுவார்கள் என்று தவறான போதனையை பரப்புகிறார்கள்.

“ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” – 1 கொரி 15:22. மரணத்தில் இருந்து எழுப்புவது அவர்களை திருத்தி தம்மிடம் கூட்டிச் சேர்க்கவே, “அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி,...” - 2 கொரி 5:19 

உயிர்த்தெழுந்தபின் தீமையை வெறுக்கவும் நீதியாய் நடக்கவும் கிறிஸ்துவின் ஆளுகையில் கற்றுக் கொள்வார்கள். உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.” – ஏசாயா 26:9  

நியாயத்தீர்ப்பு நாளான கிறிஸ்துவின் நாள் என்று சொல்லப்படும் அவரது ஆளுகையில் பூமியின் ஜனங்கள் எல்லோரும் உண்மையான ரட்சகரை கண்டுகொண்டு அவரிடம் வருவார்கள். தீமையான காரியங்கள் உடனே தண்டிக்கப்படுவதால் அநியாயம் குறைந்து இல்லாமல் போகும். மனுக்குலம் முழுவதும் ஒரே ராஜாவின் கீழ் ஒரே நீதியான ராஜ்யத்தில் மிகுந்த ஆசீர்வாதத்துடன் இருக்கும். 

“கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்

 

அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” – ஏசாயா 2:2, 4

ஆகவே வேதாகமம் நியாயத்தீர்ப்பு நாளில் மனுக்குலம் முழுவதும் நீதியில் வளர, கிறிஸ்துவிடம் சேர்க்கப்பட இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருப்பதை பற்றி கூறுகிறது. 

 “பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது. பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.  சங்கீதம் 98:3, 4  

 

இந்த பூமியில் நியாயத்தீர்ப்பு நடைபெறும் நாட்களில் பூமி தீமைகள் அற்று செழிப்புடன் இருக்கும் என்று கூறுகிறது. இப்பொழுது பரலோகத்தில் கடவுளின் சித்தம் செயல்படுவது போல பூமியிலும் அவருடைய சித்தத்தின் படியே காரியங்கள் நடக்கும். இதற்காக ஜெபிக்க நமது ரட்சகர் யேசு கிறிஸ்துவும் கற்றுக் கொடுத்திருக்கிறார். “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” மத்தேயு 6:10

 

துன்மார்க்கரின் முடிவு என்ன?

ஆயினும் ஆயிரவருட அரசாட்சியில் முற்றிலும் திருந்தாத, கபடுள்ளவர்கள் நியாயத்தீர்ப்பு காலத்தின்  இறுதியில் இரண்டாம் மரணத்துக்குள் போவார்கள், அதாவது நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள். இது நித்தியமான அழிவு, மாறாக நித்திய வேதனை அல்ல. நித்தியமாக அவர்களை எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் நரகத்தில் உயிரோடு வைத்துக் கொண்டிருக்க அவசியம் இல்லை. தேவனும் துன்மார்க்கன் நித்தியமாய் இருக்க அனுமதிக்கவில்லை. கீழ்ப்படிகிறவர்களுக்கு கிறிஸ்துவின் மூலம் நித்திய ஜீவன், கீழ்ப்படியாதவர்களுக்கு பாவத்திற்கான தண்டனை மரணம் என்று வேதாகமம் தெளிவாக சொல்கிறது.

“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” – எசேக்கியேல் 18:4

“பாவத்தின் சம்பளம் மரணம்.” 

தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்”. - ரோமர் 6:23 இந்த வரத்தை துன்மார்க்கனுக்கு தேவன் கொடுப்பதில்லை. 

இந்த தீமைகள், பாவம் நுழைய காரணமான சாத்தானையே தேவன் நிரந்தரமாக அழிக்கப் போகிறார். ஆகவே துன்மார்க்கரும் அவனோடு சேர்ந்து அழிந்து, இனி ஒருபோதும் இருக்கப் போவதில்லை. (அக்னி = அழிவு , நித்திய அக்கினி = நிரந்தர அழிவு )

“மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,” எபிரெயர் 2:14

“இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார்” – எசேக்கியேல் 28: 14, 19

 

பூரண நீதியும் பூரண அன்பும் கொண்ட கடவுள்:

நித்தியமாய் வதைத்துக் கொண்டிருக்க அவர் கொடூர மனம் கொண்டவர் அல்ல. நமது வல்லமையுள்ள தேவன் அன்பாகவே இருக்கிறார். மற்றும் பூரண நீதியுள்ளவராகவும் ஞானமுள்ளவராகவும் இருக்கிறார்.

“ துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” - எசேக்கியேல் 18:23  

“எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.1 தீமோ 2:4  

இந்த நீதியான ஞானமுள்ள தேவனுடைய திட்டம் எவ்வளவு அருமையாக சந்தோஷத்தை கொடுக்க கூடியதாக இருக்கிறது! உண்மையாகவே இது எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் நற்செய்தி.

 

தவறான போதனைகள் எப்படி வந்தது?

ஆனால் ஆதி சபையில் அப்போஸ்தலர்கள் நித்திரையடைந்த பின், யேசு கிறிஸ்து எச்சரித்தது போலவே சாத்தான் வேதாகமத்தில் சொல்லப்படாத தவறான போதனைகளை கிறிஸ்தவ மண்டலத்தில் விதைத்து விட்டான். 

“ மனுஷர் நித்திரைபண்ணுகையில் (but while men slept, )அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.மத்தேயு 13:25

சாத்தானின் நரக உபதேசம் , மனிதர்கள் இறந்த பின்னும் ஆவியாக இருத்தல், உலகம் அக்கினியில் அழிந்து போதல் போன்ற தவறான கோட்பாடுகள்  கடவுளின் குணத்தை கீழ்த்தரமாக, கொடூரமாக சித்தரிக்கிறது. மேலும் வேதாகமத்தில் உள்ள தேவ திட்டத்தை புரிந்து கொள்ள முடியாதபடி, கிறிஸ்தவர்களை குழப்பத்தில் வைப்பதற்கே சாத்தான் இந்த தவறுகளை விதைத்திருக்கிறான். வேதாகமத்தில் இல்லாத, தேவனை தூஷிக்கும் இந்த தவறான போதனைகளை  இன்று கிறிஸ்தவ சபைகள் பிரசங்கித்துக் கொண்டிருக்கின்றன.

ஆகவே சாத்தானின் தவறான உபதேசங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவராக நீங்கள் இராதபடி விழித்து கொண்டு சத்தியத்தை கண்டு கொண்டு குழப்பத்தில் (பாபிலோன் அடையாளப்படுத்தும் கிறிஸ்தவ மண்டலம்.) இருந்து வெளியே வாருங்கள்.

“ என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”– வெளி 18:4  

✡✡✡✡✡✡✡



மேலும் பல சத்தியங்களை விளக்கும் பிரதிகள் உள்ளன:

மரணம் என்றால் என்ன?

ஆத்துமா என்றால் என்ன?

நரகம் என்றால் என்ன?

இறந்துபோனவர்கள் மீண்டும் வருவார்களா?

அன்பின் கடவுள் தீமையை ஏன் அனுமதிக்கிறார்?

ஜெயிப்பது கடவுளா, சாத்தானா?

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

பூமியில் தேவனுடைய ராஜ்ஜியம்

நியாயத்தீர்ப்பு நாள் என்பது என்ன?

“அவர்‌ அவர்கள்‌ ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக்‌ காக்கவில்லை" (சங்‌.78:50)

 

  1. சரீரம்‌ சாகிறதென்பதும்‌, அது தொடர்ச்சியாய்‌ திரும்பத்‌ திரும்பப்‌ போஷிக்கப்பட வேண்டியதாயிருக்கிறதென்பதும்‌, ஆகவே அது

சாவாமையாகிய (Immortality) அழியாமையையுடையதாயிருக்க முடி

யாதென்பதும்‌ யாவரும்‌ அறிந்த விஷயங்களே. வேதவாக்கியங்கள்‌

ஆத்துமாக்களைப்‌ பற்றி அடிக்கடி தெரிவிக்கின்றன. இந்த ஆத்துமா

அழிக்கப்படக்‌ கூடாததாயிருக்கலாமோ? ஓர்‌ ஆத்துமாவை உண்டு

பண்ணின தேவன்‌ அதை அழிக்க முடியாதவராயிருக்கலாமோ?

என கேள்விகள்‌ அநேகருக்குள்‌ எழும்புகின்றன.

 

  1. ஓவ்வொரு பிராணியின்‌ ஜீவனும்‌ சிருஷ்டிகரின்‌ சித்தத்திற்குக்‌

கீழ்ப்பட்டதாயிருக்கிறதென்று நம்மிலுள்ள நீதி நியாயமே நமக்குத்‌

தெரிவிக்கிறது. ஆத்துமா சாவாமையாகிய (Immortality) அழியாமை

யுடையதென்று வேதபுத்தகம்‌ போதிக்கிறதென சிலர்‌ எண்ணுகிறார்‌

கள்‌. அது தப்பிதம்‌. வேத புத்தக மொழிபெயர்ப்புகளிலாவது பூர்வீக

மூல பாஷை எழுத்துக்களிலாவது ஆத்துமா சாகக்கூடாதென

ஓரிடத்திலும்‌ சொல்லப்படவில்லையென்பதை நாம்‌ திட்டமாய்‌ அறி

வோமாக. ஆத்துமா சாகக்கூடாதென்று வேதபுத்தகம்‌ சொல்லாமல்‌

“தேவன்‌ ஆத்துமாவையும்‌ சரீரத்தையும்‌ அழிக்கவல்லவர்‌” என்றும்‌,

“பாவம்‌ செய்கிற ஆத்துமாவே சாகும்‌” என்றும்‌ தெளிவாய்க்‌ கூறுகி

றது. மத்‌. 10:28; எசேக்‌, 18:4,20.

 

  1. சாகவும்‌ அழிக்கப்படவும்‌ கூடியது சாவாமையாகிய அழியாமை

யுடையதல்ல. ஆகவே அத்துமாக்களும்‌ சரீரங்களும்‌ சாவாமையா

கிய அழியாமையுடையவைகளல்ல. அவைகள்‌ சாகவும்‌

அழிக்கப்பட்வும்‌ கூடியவை (Mortal) என்பதே வேதோபதேசம்‌.

 

ஆத்துமாக்களைப்‌ பற்றிய தவறான கருத்துக்கள்‌

 

  1. அப்படியானால்‌, ஆத்துமா என்றால்‌ என்ன? அது சொல்லிக்‌

காட்ட முடியாததும்‌ நம்மில்‌ வாசஞ்‌ செய்கிறதுமான ஏதோ ஓன்று

என்பது ஆத்துமாவைக்‌ குறித்துள்ள பொதுவான அபிப்பிராயம்‌. ஆனால்‌ அது என்ன என்றும்‌, எந்த இடத்தில்‌ வைக்கப்பட்டிருக்‌கிறதென்றும்‌ விவரிக்க முயற்சி செய்கிறவர்கள்‌ சிலரே. அறியப்படாத இந்த ஏதோ ஓன்று, உண்மையில்‌ யுக்தி அறிவுள்ள ஆள்‌ என்றும்‌, சரீரமானது அதின்‌ வாசஸ்தலமும்‌ அது நடத்துகிற கருவியுமானது என்றும்‌ அநேகர்‌ தர்க்கிக்கிறது உண்டு.

 

  1. சிலர்‌ சொல்லுகிறபடி சரீரமானது ஆத்துமா அல்ல; இது உண்மையென, தேவன்‌ ஆத்துமாவையும்‌ சரீரத்தையும்‌ அழிக்கவல்‌லவர்‌ என்ற நமது கர்த்தருடைய வார்த்தைகள்‌ நிரூபிக்கின்றன. இப்போதும்‌ மனுஷ கோட்பாடுகளினால்‌ உண்டான தப்பெண்ணங்‌களை நமது மனதைவிட்டு அகற்றி மனுஷ சிருஷ்டியைப்‌ பற்றிவேதபுத்தகம்‌ சொல்லுவதை ஆராய்வேமானால்‌ இவ்விஷயத்தைக்‌குறித்து, நாம்‌ திட்டமும்‌ தீர்க்கமுமான அறிவை அடைவோம்‌.

 

மானிட ஆத்துமா எவ்வாறு படைக்கப்பட்டது ?

 

  1. ஆதி. 2:7ல்‌, தேவனாகிய கர்த்தர்‌ (பஹொவா) மனுஷனைப்‌ பூமியின்‌ மண்ணினாலே உருவாக்கி ஜீவ சுவாசத்தை (Heb: wind of lives- பூமியின்‌' மீதுள்ள சகல பிராணிகளும்‌ சுவாசிக்கின்றகாற்றை) அவன்‌ நாசியிலே ஊதினார்‌. (Heb: blem - சுவாசம்‌ ஆதாமின்‌ - சரீரத்துக்குள்‌ பிரவேசிக்கும்படி செய்தார்‌). மனுஷன்‌

ஜீவாத்துமாவானான்‌ [ஞானேந்திரிய (அறிவுள்ள உணர்ச்சியுள்ள) ஜீவி ஆனான்‌] என்று நாம்‌ வாசிக்கிறோம்‌.

 

  1. இவ்வாக்கியத்தின்படி. சரீரமானது. முதலில்‌ உண்டாக்கப்பட்டது. ஆனால்‌ அது உயிருள்ளதாகும்வரை ஓர்‌ ஆத்துமாவாகவோ ஓர்‌ ஆளாகவோ இருந்ததில்லை. அதற்குக்‌ கண்கள்‌ இருந்தும்‌ காணவில்லை, காதுகளிருந்தும்‌: கேட்கவில்லை, வாய்‌ இருந்தும்‌ பேசவில்லை, நாக்கிருந்தும்‌ ௬சி பார்க்கவில்லை, முக்கிருந்தும்‌ முகரவில்லை, இருதயமிருந்தும்‌ நாடி. துடிக்கவில்லை. இரத்தமிருந்‌தும்‌ அது குளிர்ந்து ஜீவனற்றிருந்தது. சுவாசகோசங்களிருந்தும்‌ (lungs) அவை அசையவில்லை. ஆகவே சரீரமானது மனுஷனாயி ராமல்‌ ஜீவனில்லாத சரீரமாய்‌ அதாவது ஓரு பீரேதத்துக்கு ஓப்பானதாயிருந்தது.

 

  1. மனுஷ சிருஷ்டிப்பில்‌ இரண்டாவதாக நடப்பிக்க வேண்டிய விஷயம்‌, தகுதியான பிரகாரமாய்‌ உருவாக்கப்பட்டு பூரணமாய்‌ பக்குவப்படுத்தப்பட்ட சரீரத்துக்கு உயிர்‌ கொடுப்பதேயாகும்‌. இச்‌செய்கை ஜீவசுவாசத்தை அவன்‌ நாசியிலே ஊதினார்‌ என்ற வார்த்தைகளில்‌ அடங்கியிருக்கிறது. சுகமுள்ள ஓரு ஆள்‌ தண்ணீ நில்‌ மூழ்கிய உயிர்‌ நீங்கின பின்பு கைகளைத்‌ தூக்கித்‌ தூக்கி மேலும்‌ கீழும்‌ இருபுறமும்‌ மாநி மாறி ஆட்டி அசைக்க சுவாசகோ

சங்கள்‌ துருத்திகள்‌ போல்‌ வேலை செய்து படிப்படியாய்‌ நாசியிலே சுவாசமுண்டாகி அம்மனுஷனுக்குத்‌ திரும்ப உயிர்‌ உண்டாகி பிழைத்துக்‌ கொள்கிறானென்று நாம்‌ அறிகிறோம்‌. ஆனால்‌ ஆதாமின்‌ "விஷயத்தில்‌ சிருஷ்டிகர்‌ உண்டு பண்ணின பரிபூரணமான சரீரத்தை ஜீவனுக்கு ஆதாரமான ஆகாயத்திலுள்ஷ பிராண வாயுவைசுவாசிக்கச்‌ செய்வதற்கு அவர்‌ அவ்வளவு கஷ்டமான பிரயாசை எடுக்க வேண்டியதிருந்திருக்காது.

 

  1. ஜீவனுக்காதாரமான சுவாசம்‌ உட்பிரவேசித்ததும்‌ சுவாசகோசங்‌கள்‌ விரிந்து இரத்த அணுக்கள்‌ பிராணவாயுவை அடைந்து இரத்தாசுயத்துக்குள்‌ (Heart) சென்றன. அது முறையே சரீரத்தின்‌ ஒவ்வொரு பாகத்துக்கும்‌ அவைகளைப்‌ போகும்படி செய்து, முன்பே உண்டாக்‌கப்பட்டு அசைவற்றிருந்த நரம்புகளெல்லாம்‌ கிரியை செய்ய ஆரம்‌பித்து உணர்ச்சியையும்‌ ஊக்கத்தையுமடைந்தன. இச்சக்தி அதாவது இந்த உணர்ச்சியும்‌ ஊக்கமும்‌ க்ஷணப்‌ பொழுதில்‌ மூளைக்குத்‌ தாவிவிடவே; எண்ணம்‌, அறிவு, யூகம்‌, பார்வை, கேட்கை, மோப்பம்‌, சுவை, பரிச அறிவு முதலியவைகளெல்லாம்‌ ஆரம்பித்துவிட்டன. ஜீவனற்ற மனுஷ சரீரமானது ஞானேந்திரிய (அறிவுள்ள) ஜீவியாகிய ஓரு மனுஷனாகி விட்டது. இவ்விதமாக ஆதி. 2:7ல்‌ சொல்லப்பட்ட நிலைமை வந்தெட்டி விட்டது. வேறு வகையாச்‌ சொல்ல வேண்டுமானால்‌, ஜீவாத்துமா என்ற வாசகம்‌ ஞானேந்திரிய (அறிவுள்ள,

உணர்ச்சியுள்ள ஜீவி) அதாவது உணர்ச்சி, அறிவு , எண்ணம்‌ முதலியவைகளுள்ள ஓரு ஆள்‌ என்ற சரியான கருத்தைக்‌கொடுக்கிறது.

 

  1. மேலும்‌ ஆதாம்‌ பூரண சரீரக்‌ கட்டுடையவனாயிருந்தாலும்‌ ஜீவனை அதாவது ஆத்துமாவாகிய ஞானேந்திரிய ஜீவியை நிலைக்‌கச்‌ செய்ய அவன்‌ ஜீவ விருட்சங்களின்‌ கனிகளைப்‌ புசிக்கவேண்டியது அவசியமாயிருந்தது. அவன்‌ பாவஞ்‌ செய்தபொழுது அவன்‌ தன்‌ கையை நீட்டி ஜீவ விருட்சங்களின்‌ (Heb: tree) கனிகளையும்‌ பறித்து தொடர்ச்சியாய்‌ புசித்து என்றென்றைக்கும்‌

உயிரோடிராதபடிக்குச்‌ செய்ய வேண்டுமென்று (ஆதி. 3:22) தேவன்‌ அவனை ஏதேனிலிருந்து துரத்தி விட்டார்‌. தேவனுடைய வசனத்‌திலிருந்து பிரகாசிக்கிற சத்தியமாகிய வெளிச்சத்திற்கு முன்‌ அசத்‌தியமும்‌ பொய்யுமாகிய அந்தகாரம்‌ நிலை நிற்காமல்‌ சிதறடிக்கப்படும்‌ வகையைக்‌ கவனியுங்கள்‌ !

 

தாழ்ந்த விலங்குகளும்‌ ஆத்துமாக்களே

 

  1. மேலும்‌ மற்ற ஜீவ பிராணிகளும்‌ வேத புத்தகத்தில்‌ ஆத்துமாக்‌கள்‌ என அழைக்கப்படுகின்றன. அவைகளும்‌ அறிவுள்ள பிராணிகளேயாயினும்‌ மனுஷனுக்குக்‌ குறைந்தபடியிலுள்ள அறிவுள்ளபிராணிகளாகும்‌. அவைகளுக்கும்‌ மனுஷனைப்‌ போல ஐம்புலன்களுண்டு; அவைகளும்‌ பார்க்கவும்‌ கேட்கவும்‌ பரிசிக்கவும்‌ ௬சிக்கவும்‌ முகரவும்‌ கூடும்‌; அவை ஓவ்வொன்றும்‌ தன்தன்‌ சரீரக்கட்டின்‌அளவுக்கேற்ப யூகித்தறியவும்‌ கூடும்‌; என்றாலும்‌ மனுஷனைப்‌ போல ஆழ்ந்த சிந்தனையோடும்‌ கருத்தோடும்‌ அவைகள்‌ யூகித்த நிய முடியாது. இந்த வித்தியாசம்‌ மற்ற ஜீவன்களுக்கிருக்கிற ஜீவனுக்கு வித்தியாசமான ஓர்‌ ஜீவன்‌ மனுஷனுக்கு உண்டு என்பதினால்‌ அல்ல. ஏனென்றால்‌ மனுஷனுட்பட எல்லா ஜீவப்பி

ராணிகளுமே, ஓரே ஜீவ ஊற்றாகிய சிருஷ்டிகரிடமிருந்தே ஓரேவித ஜீவசக்தியைப்‌ பெற்றிருக்கின்றன. ஓவ்வொன்றும்‌ தன்தன்‌ இனத்‌திற்குத்‌ தகுந்தபடி, இரத்தம்‌, மாம்சம்‌, எலும்பு முதலியவைகளை உண்டு பண்ணக்கூடிய ஓரேவித ஆகாரங்களை உண்டு, ஓரே விதமாகவே எல்லா ஜீவபிராணிகளும்‌ ஜீவனைத்‌ தங்களில்‌ நிலைக்‌கச்‌ செய்து கொள்ளுகின்றன. ஓவ்வொன்றும்‌ ஆதியில்‌ ' தேவனிடமிருந்து பெற்றவையையே தன்‌ சந்ததிக்குக்‌ கொடுத்து, தன்‌ தன்‌ இனத்தை, ஓரே விதமாகவே ஜெனிப்பிக்கின்றன; ஆனால்‌ அவை

கள்‌ உருவத்திலும்‌ மானத சக்தியிலும்‌ வித்தியாசப்படுகின்றன.

 

  1. மனுஷன்‌ ஓர்‌ அஆத்துமாவாக புத்தி சித்தமுள்ள பிராணியாக) இருக்கிறபடியால்‌, மிருகங்களுக்கு இந்த ஆத்தும தன்மை (அறிவு, எண்ணம்‌, உணர்ச்சி) இல்லையென்று சொல்லக்கூடாது. மனுஷனும்‌ மிருகமும்‌ ஆத்தும இலட்சணமுடையவைகள்‌. அதாவது மனுஷனும்‌ மிருகமும்‌ புத்தி சித்தமும்‌ உணர்ச்சியுமுள்ள பிராணிகள்‌. இது வேத போதனையாக மாத்திரமில்லாமல்‌, ஆத்துமா என்ற வார்த்தையின்‌ உண்மையான அர்த்தத்தை மேலே காட்டியபடி கிரகித்துக்‌ கொண்‌டால்‌, இது சத்தியமென்று உடனே அறிந்து கொள்ளக்கூடியதூகும்‌. இதைப்‌ பின்வருமாறு விளக்கிக்‌ காட்டுகிறோம்‌.

 

  1. ஓர்‌ பூரணமான நாய்‌ சிருஷ்டிக்கப்படுவதாகவும்‌ அது ஆதாமுடைய சிருஷ்டியைப்‌ போல்‌ விசேஷித்து வருணிக்கப்படுவதாகவும்‌ வைத்துக்கொள்வோம்‌. அந்த வருணனையில்‌ என்ன வித்தியாசம்‌ காணப்படும்‌? ஓரு வித்தியாசமுமிராது. மண்ணினாலே நாயின்‌ சரீரத்தை உண்டுபண்ணி (ஆதி 2:19) ஊக்கமும்‌ உற்சாகமுமுடைய ஜீவசுவாசமானது அந்த நாயின்‌ சரீரத்திற்குள்‌ செலுத்தப்படும்‌ வரைக்கும்‌, அச்சரீரமானது ஓர்‌ நாயாயிருக்க முடியாது. ஆதாம்‌ ஜீவனைப்‌ பெற்றதும்‌ தனக்குரிய எல்லாவித அறிவுகளோடும்‌ சக்‌திகளோடும்‌ ஜீவபிராணி ஆனது போல்‌, நாயும்‌ தனக்குரிய அறிவுகளோடும்‌ ஓர்‌ ஜீவபிராணி ஆனது. ஆதாம்‌ மாம்ச பிராணிகளுக்குள்ளே மகா உயர்வான நிலைமைக்குரிய ஜீவ ஆத்‌துமா; நாயோ ஓர்‌ தாழ்வான நிலைமைக்குரிய ஜீவ ஆத்துமா. மகாஉயர்வான நிலைமைக்குரிய ஜீவ ஆத்துமாவே மனுஷன்‌ என்பது வெளிப்படையான (ஆகேஷபிக்கக்கூடாத) சத்தியமாகிறது. எனவே பிராணன்‌ உள்ள அனைத்தும்‌ ஆத்துமாக்களே.

 

வேத அத்தாட்சி

 

  1. இதற்கு வேத சாட்சியும்‌ ஓத்திருக்கிறது. (எபிரேய ஆதியாகமத்‌தில்‌ ஆத்துமா என்ற அர்த்தத்தையுடைய neh-phesh என்ற எபிரேய பதம்‌ 9 வாக்கியங்களில்‌ தாழ்வான பிராணிகளின்‌ சம்பந்தமாய்‌ உபயோகிக்கப்பட்டி ருக்கிறது; அவை ஜீவாத்துமாக்கள்‌ என அழைக்‌கப்படுகின்றன (ஆதி. 1:20, 21, 24, 80; 2:19, 9, 8, 4, 10, 12) எண்‌ 31:28இல்‌ பிராணி என்ற பதம்‌ மூல பாஷையின்படி ஆத்துமா என்று வாசிக்கப்பட வேண்டும்‌ (இங்கிலீஷ்‌ பைபில்‌ காண்ஜு வெளி.63 “சமுத்திரத்திலுள்ள எல்லா பிராணிகள்‌ யாவும்‌ மாண்டுபோ பினா என்பதற்கு ஆங்கிலத்தில்‌ “every living soul died in the sea” (KJV)என்று கொடுக்கப்பட்டிருக்கிறதையம்‌ பாருங்கள்‌. ஆகவே வேத புத்தகம்‌, தாழ்வான பிராணிகளையும்‌ ஆத்துமாக்கள்‌ என அழைக்கிறதை அறிகிறோம்‌.

 

  1. மனுஷனிலுள்ள ஜீவனைப்‌ பற்றிய நியமத்துக்கும்‌, மீன்‌ வாக்கம்‌ நீங்கலாக நாசியின்‌ வழியாய்‌ சுவாசிக்கிற மற்றெல்லா ஜீவ பிராணிகளிலுமுள்ள ஜீவனைப்‌ பற்றிய நியமத்துக்கும்‌ யாதொரு வித்தியாச முமில்லையென்ற போதனை, ஐலப்பிரளயத்தினாலுண்டான அழிவைப்‌ பற்றிய சரித்திரத்தில்‌ போதிக்கப்படுகிறது (ஆதி. 6 (7:7:15:22) மனுஷர்களுக்கும்‌ மிருகங்களுக்கும்‌ ஓரே விதமான சுவாசம்‌ (Heb; ruach-spirit of life) அதாவது ஓரே விதமான ஜீவன்‌ உண்டு என்றும்‌, மிருகங்கள்‌ சாகிறதுபோலவே மனுஷர்களும்‌ சாகிறார்களென்றும்‌ சாலொமோன்‌ ராஜா சொல்லும்‌ வார்த்தைகள்‌ (பிர. 9:19) இதற்கு முழுவதும்‌ ஓத்திருக்கிறது. “உயர ஏறும்‌ மனுஷனுடைய ஆவியையும்‌ அறிகிறவன்‌ யார்‌?”  என்று அவர்‌ கேள்வி கேட்டு (பிர. 3:21) புற -மதஸ்தரின்‌ கொள்கையை ஆட்சே

பித்துப்‌ பேசுகிறார்‌. “மனுஷன்‌ சாகிறதுபோல தோன்றுகிறானேயன்றி உண்மையில்‌ அவன்‌ சாகிறதில்லையென்றும்‌, அவனுக்குள்‌ சாகா வஸ்து ஓன்றிருக்கிறதென்றும்‌* அக்காலத்திலும்‌ புறமதஸ்தர்‌ எண்ணி வந்திருக்கிறார்கள்‌. அப்படிப்பட்ட விஷயத்துக்கு ஏதாவது ரூபகாரம்‌ அதாவது மெய்யறிவு உண்டானால்‌ தம்மோடு விவகாரம்‌ நடத்தும்படி. சாலோமோன்‌ ஞானி அழைக்கிறார்‌. பிர. 3:19, 20ம்‌ வாக்கியங்களில்‌ இவ்விஷயத்தைப்‌ பற்றியுள்ள சத்தியத்தை (உண்‌மையை) அவர்‌ விளக்கிக்‌ காட்டின பின்பு, 21ம்‌ வாக்கியத்திலுள்ள கேள்வியைக்‌ கேட்டு. அதிலுள்ள விஷயத்திற்குத்‌ தகுந்த ரூபகாரங்‌கள்‌ கொடுக்கவோ அல்லது அவர்களிடத்தில்‌ அப்படிப்பட்ட மெய்‌யறிவு இல்லையென்று ஓப்புக்கொள்ளவோ அவர்‌ அக்கொள்கையையுடையவர்களை அழைக்கிறார்‌.

 

  1. ஆதாம்‌ சிருஷ்டிக்கப்பட்ட பொழுது ஓர்‌ சரீரத்தோடு ஜீவசுவா௪ம்‌ சேர்க்கப்பட்டதின்‌ பலனாக ஞானேந்திரிய (உணர்ச்சி அறிவு உள்ள) ஜீவியாகிய ஆத்துமா உண்டானபடியால்‌, எந்தவொரு காரணத்தினாலாவது இவை இரண்டும்‌ (சரீரமும்‌ ஜீவவிசுவாசமும்‌) வெவ்வேறாகப்‌ பிரிக்கப்படுமாயின்‌, எல்லாவிதமான அறிவும்‌ நினைவும்‌ உணர்ச்சிகளும்‌ ஓழிந்து, ஞானேந்திரிய ஜீவியாகிய ஆத்துமாவுக்கு அழிவு வரும்‌.. ஆத்துமா (ஞானேந்திரிய ஜீவியாகிய புத்திசித்தமுள்ள ஆள்‌) அழிந்து போகிறது. இவ்விதமாக சரீரமானது தான்‌முன்னிருந்த மண்ணுக்குத்‌ திரும்புகிறது. ஆவியாகிய ஜீவவிசுவா௪மோ ஆதாமுக்கும்‌ அவன்‌ மூலமாய்‌ அவன்‌ சந்ததிக்கும்‌ தன்னைக்‌கொடுத்த தேவனிடத்திற்குத்‌ திரும்புகிறது (பிர. 12:7). அது மனுஷ

சிருஷ்டி.ப்புக்கு முன்னிருந்ததுபோல, மனுஷனின்‌ அதிகாரத்திற்குள்‌ இனி கட்டுப்பட்டிருக்கவில்லை என்ற கருத்தில்‌ அது தேவனிடத்‌திற்குத்‌ திரும்புகிறது. தேவவல்லமையினார்லன்றி வேறெவ்விதத்தினாலும்‌ அது திரும்பவும்‌ முன்போல சரீரத்தோடு சேர்ந்து ஓருக்காலும்‌ ஓர்‌ ஆத்துமாவாக (ஓர்‌ ஆளாக) முடியாது.

 

மனிதனுடைய மேலான உடலமைப்பு

 

  1. மனுஷனுக்கும்‌ மிருகத்துக்குமுள்ள பெரிய வித்தியாசம்‌ இரண்‌டையும்‌ கிரியை செய்யப்‌ பண்ணுகிற ஜீவனிலும்‌, இரண்டுக்குமுரியஆத்ம சக்தியின்‌ ஏற்றத்‌ தாழ்விலுமிருக்கிறதென்று சொல்லமுடியா தெனில்‌, வித்தியாசம்‌ அவைகளுடைய சரீரங்களில்‌ இருக்கக்கூடியதாகுமோ? ஆம்‌, மெய்யாகவே அப்படியேதான்‌. இயல்பான வித்தியாசம்‌. -சட்த்துவமானதே; அதாவது சரீர அமைப்பு வகையிலுள்ளது. அதோடு, தேவன்‌ தமது வாக்குத்தத்தங்களில்‌ வெளியிட்‌டிருக்கிறபடி, மனுஷனுடைய பிற்கால ஜீவியத்திற்காக ஓர்‌ ஏற்பாடு உண்டு பண்ணியிருக்கிறார்‌. மிருகங்களுக்கோ அப்படிப்‌பட்ட பிற்கால ஜீவியத்திற்கான நியமமெதுவும்‌ தேவனால்‌ ஏற்படுத்‌தப்படவுமில்லை; அவைகள்‌ மானத சாஸ்திரத்தைக்‌ கிரகித்தறிந்து கொள்ளத்‌ தகுதியான உறுப்டோடு அமைக்கப்படவுமில்லை.

 

  1. மூளையின்‌ பருப்பமும்‌ எடையும்‌ சாமர்த்தியத்தையும்‌, புத்தி கூர்மையையும்‌ வெளிப்படுத்திக்‌ காட்டுகின்றன. இவ்விஷயத்தில்‌ சிருஷ்டி கர்த்தாவாகிய தேவன்‌ .மிருகத்தைப்‌ பார்க்கிலும்‌ மனுஷனை எவ்வளவோ மேலான வகையாய்‌ வரப்பிரசாதமுள்ளவனாக்‌கியிருக்கிறார்‌. மிருகமானது மனுஷனைப்‌ பார்க்கிலும்‌ மிகக்‌குறைந்த மூளையுடையது. அதின்‌ மூளையானது கொஞ்சங்‌ குறைய முற்றிலும்‌ தன்னயம்‌ பார்க்கிற குணத்திற்குரியதாயிருக்கிறது. நியாயம்‌, அநியாயம்‌ ஆகிய இவற்றை கிரகித்தறியக்கூடிய சக்தி அதற்கு இல்லாதிருக்கிறது. நல்லறிவும்‌ சன்மார்க்கமுமாகிய நீதிநெறிகளிலும்‌ இயற்கையிலும்‌ விளங்கும்‌ மாட்சிமைகளை அது கிரகித்தறிந்து உணர முடியாது. சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன்‌ அவ்வித மூளைக்‌சக்தியை அதற்குக்‌ கொடுக்கவில்லை.

 

  1. ஆனால்‌ மனுஷன்‌ பாவத்துக்குள்ளும்‌ மரணத்துக்குள்ளும்‌ பிரவேசித்து விட்டதினிமித்தம்‌, மகாபிரதான நியாயாதிபதியாகிய சிருஷ்டிகர்‌ “மிகவும்‌ நல்லது” என்று சொன்னபொழுது இருந்த ஆதியான பரிபூரண நிலைமையை, அவன்‌ இழந்து விட்டதினால்‌ அவனுடைய நிலைமை தாழ்வடைந்து போனது. அறிவுக்கடுத்த உயர்வான மனோ சக்திகளை அப்பியாசிக்கக்‌ (உபயோகிக்கக்‌)

கூடாமற்போனதுமன்றி, இந்த உயர்வான மனோசக்திகளை வெளிப்‌படுத்துகிற மூளை சம்பந்தமான உறுப்புக்களை சிற்றுருவமடையச்‌ செய்துவிட்டன. (அதாவது கிரியை நடப்பிக்க முடியாமல்‌ பாவத்தினால்‌ அந்த உறுப்புக்கள்‌ தேய்ந்து மழுங்கிப்‌ போய்விட்டன. என்றாலும்‌ அவ்வுறுப்புக்கள்‌ இன்னும்‌ அவ்விடத்திலேயே இருக்‌கின்றன; அவைகள்‌ விருத்தி செய்யப்படுவதற்குத்‌ தகுந்தவையாயுமிருக்கின்றன.

 

  1. அப்படியானால்‌ சிருஷ்டி. கர்த்தாவாகிய தேவன்‌ மிருகத்துக்கு வித்தியாசமாகவே மனிதனை உண்டாக்கியிருக்கிறாரென்பது அவர்‌ அவனுக்கு வரப்பிரசாதமாக அளித்திருக்கிற மகா உன்னதமும்‌ மேன்மையுமான சரீரக்‌ கட்டில்‌ அமைந்துள்ளதென்று விளங்குகிறது; மனுஷனும்‌ மிருகமும்‌ ஓரே விதமான ஆகாயத்தைச்‌ சுவாசித்து, ஓரே தண்ணீரைக்‌ குடித்து ஓரே விதமான ஆகாரத்தைப்‌ புசித்து ஓரே விதமான மாமிசமும்‌ எலும்புமுடையவர்களாயிருந்து யுக்தி அறிவுள்ள ஆத்துமாக்களாயிருக்கிறார்கள்‌. ஆனால்‌ மனுஷனோ விசேஷித்த சரீர அமைப்பு உள்ளவனாய்‌ முற்றிலும்‌ வேறான ஓர்‌ உன்னதமான நிலையிலுள்ளவனாக சிருஷ்டி கர்த்தாவாகிய தேவனால்‌ நடத்தப்படுகிறான்‌. அவன்‌ தனது சிருஷ்டிகளின்‌ சாயலாக (குணசாயலில்‌ -.பூரண மனுஷனுக்குரிய அளவில்‌ பூரண நீதியும்‌ அன்பும்‌ ஞானமும்‌ வல்லமையுள்ளவனாக) உண்டாக்கப்பட்டான்‌. அவனுடைய ஆதிச்சாயலிலிருந்து பாவமானது அவனை எவ்வளவாய்‌ தாழ்வடையச்‌. செய்கிறதோ அவ்வளவாய்‌ அவன்‌ மிருகத்தனமுள்ளவனென மதிக்கப்படுகிறான்‌. மேலானதும்‌ சாமர்த்தியமானதுமாகிய அறிவுகஞக்கு வழி இல்லாதவனாய்‌ மிருகங்கள்‌ போலாகிறான்‌.

 

மனுஷனுக்கும்‌ மிருகத்துக்குமுள்ள வேறுபாடு

 

  1. நாம்‌ முன்பே காட்டியிருக்கிறபடி. மனுஷனுக்கும்‌ மிருகத்துக்கு முள்ள வித்தியாசம்‌ அவர்களுக்குள்ள ஜீவனிலும்‌, சுவாசத்திலுமிராமல்‌, மிருகத்தைப்‌ பார்க்கிலும்‌ மனுஷனுக்குள்ள விசேஷித்த சரீர அமைப்பிலேயே இருக்கிறது. அதாவது, (மேலான விசேஷித்த ஆவிக்குரிய சரீர அமைப்புடையவராயிருக்கிறு நமது சிருஷ்டிகர்த்‌தாவாகிய தேவனுக்குரியவைகளான நீதி, அன்பு, ஞானம்‌, வல்லமை முதலிய மானத சன்மார்க்கத்‌ தத்துவங்களும்‌ இலட்சணங்களும்‌

உடையவனுமாயிருக்கக்கூடிய சரீர அமைப்பைப்‌ பெற்றவனாயிருக்‌கிறான்‌.

 

  1. பிற்கால ஜீவியத்தின்‌ மேல்‌ மனுஷனுக்கிருக்கும்‌ நம்பிக்கை, மிருகங்களுக்கு கிடையாது. இது மனிதன்‌ மிருகங்களைக்காட்டிலும்‌ வேறுபட்ட , உன்னதமான ஆத்துமா என்று தெரிவிக்கிறது. அந்த நம்பிக்கைக்குரிய ஆதாரம்‌, அவனுடைய ஜென்ம இயற்கையான சக்திகளைப்‌ பொறுத்ததாயிராமல்‌ மனுஷனாகிய ஓவ்வொரு ஆத்து மாவையும்‌ மரணத்திலிருந்து மீட்கும்படி, மகாபெரிய மீட்பராகிய இயேசு கிறிஸ்துவால்‌ செய்து முடிக்கப்பட்ட இரட்சண்ய வேலையை : மூலாதாரமாகக்‌ கொண்ட தேவனுடைய கிருபை பொருந்திய ஏற்பாட்டின்‌ மேலும்‌, அவ்வேற்பாட்டின்‌ பயனாகப்‌ புது உடன்படிக்கையின்‌ நிபந்தனைகளுக்குட்பட்டு உயிர்த்தெழுதலின்‌ மூலமாய்‌. விருப்பமுள்ளவன்‌ நித்திய ஜீவனைப்‌ பெற்றுக்‌ கொள்ளத்‌தக்கதாகத்‌ தேவன்‌ ஏற்படுத்தியிருக்கிற ஏற்பாட்டின்‌ மேலும்‌ நிலை நிற்கிறது.

 

  1. நமது மீட்பர்‌ “தம்முடைய ஆத்துமாவை (தம்மைத்‌ தாமே மரணத்தில்‌ ஊற்றினார்‌.” “தம்முடைய ஆத்துமாவை (தம்மைத்‌தாமே) குற்ற நிவாரண பலியாக ஓப்புக்கொடுத்தார்‌” (ஏசா, 55:10,12). தமது ஆத்துமாவைக்‌ குற்ற நிவாரண பலியாக ஓப்புக்கொடுத்து ஆதாமின்‌ ஆத்துமாவை ஆதாமையே (ஆதாமையும்‌ அவனில்‌ குறிப்பிட்ட முழு மனுஷ ஜாதியையும்‌) தமது விலையேறப்பெற்ற இரத்தத்தினால்‌ கிரையத்துக்கு வாங்கினார்‌; ஆதலால்‌ ஆத்துமாக்கள்‌ மீட்கப்பட்டன; ஆத்துமாக்களாகவே உயிரோடெழுப்பப்பட வேண்டியவைகளாயிருக்கின்றன. அப்‌, 2:24-92; சங்‌, 16:10; 30:59; 49:15;89:48. இச்சத்தியத்தை அறிந்தே, தேவனுடைய ஜனங்கள்‌ உயிர்த்தெமுதலின்‌ மூலமாய்‌ தங்களுக்குள்ள பிற்கால ஜீவியத்தின்‌ மேலுள்ள தங்கள்‌ நம்பிக்கையைத்‌ தேவனிடத்திலும்‌ அவரால்‌ மகிமைப்படுத்தப்‌பட்டு உயர்த்தப்பட்டிருக்கிற அவரது ஸ்தானாதிபதியாகிய கிறிஸ்துவினிடத்திலும்‌ ஓப்புவிக்கிறார்கள்‌ (லூக்‌. 23:49) அப்‌. 7:59).

 

மனுஷன்‌ மறுபடியும்‌ உயிரடைவான்‌

 

  1. கிறிஸ்துவின்‌ ஈடுபலியினாலும்‌ வாக்குத்தத்தம்‌ பண்ணப்பட்ட உயிர்த்தெழுதலினாலும்‌ மனுஷனின்‌ பிற்கால ஜீவியத்திற்கு தேவன்‌ இடம்‌ பண்ணாதிருப்பாராயின்‌ மனுக்குலத்துக்குரிய எல்லா நம்பிக்‌கைகளும்‌ .மரணத்தோடே முடிந்து போகும்‌ (1 கொரி. 15:14-18). ஆனால்‌ நாம்‌ மறுபடியும்‌ உயிரோடே வாசம்‌ பண்ணுவதற்கு தேவன்‌ இவ்விதமாக இடமுண்டு பண்ணியிருக்கிறார்‌. அவர்‌ தமது கிருபை பொருந்திய ஏற்பாட்டை வெளிப்படுத்தினது முதல்‌, இவ்விஷயத்‌தைப்‌ பற்றி யுக்தி அறிவோடு. எழுதினவர்களும்‌ பேசினவர்களும்‌(ஏதாவது தேவ ஆவியினால்‌ ஏவப்பட்டு வேதப்புத்தகத்தை எழுதினவர்கள்‌) ஏகமனதாய்‌ மரணத்துக்கும்‌ உயிர்த்தெழுதலின்‌ காலைக்‌கும்‌ இடையிலுள்ள காலமானது, மரித்தோர்‌ உணர்ச்சியற்றிருக்கும்‌காலமென்று சொல்லுகிறார்கள்‌.மரித்திருக்குங்காலத்தில்‌ மரித்தோர்‌ஞானேந்திரிய ஜீவிகளாகிய ஜீவாத்துமாக்களாக இராமலிருந்தாலும்‌,

அவர்களுடைய உயிர்த்தெழுதலின்‌ நிச்சயத்தின்‌ பொருட்டு அவர்‌கள்‌ நித்திரை செய்கிறவர்களாகச்‌ சொல்லப்படுகிறார்கள்‌.

 

  1. மெய்யாகவே இந்த ஓப்பனை மிகச்‌ சிறந்தது. ஏனென்றால்‌மரித்தோர்‌ மரித்த நிலையில்‌ முற்றிலும்‌ உணர்ச்சியற்றவர்களாயிருக்‌கிறார்கள்‌. அவர்கள்‌ மரணத்தின்‌ மூலமாய்‌ அழிவடைந்த நிமிஷம்‌ முதல்‌ திரும்பவும்‌ உயிரடையும்‌ நிமிஷம்‌ வரையுமுள்ள காலஅளவையாவது அக்காலத்தில்‌ நடைபெறும்‌ சம்பவங்களையாவது கொஞ்சமும்‌ உணரவும்‌ அறியவுங்கூடாத நிலைமையை அடைந்திருக்கிறார்கள்‌; அவர்கள்‌ உயிரோடெழும்பும்‌ நிமிஷமானது அவர்கள்‌

மரணமடைந்த நிமிஷத்துக்கு அடுத்த நிமிஷம்போல்‌ அவர்களுக்குப்‌புலப்படும்‌.

 

  1. உதாரணமாக லாசருவின்‌ மரணத்தைக்‌ கவனிப்போம்‌. லாசருவின்‌ மரணத்தைக்‌ குறித்துப்‌ பேசுகையில்‌ நமது கர்த்தர்‌ “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான்‌. நான்‌ அவனை எழுப்பப்போகிறேன்‌” என்றார்‌. அவருடைய சீஷர்கள்‌ அவ்வார்த்‌தையை அறியாமற்‌ போனதினிமித்தம்‌ அவர்‌ “லாசரு மரித்துப்‌போனான்‌” என்று திரும்ப வெளிப்படையாய்ச்‌ சொன்னார்‌ (யோ.11:11,14) மரணத்திற்குப்பின்‌ மரித்தோர்‌ தன்னறிவோடிருக்கிறார்கசென்னும்‌ கொள்கை உண்மையாயிருக்குமானால்‌, லாசரு தான்‌மரித்திருந்த நாலு நாட்களிலும்‌ தான்‌ அடைந்த அனுபவத்தைப்‌

பற்றி யாதொன்றும்‌ சொல்லாதது கவனிக்கத்‌ தகுந்ததல்லவா? வேதனை நிறைந்த நரகமென்ற ஓர்‌ இடத்தில்‌ அந்த நாலு நாட்களும்‌ அவன்‌ இருந்தானென ஒருவரும்‌ சொல்லத்‌ துணியார்கள்‌. ஏனென்‌நால்‌ நமது கர்த்தர்‌ அவனை “தம்முடைய சிநேகிதன்‌” என்று சொல்லுகிறார்‌. அவன்‌ பரலோக ஆசீர்வாதத்தை அடைந்துகொள்ளப்‌போயிருந்தால்‌ நமது கர்த்தர்‌ அவனை அவ்விடமிருந்து வரும்படியாக கூப்பிடமாட்டார்‌. ஏனென்றால்‌ அப்படிச்‌ செய்வது ஓர்‌ துரோகிசெய்கிற செய்கையாயிருக்கும்‌. ஆனால்‌ நமது கர்த்தர்‌ சொன்னபடிலாசரு நித்திரை செய்தான்‌. அவன்‌ ஜீவனை அடைந்து தன்னறி

வுள்ளவனாகும்படி அவர்‌ அவனை எழுப்பினார்‌. அவன்‌ ஞானேந்‌திரிய ஜீவி அதாவது உணர்ச்சியுள்ள ஓர்‌ ஆள்‌ ஆகிய ஆத்துமா ஆனான்‌. இதெல்லாம்‌ லாசருவினாலும்‌ அவனுடைய சிநேகிதராலும்‌ மிகப்பெரியதாய்க்‌ கொண்டாடப்பட்ட பிரத்தியட்சமான ஓர்‌ தயவாகமாத்திரமிருந்தன.

 

மரித்தோர்‌ நித்திரை செய்கிறார்கள்‌

 

  1. சாகுங்கிரியையும்‌ செத்துக்‌ கொண்டே போகிற கிரியையும்‌) நித்திரை செய்யும்‌ கிரியையும்‌ (மரண ஸ்திதியும்‌) நடக்கிற இராக்காலத்திலிருக்கிறோமென்ற கருத்தை அநேக வேதவாக்கியங்கள்‌ 

தெரிவிக்கின்றன; இந்த இராக்காலம்‌ விழித்தெழும்புதலும்‌ பூரண உயிரடைதலும்‌ நடைபெறும்‌ அதிகாலையுடன்‌ ஓப்பிடப்படுகிறது. “சாயந்‌காலத்திலே (ஓர்‌ இரவு மட்டும்‌ அழுகை தங்கும்‌; விடியற்காலத்திலே களிப்புண்டாகும்‌” (சங்‌. 30:5). பொருத்தமானதும்‌ நம்பிக்கை கொடுக்கக்கூடியதும்‌ பிணக்கில்லாததுமான வார்த்‌தையையே - நித்திரையையே - அப்போஸ்தலர்‌ அடிக்கடி மரணநிலைமைக்கு ஓப்பிடுகிறார்கள்‌. இவ்விதமாக, முதல்‌ இரத்தசாட்சியாகிய ஸ்தேவனைப்‌ பற்றி “நித்திரை அடைந்தான்‌" என்று லூக்காவும்‌ (அப்‌. 7:60). “தாவீது... நித்திரை அடைந்தான்‌” என்று பவுலும்‌ (அப்‌. 13:36), “பிதாக்கள்‌ நித்திரை அடைந்தார்கள்‌” என்று பேதுருவும்‌ (2 பேது 3,4), அவ்வார்த்தையை உபயோகிக்கிறார்கள்‌. பவுல்‌ அவ்வார்த்தையை அநேக இடங்களில்‌ உபயோகித்திருக்கிறார்.

  1. “அவர்களில்‌ அநேகர்‌ இந்நாள்‌ வரைக்கும்‌ இருக்கிறார்கள்‌; சிலர்‌ மாத்திரம்‌ நித்திரை அடைந்தார்கள்‌” (1 கொரி 15:6). “மரித்தோரின்‌ உயிர்த்தெழுதலில்லாவிட்டால்‌... கிறிஸ்துவுக்குள்‌ நித்திரை அடைந்‌ தவர்களும்‌ கெட்டிருப்பார்களே (அழிந்திருப்பார்களே)” (1 கொரி,15:13,19). “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து நித்திரை அடைந்தவர்‌களில்‌ முதற்பலனானார்‌” (1 கொரி. 15:20). “இதோ ஓரு இரகசியத்தை உங்களுக்கு. அறிவிக்கிறேன்‌. நாமெல்லாரும்‌ நித்திரையடைவதில்லை” (1 கொரி 15:51). “சகோதரரே, நித்திரை அடைந்‌தவர்களிமித்தம்‌ நீங்கள்‌ நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்‌ போல துக்கித்து அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை” (1 தெ௪.4:13). “இயேசுவுக்குள்‌ நித்திரையடைந்தவர்களையும்‌ தேவன்‌ அவரோடேகூட (அவராலே மரித்தோரிலிருந்து) கொண்டு வருவார்‌” (1தெச. 4:14). ராஜ்யம்‌ - உயிர்த்தெழுதலின்‌' காலம்‌ - வருகிறபொழுது, “கர்த்தருடைய ஸஷ்திருத்தல்‌ (வருகை என்பது தப்பிதமான மொழிபெயர்ப்பு மட்டும்‌ உயிரோடிருக்கும்‌ ' நாம்‌ நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்‌ கொள்வதில்லை" (1 தெச. 4:15). “அவரிடத்தில்‌(கிறிஸ்துவினிடம்‌) ஓப்புக்கொடுத்ததை அவர்‌ (கிறிஸ்த அந்நாள்‌

வரைக்கும்‌ காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்து” தீமோ. 1:12) ஆயிர வருஷ நாளாகிய கிறிஸ்துவின்‌ நாள்‌ என்று சொல்லப்படுகிற கர்த்தருடைய நாளை முன்நோக்கினவர்களாய்‌ சமாதானத்தோடே அவர்கள்‌ நித்திரையடைந்தார்கள்‌. உயிர்த்தெழுதலின்‌ சுவிசேஷத்தை தேவன்‌ முதலாவது ஆபிரகாமுக்குப்‌ போதித்த காலமுதற்கொண்டு பழைய ஏற்பாடு முழுவதும்‌ இதே. கருத்தைக்‌ கொண்டுதான்‌ பேசுகிறது. “அவன்‌ தன்‌ பிதாக்களோடே. நித்திரையடைந்தான்‌". என்ற வாசகம்‌ பழைய ஏற்பாட்டில்‌ பல முறைஉபயோகிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்‌ யோபு இவ்விஷயத்தை மகா

பெலமான பாஷை நடையில்‌ வற்புறுத்திப்‌ பேசுகிறார்‌: “நீர்‌ என்னைப்‌

பாதாளத்தில்‌ (கியோலில்‌ - மரணஸ்திதியில்‌ - பிரேதக்குழியில்‌) ஓளித்து உமது கோபம்‌ தீருமட்டும்‌ என்னை மறைத்து என்னைத்‌ திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஓரு காலத்தைக்‌ குறித்தால்‌ நலமாயிருக்கும்‌” (யோபு. 14:12).

 

  1. மரணம்‌ சம்பவித்துக்‌ கொண்டிருக்கிற தற்காலமே தேவனுடைய கோபத்தின்‌ காலமாயிருக்கிறது; ஏனெனில்‌ ஆதியான மீறுதலினிமித்‌தம்‌ மரணசாபம்‌ எல்லார்‌ மேலுமிருக்கிறது. எனினும்‌, ஏற்ற காலத்‌தில்‌ சாபமானது நீக்கப்பட்டு பூமியிலுள்ள சகல வம்சங்களுக்கும்‌ மீட்பராகிய கிறிஸ்து மூலமாய்‌: ஆசீர்வாதம்‌ வருமென்று நமக்கு வாக்குத்தத்தம்‌ உண்டாயிருக்கிறது. ஆகவே யோபு எனக்கு மாறுதல்‌ எப்போது வருமென்று எனக்குக்‌ குறிக்கப்பட்ட நாளெல்லாம்‌ நான்‌ காத்திருக்கிறேன்‌ (அய்புறம்‌) என்னைக்‌ கூப்பிடும்‌ யோவா. 5:29),

நான்‌ உமக்கு உத்தரவு சொல்லுவேன்‌. உமது கைகளில்‌ கிரியையின்மேல்‌ பிரியம்‌ வைப்பீராக என்று சொல்லுகிறார்‌ (யோபு. 14:18)

 

15). மேலும்‌ புதிய ஏற்பாட்டுக்‌ காலத்திலுள்ள நாம்‌ நமது கர்த்தருடைய மறுமொழியை யோவா. 5:28-ல்‌ வாசிக்கிறோம்‌. பிரேதக்‌ குழிகளிலுள்ள யாவரும்‌ மனுஷகுமாரனுடைய சத்தத்தை கேட்பார்கள்‌. அவர்கள்‌ எல்லாரும்‌ விழித்தெழும்பி தேவனை அறியும்‌ பூரணமான அறிவையடையவும்‌ நித்திய ஜீவனைப்‌ பெற்றுக்‌“கொள்வதற்கேதுவான பூரணமான அவகாசத்தை அடையவும்‌அழைக்கப்படுவார்கள்‌.

 

ஆத்துமாவுக்கு ஓர்‌ திருஷ்டாந்தம்‌

 

  1. குழப்பமற்றதும்‌ எல்லாரும்‌ நன்றாய்‌ அறியக்கூடியதுமான ஓரு

 

 

 

பொருளைக்‌ கொண்டு மானிட சரீரத்தையும்‌ ஆத்துமாவையும்‌

ஆவியையும்‌ திருஷ்டாந்தப்படுத்திக்‌ காட்டுவோம்‌. ஓரு மெழுகு

வர்த்தி உயிரில்லாத மானிட சரீரத்துக்கு, அதாவது ஓர்‌ பிரேதத்திற்கு

ஓப்பானதாகும்‌. மெழுகுவர்த்தியைக்‌ கொழுத்துவது சிருஷ்டிகரால்‌

ஆதியில்‌ கொடுக்கப்பட்ட ஜீவ சுடருக்கு ஓப்பானதாகும்‌. சுவாலை

யாகிய வெளிச்சங்‌ கொடுக்கும்‌ விளக்காக அது ஞானேந்திரிய

ஜீவியாகிய உணர்ச்சியுள்ள ஆளுக்கு - ஆத்தும இலட்சணத்துக்கு

- யுக்தி அறிவுக்கு ஓப்பானதாகிறது. சுவாலைக்கு ஆதரவாக

மெழுகுவர்த்தியின்‌ கரியோடு பொருந்துகிற (சேருகிறு பிராணவாயு

கொண்ட ஆகாயமானது ஆத்துமாவே அதாவது உணர்ச்சி அறிவோ

டுகூடிய ஆளை உண்டாக்கத்‌ தக்கதாக சரீரத்தோடு சேருகிற

ஜீவசுவாசத்துக்கு (ஜீவ ஆவிக்கு) ஒப்பானதாகும்‌. மெழுகுவர்த்தியை

அழிக்கக்கூடிய ஓர்‌ அபாயம்‌ நேரிடுமானால்‌, சுவாலையானது

மெய்யாகவே ஓழிந்துபோய்‌ விடுகிறது. அதே மாதிரியாகவே மானிட

அல்லது, மிருக சரீரமானது ஓர்‌ ஆபத்துக்கு அல்லது நாசத்துக்கு

உட்பட்டு அழிக்கப்படுமேயாயின்‌ ஆத்துமா (ஜீவன்‌, அறிவு, உணர்வ)

ஓழிந்து போய்விடுகிறது.

 

  1. அல்லது தீயணைக்கும்‌ கருவியாலாவது, தண்ணீருக்குள்‌ மெழுகுவர்த்தியை அமிழ்த்தியாவது எரிகிற மெழுகுவர்த்தியின்‌ கவாலையினின்று ஆகாய தொடர்பு விலக்கப்பட்டால்‌, மெழுகுவர்த்தியானது சேதமடையாமல்‌ இருந்தபோதிலும்‌, தீபம்‌ (வெளிச்சம்‌) அணைந்து போகும்‌; அப்படியே ஓரு மனுஷனைத்‌ தண்ணீருக்குள்‌ அமிழ்த்‌தியோ, விஷவாயு ஊட்டியோ சுவாசிக்க முடியாதபடி. செய்து ஜீவசுவாசம்‌ விலக்கப்பட்டால்‌ ஆத்துமா - ஜீவன்‌ - உயிரோடிருத்‌தல்‌ - ஓழிந்துபோய்விடும்‌; சரீரமோ சேதமடையாமல்‌ தங்கியிருக்‌கும்‌. அனுகூலமான நிலைமைகளிருந்தால்‌ எரிகிற மெழுகு வர்த்தியைக்‌ கொண்டு மற்ற மெழுகுவர்த்திகளையும்‌ கொளுத்தலாம்‌. ஆனால்‌ அணைக்கப்பட்ட மெழுகுவர்த்தியானது தன்னைத்‌ தானே மறுபடியும்‌ பற்றவைத்துக்‌ கொள்ளவாவது அல்லது அதைக்‌ கொண்டு மற்ற மெழுகுவர்த்திகளைப்‌ பற்றவைக்கவாவது முடியாது. அப்படியே மானிட சரீரமும்‌ உயிரோடிருக்கையில்‌ ஜீவாத்துமாவாயிருக்கிறபடியால்‌ அது தேவ ஏற்பாட்டின்படி மற்ற ஆத்துமாக்களை (ஆட்களை) ஜெனிப்பித்துப்‌ பிறப்பிக்கக்கூடும்‌. ஆனால்‌ ஜீவசுடர்‌ (ஜீவசக்தி) எடுபட்டதும்‌ ஆத்துமா ஓழிந்துபோவதுடன்‌ நினைக்கவும்‌ உணரவும்‌ ஜெனிப்பிக்கவும்‌ கூடிய எல்லா சக்திகளும்‌ நின்று போய்விடுகிறது.

 

  1. இக்கருத்துக்கு இசைவாகவே. யாக்கோபுக்குப்‌ பிறந்த பிள்ளைகளைப்‌ பற்றி யாத்‌. 1:5இல்‌ வாசிக்கிறோம்‌. இவ்வாக்கியம்‌ ஆங்கில பைபிலில்‌ கண்டிருக்கிறபடி. மகாதெளிவானது – All the souls that came out of the Lions of Jacob were  eventy souls- “யாக்கோபின்‌ இடுப்பிலிருந்து தோன்றி வந்த ஆத்துமாக்களெல்லாம்‌ எழுபது ஆத்துமாக்களே.” யாக்கோபு தனது ஜீவசுடரையம்‌ சரீரக்‌ கட்டையும்‌ அதாவது இவை ன்றநித்ததினாலுண்டான தனது ஆத்துமா என்ற யுக்தி அறிவுள்ள ஆள்தத்துவத்தை ஈசாக்கிடமிந்து பெற்றான்‌. ஈசாக்கு அவைகளை ஆதாம்‌ வழியாகப்‌ பெற்றான்‌. ஆதாமுக்கு மாத்திரமே தேவன்‌ நேரடியாக ஜீவனைக்‌ கொடுத்தார்‌. யாக்கோபு ஜீவனையும்‌ சரீரக்கட்டையும்‌ ஆத்துமாவையும்‌ தனது சந்ததிக்குக்‌ கொடுத்தான்‌. அப்படியே மற்றெல்லா மனுஷர்களுக்குள்‌ளும்‌ இது நடைபெற்று வருகிறது.

 

  1. ஓர்‌ மெழுகுவர்த்தியைப்‌ பற்றவைக்கத்‌ திறமையுள்ள எவரும்‌ அணைக்கப்பட்டுப்‌ போகும்‌ எந்த மெழுகுவர்த்தியைத்‌ திரும்பவும்‌ பற்றவைக்கலாம்‌. ஆனால்‌ தேவ ஏற்பாட்டின்படி ஜீவசுடரை (ஜீவ சக்தியை இழந்துபோன மானிட சரீரமானது “அழிந்து . போகிறது”. “அது எடுக்கப்பட்ட மண்ணுக்குத்‌ திரும்புகிறது.” ஜீவசுடரோ (ஜீவ சக்தியோ) தேவ வல்லமையினாலாகிய ஓர்‌ அற்புதச்‌ செயலாலன்றி வேறெவ்விதத்தினாலும்‌ திரும்பவும்‌ - ஏற்பட முடியாது. . ஆகவே உயிர்த்தெழுதலைப்‌ பற்றிய வாக்குத்தத்தமானது உயிரோடிருத்தலை அல்லது ஆத்துமாவைத்‌ திரும்ப உயிர்நிலைக்குக்‌ கொண்டு வரப்படுவதைப்‌ பற்றிய வாக்குத்தத்தமாகும்‌.

 

அதே சரீரங்கள்‌ மறுபடியும்‌

கொடுக்கப்படுகின்றனவா ?

 

34, ஓர்‌ சரீரமும்‌, திரும்பக்‌ கொடுக்கப்படும்‌ ஜீவசக்தியும்‌ (ஜீவஆவியும்‌) இல்லாமல்‌ ஆள்‌ அல்லது ஆத்துமா இருக்க முடியாதாகையால்‌, வாக்குத்தத்தம்‌ பண்ணப்பட்ட உயிர்த்தெழுதல்‌ அல்லது ஆத்துமாவை அல்லது ஆளை திரும்ப உயிர்ப்பிக்குதல்‌ (முந்தின நிலைமையை அடையச்‌ செய்தல்‌) என்பது ஆளுக்கு அல்லது ஆத்துமாவுக்கு புதிய சரீரங்கள்‌ (புதிய சரீரக்கட்டுகள்‌) அளிக்கப்படும்‌ என்ற கருத்தைக்‌ கொடுக்கிறது.

 

  1. மரித்து அடக்கம்‌ பண்ணப்பட்ட அதே சரீரங்கள்‌, ஒரு அணுக்‌ கூட தவறாமல்‌ அப்படியே திரும்பவும்‌ உயிரடையுமென்று அநேகர்‌ எண்ணுகிறார்கள்‌. ஆனால்‌ இதற்கு மாறாக வேதபுத்தகம்‌ சொல்லுகிறது. “நீ (மரணத்தில்‌, விதைக்கிறபோது இனி உண்டாகும்‌ மேனியை (சரீரத்தை விதைக்கிறதில்லை”. உயிர்த்தெழுதலில்‌ தேவன்‌ ஓவ்வொரு ஆளுக்கும்‌ (ஓவ்வொரு ஆத்துமாவுக்கும்‌) அவருடைய அளவற்ற ஞானத்திற்கேற்றபடி. ஓர்‌ சரீரத்தைக்‌ கொடுப்பார்‌. இச்சுவிசேஷ யுகத்தில்‌ தெரிந்தெடுக்கப்பட்ட மணவாட்டியாகியசபைக்கு ஆவிக்குரிய சரீரங்களையும்‌, ஆயிர வருஷ யுகநாளில்‌சீர்திருத்தப்படும்‌ மனுக்குலத்துக்கு மானிட சரீரங்களையும்‌ தேவன்‌

கொடுப்பார்‌. ஆனால்‌ மரணத்தில்‌ இழந்துபோன அதே சரீரங்களையல்ல என்பதைத்‌ திட்டமாயறிவோமாக. 1 கொரி, 15:97, 98, இவ்விதமாக, மண்ணுக்குத்‌ திரும்புகிற அதே மானிட சரீரங்கள்‌ திரும்பவும்‌ கொடுக்கப்படாமல்‌, தேவன்‌ நமக்குச்‌ கித்தமானபடியே உயிர்த்தெழுதலில்‌ புதிய சரீரங்களைக்‌ கொடுப்பாரென வேத வாக்‌கியங்கள்‌ நமக்கு நிச்சயப்படுத்திக்‌ காட்டுகின்றன (1கொரி.15:37-40).

 

  1. மானிட அல்லது மாம்ச இனத்திற்குப்‌ பதிலாக ஆவிக்குரிய புது இனத்தை அடையப்‌ பாத்திரவான்‌௧ளாக எண்ணப்படும்‌ ஓர்‌ விசேஷித்த வகுப்பார்‌ (சிறுமந்தை வகுப்பார்‌) உண்டு என்று அப்போஸ்‌. தலன்‌ இவ்விடத்தில்‌ அறிவிக்கிறார்‌; இந்தப்‌ பெரிய . மாம்ச ஜீவியிலிருந்து ஆவிஜீவிக்கு) இனமாறுதல்‌, நாம்‌ - எதிர்பார்க்கிற பிரகாரம்‌, ஓர்‌ வித்தியாசமான வகையான சரீரம்‌ அவர்களுக்குக்‌ கொடுக்கப்படுவதினால்‌ ஏற்படுமென்று அவர்‌ விளக்கிச்‌ சொல்லுகிறார்‌. மறுபடியும்‌ மெழுகுவர்த்தியைக்‌ கொண்டே இதை நாம்‌ திருஷ்‌

டாந்தப்படுத்திக்‌ காட்டுவோம்‌ - மாமிச அல்லது மானிட இனம்‌, கொழுப்பினால்‌ செய்யப்படும்‌ மெழுகுவர்த்தியினால்‌ திருஷ்டாந்தப்‌ படுத்திக்‌ காட்டப்படுமாயின்‌, அதிலும்‌ மேலான பிரகாசத்தைக்‌ கொடுக்கக்கூடிய ஓர்‌. உயர்வான மின்விசையால்‌ வெளிச்சம்‌ கொடுக்கும்‌ விளக்கினால்‌ ஆவிக்குரிய சரீரமாகிய புதிய சரீரம்‌ திருஷ்டாந்தப்படுத்திக்‌ காட்டப்படலாம்‌.

 

  1. உயிர்த்தெழுதலைப்‌ பற்றி உறுதி கூறுகிற நமது சிருஷ்டிகளுக்‌ குரிய ஞானத்திற்கும்‌ வல்லமைக்கும்‌ குறைவான எந்த வல்லமையும்‌, ஞானமும்‌, உயிரடையச்‌ செய்யும்‌ செயலில்‌ அபூரணத்தை உண்டாக்கி மரணமடையுமுன்‌ இருந்த சாயலையும்‌, இனமறிதலையும்‌, ஆளறிவையும்‌, விவேகத்தையும்‌, உணர்வையும்‌ போக்கடித்து விடுமென்று நாம்‌ பயப்படக்கூடியது நியாயமேயாகும்‌. விசேஷமாக முதலாம்‌ உயிர்த்தெழுதவில்‌ பங்கடைந்து ஆவி ஜீவிகளாகப்‌ பெரிய இனமாறுதலையடைகிறவர்களின்‌ சம்பந்தமாய்‌ இந்தப்‌ பயம்‌ ஏற்பட ஏதுவுண்டு. ஆனால்‌ இந்த விஷயத்தில்‌ மாத்திரமல்ல, மற்றெல்லா விஷயங்களிலும்‌ நமக்குள்ளே கிரியை நடப்பிக்கிறவரும்‌, நடப்பிக்கப்‌ போகிறவருமான நமது பிதாவாகிய தேவன்‌ மேல்‌ நாம்‌ நமது முழு நம்பிக்கையையும்‌ வைக்கக்‌ கடமைப்பட்டவர்களாயிருக்கிறோம்‌.

 

  1. முற்கால ஜீவியத்தில்‌ நாம்‌ அடைந்த அருமையான போதனைகளிலோ அனுபவங்களிலோ எதுவும்‌ ஓழிந்து போகாதபடிக்கு, நமது இருதயங்களின்‌ எண்ணங்களை அறிகிறவர்‌, அவைகளைப்‌ புதிதான மூளைகளில்‌ மறுபடியும்‌ தோன்றச்‌ செய்யக்கூடுமென்பதை நாம்‌ திட்டமாயறிவோமாக. அவர்‌ எள்ளளவேனும்‌ தப்பிதத்திற்குள்ளாகாதபடி. மகா ஞானமுள்ளவராயும்‌ அவர்‌ கிஞ்சித்தேனும்‌ இரக்கமற்றவரென்று சொல்லப்படக்கூடாதபடி மகாவல்லவராயுமிருக்கிறார்‌. நாம்‌ கேட்டுக்‌ கொள்வதற்கும்‌ நினைப்பதற்கும்‌ மகா மேலான அளவாய்‌ அவர்‌ வாக்குத்தத்தம்‌ பண்ணியிருக்கிற எல்லா காரியங்களையும்‌ பூரணமாக நிறைவேற்றுவார்‌.

 

சரீரமும்‌ ஆதத்துமாவும்‌ ஆவியும்‌

 

  1. சபையாகிய பரிசுத்தவான்‌௧களை. மொத்தமாய்‌ ஓரே தொகுதியாகப்‌ பாவித்துப்‌ பேசும்பொழுது, சரீரம்‌, ஆத்துமா, ஆவி முதலிய வார்த்‌தைகளை உபயோகிக்கலாம்‌. உதாரணமாக - “உங்கள்‌ ஆவி, ஆத்துமா, சரீரம்‌ முழுவதும்‌ நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக” . என்று அப்போஸ்தலன்‌ ஜெபிக்கிறார்‌ (1 தெச. 5:23). பரலோகத்தில்‌ பேரெழுதப்பட்டிருக்கிற தெரிந்து கொள்ளப்பட்ட சபை மொத்தமாக ஓர்‌ தொகுதியாகப்‌ பேசப்படுகையில்‌ இந்த மன்றாட்டு சபைக்குப்‌

பிரயோகிக்கத்‌ தக்கதாகுமென அதை அர்த்தப்படுத்தலாம்‌. உண்மையான ஆவி சிறு மந்தையில்‌ காக்கப்பட்டி ருக்கிறது. அதை மறைத்து நெருக்கத்தக்கதாகக்‌ களைகள்‌ ஏராளமாய்‌ பெருகியிருந்தாலும்‌ அதின்‌ சரீரமானது பகுத்தறியப்படக்‌ கூடியதாய்ப்‌ பிரத்தியட்சமாயிருக்கிறது. மேலும்‌ அதின்‌ ஆத்துமா - அதின்‌ முயற்சி - அதின்‌யுக்தி அறிவு - அதின்‌ ஞானேந்திரிய ஆள்‌ தத்துவம்‌ - ஜனங்களுக்குரிய பிரமாணமாகிய சிலுவையின்‌ (மீட்கும்‌ பொருளின்‌) உபதே

சத்தை வெளியரங்கப்படுத்திக்‌ கொண்டு, எங்கும்‌ பிரத்தியட்சமாய்‌ இருந்திருக்கிறது.

 

  1. இவ்வகையினாலன்றி வேறெவ்வகையினாலும்‌ நாம்‌ இதைவிட அதிக நியாயமான கருத்தை பரிசுத்த பவுலின்‌ வார்த்தைகளிலிருந்து அறியமுடியாது- வேறெவ்வகையிலும்‌ நாம்‌ பரிசுத்த பவுலின்‌ வார்த்தைகளை (1 தெச. 5:28) பிரயோகிக்க முடியாது; ஏனெனில்‌ எவர்களைப்‌ பற்றி இவ்வார்த்தைகள்‌ பேசப்பட்டதோ அந்த ஜனங்‌களின்‌ தனித்தனியான ஆவிகளும்‌ ஆத்துமாக்களும்‌ காக்கப்படுவதைக்‌ குறித்து அநேகர்‌ ஓருவருக்கொருவர்‌ வித்தியாசமான கருத்துடையவர்களாயிருந்தாலும்‌ அவர்களுடைய சரீரங்கள்‌ காக்கப்‌படாமல்‌ மற்றவர்களுடைய சரீரங்களைப்‌ போல்‌ மண்ணுக்குத்‌ திரும்‌

பியிருக்கன்றன என்பதை எல்லாரும்‌ ஓப்புக்கொள்வார்கள்‌. அன்றியும்‌ சரீரம்‌, ஆத்துமா, ஆவி முதலிய வார்த்தைகள்‌ பன்மையில்‌ உப்யோகிக்கப்படாமல்‌ ஓருமையில்‌ உபயோகிக்கப்பட்டிருக்கிறதையும்‌ கவனித்து, நாம்‌ மேலே காட்டியுள்ள கருத்தே வேதபுத்தகத்திற்‌கும்‌ நியாயத்துக்கும்‌ பொருந்தினதாகுமென அறிந்து கொள்வோமாக.

 

சில்‌ வினா விடைகள்‌

 

  1. மேலே காட்டிய விஷயங்களையெல்லாம்‌ இன்னமும்‌ அதிகமாய்‌ தெளிவுபடுத்திக்‌ காட்டும்‌ சில கேள்விகளையும்‌. தேவ வசனத்தின்‌ மூலமாய்‌ அவற்றிற்குக்‌ கொடுக்கப்படும்‌ விடைகளையும்‌ பின்வருமாறு காட்டுகிறோம்‌:

 

வினா 1: சுவிசே௮புகத்துமப்‌ பரிசுத்தவாள்களுக்குக்‌ கொடுக்கப்‌பட்கருக்கிற வாக்குத்தத்தங்கள்‌ பரலோகத்துக்குரியயவகளா? பூலோகத்துக்குரியவைகளா ?

 

விடை: “மண்ணானவனுடைய சாயலை' நாம்‌ அணிந்திருக்கிறது போல வானவருடைய சாயலையும்‌ நாம்‌ அணிந்து கொள்வோம்‌". நாம்‌ “பரம அழைப்புக்குப்‌ பங்குள்ளவர்கள்‌” (1 கொரி. 15:49; 2தீமோ. 4:18; எபி. 3:18,4; பிலிப்‌. 3:14; எபே, 2:6,2; தெச. 1:11,12; 2 தீமோ.1:9,10) என்று பவுல்‌ பரிசுத்தவான்௧ளைக்‌ குறித்து கூறுகிறார்‌.

 

வினா 2. “ஜெயம்‌ பெறுகிறவர்கள்‌ என்றும்‌, பரிசுத்தவான்கள்‌ என்றும்‌ அழைக்கப்படும்‌ தெரிழ்து கொள்ளப்பட்ட சபையானது, மானிடர்களாகவே மறுமையில்‌ இருக்க வேண்டியவர்களா ?

 

விடை: நாம்‌ வாக்குத்தத்தங்களின்‌ மூலமாய்‌ “தெய்வீக சுபாவத்துக்‌குப்‌ இனத்துக்குப்‌) பங்குள்ளவர்கள்‌ (துசிருஷ்டிகள்‌) ஆகும்‌ பொருட்டு, மகாமேன்மையும்‌ அருமையுமான வாக்குத்தத்தங்கள்‌ நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன” (2 பேது. 1:4) 2 கொரி. 5:17; ரோமர்‌ 8:17,18) என்று வேதம்‌ பரிசுத்தவான்‌௧ளைக்‌ குறித்து கூறுகிறது.

 

வினா 3: ஆனியினால்‌ ஜெனிப்பிக்கப்பட்டபொழுது ஆரம்பிக்கப்பட்ட பரிசத்தவாள்களுடைய மனமாறுதல்‌ எப்பொழுது பூர்த்தியாகும்‌ ?அதாவது அவர்களுடைய முழு மாறுதல்‌ ஆவியினால்‌ பிறக்குதல்‌ எப்பொழுது சம்பவிக்கும்‌? அவர்கள்‌ எப்பொழுது தங்கள்‌ கர்த்தராகிய கிறிஸ்துவைப்‌ போலாக்க.ப்படுவார்கள்‌ ?

 

விடை: (பரிசுத்தவான்‌ ௧ளாகிய) நாமெல்லாரும்‌ மறு ரூபமாக்கப்படுவோம்‌... “மரித்தோர்‌ (பரிசுத்தவான்‌௧ள்‌) அழிவில்லாதவர்களாய்‌ எழுந்திருப்பார்கள்‌; நாமெல்லாரும்‌ ஓரு நிமிஷத்திலே ஓரு இமைப்‌பொழுதிலே மறு ரூபமாக்கப்படுவோம்‌.. அழிவுள்ளதாகிய இது அழியாமையைத்‌ தரித்துக்‌ கொள்ளும்‌. ஜென்ம மானிட) சரீரம்‌ விதைக்கப்படும்‌. ஆவிக்குரிய சரீரம்‌ எழுந்திருக்கும்‌.” “இவ்விதமாக (விசேஷித்த - தெரிந்தெடுக்கப்பட்ட) மரித்தோரின்‌ (பரிசுத்தவான்‌௧ளின்‌ பிரதானமான, முதலாம்‌) உயிர்த்தெழுதல்‌ இருக்கும்‌” (1 கொரி.15:50-53; 42-44; பிலிப்‌, 3:10).

 

தெரிந்தெடுப்புக்குட்படாதவர்களுக்குரிய நம்பிக்கை

 

வினா 4: சுவிசேஷயுகத்தில்‌ தெறிந்தெடுக்கப்படும்‌ சபையைத்‌ தவிர மற்றெல்லா மனு ருக்கும்‌ கூறப்பட்டிருக்கும்‌ நம்பிக்கை என்ன ?

 

விடை: “இதுவரைக்கும்‌ சர்வ (மானிட) சிருஷ்டியும்‌ ஏகமாய்‌ தவித்துப்‌ பிரசவ வேதனைப்படுகிறது. ஏனென்றால்‌ தேவனுடைய புத்திரர்‌ வெளிப்படுவதற்குச்‌ சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்‌ கொண்டிருக்கிறது.” உலகத்‌ தோற்றமுதல்‌ தேவன்‌ தம்முடைய எல்லா பரிசுத்த தீர்க்கதரிசிகளுடைய வாக்கினாலும்‌ உரைத்‌தவைகளெல்லாம்‌ திரும்பக்‌ கொடுக்கப்படுங்‌ காலங்கள்‌

அப்பொழுது வரும்‌. அப்பொழுது அபிரகாமின்‌ சந்ததி (இயேசுவும்‌ சபையும்‌ சேர்ந்த சந்ததி - கலா, 3:16,29) மூலமாய்‌ “பூமியிலுள்ள சகல வம்சங்களும்‌ ஆசீர்வதிக்கப்படும்‌”. ரோமர்‌ 8:22; 19; அப்‌.9:19-21; கலா. 9:16,29.

 

விளா 5: மரித்தோர்‌ தன்னறிவோடு இருக்கிறார்களா ?

 

விடை: “மரித்தோர்‌ ஓன்றும்‌ அறியார்கள்‌” பிர, 9:5, சங்‌, 146:4, ஏசா.98:18,19.

 

வினா 6: மரித்துப்போன பரிசுத்தவான்கள்‌ கடந்த காலங்களில்‌ கர்த்தரைத்‌ துதித்துக்‌ கொண்டிருந்திருக்கிறார்களா ?

 

விடை: “மரித்தவர்கள்‌ கர்த்தரைத்‌ துதியார்கள்‌” சங்‌, 115:17; 6:3;பிர, 9:6.

 

பலனனிப்பு - மரணத்திலா ? அல்லது

உயிர்த்தெழுதலிலா ?

 

வினா 7 ஆசீர்வாதங்களானாதும்‌ (வெகுமதிகளானாலும்‌) தண்டனைகளானாலும்‌ முரணமான  பிரதிபலன்கள்‌ அயிர்த்தெழுதறுக்கு முன்னமே எதிர்பார்க்கப்பட வேண்டியவைகளா ?

 

விடை: “நீதிமான்களின்‌ உயிர்த்தெழுதலில்‌ உனக்குப பதில்‌ செய்‌யப்படும்‌” (லூக்‌. 14:14) வெளி. 11:18; ம்‌. 16:27).

 

வினா 8: தீர்க்கதரிசிகள்‌ தங்களுக்குரிய பமனை (வெகுமதிகைர்‌ தங்கள்‌ மரண நேரத்தில்‌ பெற்றுக்‌ கொண்டார்களா ? அல்லது தியாயத்‌ தீர்ப்பின்‌ நாளாகிய புகமாகிய) ஆயிர வரு யுகத்தின்‌ ஆரம்பத்தில்‌ அவர்களுக்குக்‌ கொடுிக்கப்படும்படி தேவலுடைய ஏற்பாட்டில்‌ கட்டுப்பாடு பண்ணப்பட்டிருக்கிறதா ?

 

விடை: “மரித்தோர்‌ நியாயத்‌ தீர்ப்படைகிறதற்கும்‌ தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும்‌ பலனளிக்கிறதற்குமுரிய காலம்‌” ஏழாம்‌ எக்காளமாகிய கடைசி எக்காளம்‌ தொனிக்கையிலேயே (வெளி. 11:15;198; சங்‌. 17:15). '

 

வினா 9: அப்போஸ்தலர்‌ மறரித்தவுடன்‌ பரலோகத்துக்கு எடுத்துக்‌கொள்ளப்படுவதாச வாக்குத்தத்தம்‌ பெற்றார்களா ? அல்லது தங்கள்‌ வெகுமதியை அடைய இயேசுவின்‌ இரண்டாம்‌ வருகையை எதிர்பார்த்தார்களா?

 

விடை: “நான்‌ போகிற இடத்துக்கு நீங்கள்‌ வரக்கூடாதென்றும்‌ நான்‌

யூதரோடு சொன்னது போல, இப்பொழுது உங்களோடும்‌ (அப்போஸ்‌

தலரோடும்‌) சொல்லுகிறேன்‌". “நான்‌ மறுபடியும்‌ வந்து உங்களை

என்னிடத்தில்‌ சேர்த்துக்‌ கொள்ளுவேன்‌.” யோ. 13:33; 14:3.

 

வினா 10: கர்த்தரின்‌ இரண்டாம்‌ வருகையில்‌ உயிரோடிருக்கும்‌

பரிசுத்தவான்‌௧ள்‌ நீங்கலாக சுவிசேஷ புகத்திலுள்ள மற்ற

பரிசுத்தவான்கள்‌ கிரீடஞ்‌ சூட்டப்படுவது அவர்களுடைய மரண

நேரத்திலென்று எதிர்பார்ப்பது முறைமையாகுமா ?

 

 விடை: “பிரதான மேய்ப்பர்‌ வெளிப்படும்போது வாடாத மகிமையுள்ள

கிரீடத்தைப்‌ பெறுவீர்கள்‌” (1 பேது. 5:4; 1| தீமோ, 4:8; | பேது. 1:4,8).

 

வினா 11: தாங்கள்‌ எப்பொழுது மகியமையடைவதாக அப்போஸ்தலர்‌

தம்பியிருநீதார்கள்‌ ? தங்களுடைய மரா நேரத்தினாலேயா ?

அல்லது கிறிஸ்துவின்‌ இரண்டாம்‌ வருகையிலேயா ?

 

விடை: “நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது

நீங்களும்‌ அவரோடேகூட மகிமையால்‌ வெளிப்படுவீர்கள்‌.”

(கொலோ 3:4; | யோ. 5:2)

 

வினா 12: பரிசுத்தவான்கள்‌ தங்கள்‌ மரண நேரத்தில்‌ “பிரகாசிக்க

வேண்டியவா்களாமிருந்தார்களா ?

 

விடை: “பூமியின்‌ தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகர்‌? விழித்து எழுந்திருப்பார்கள்‌; ஞானவான்கள்‌ ஆகாய மண்டலத்‌

தின்‌ ஓளியைப்‌ போல (சூரியனைப்‌ டோல்‌) பிரகாசிப்பார்கள்‌” (கானி.12:2,3; மத்‌. 15:40-43)

 

வினா.13: மூப்பராகிய விசுவாசிகள்‌ பழைய ஏற்பாட்டு விசுவாசிகள்‌

தங்களுடைய மரண நேரத்தில்‌ பறனளிக்கப்பட்டார்களா ?

 

விடை: “இவர்களெல்லாரும்‌ வாக்குத்தத்தம்‌ பண்ணப்பட்டவைகளை

அடையாமல்‌, --- விசுவாசத்தோடே மரித்தார்கள்‌.” “அவர்கள்‌ நம்‌

மையல்லாமல்‌ பூரணராக்கப்‌ படாதபடிக்கு விசேஷித்த நன்மையா

னதொன்றை தேவன்‌ நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்‌.”

(எபி, 11:13, 99, 40).

 

வினா 14: தாளீது பரிசுத்த தீர்க்கதரிசிகளில்‌ ஜரு.வராயிருந்தாரே?

அவர்‌ பரலோசத்துக்கு எடுத்துக்‌ கொள்ளப்பட்டாரா ?

 

விடை: “தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லை” (அப்‌. 2:34).

 

வினா 15: நமது கர்த்தரின்‌ பரமமேறுதல்‌ மட்டும்‌ பரலோகத்துக்குப்‌

போனவர்கள்‌ எத்தை பேர்‌?

 

விடை: “பரலோகத்திவிருந்திறங்கினவராகிய மனுஷ குமாரனேயல்‌

லாமல்‌ பரலோகத்துக்கு ஏறினவன்‌ ஓருவனுமில்லை.” (யோ. 8:18)

 

வினா 16: மனுவனைச்‌ சிருஷ்டித்தவர்‌ அவளை அழிக்கக்‌ கூடுமா ?

ஆத்துமா அதிறுடைய சிருவ்டிகரால்‌ அழிக்கப்படக்கூடுமா ?

 

விடை: “ஆத்துமாவையும்‌ சரீரத்தையும்‌ நரகத்திலே (கெஹினாவிலே

- இரண்டாம்‌ மரணத்திலே) அழிக்கவல்லவருக்கே பயப்படுங்கள்‌.”

“அவர்களுடைய ஆத்துமாக்களே மரணத்துக்கு விலக்கிக்‌ காக்க

வில்லை.” “பாவஞ்‌ செய்கிற ஆத்துமாவே சாகும்‌” (மத்‌. 10:28; சங்‌.

76:50), எசேக்‌. 18:4,20; சங்‌, 22:29; யோசுவா. 10:3; (நரஜீவன்க

ளையும்‌ ஆத்துமாக்களையும்‌) ஏசா. 38:17; சங்‌. 56:13, 30:3, 119;

175; மத்‌. 26:28; ஏசா, 53:10, 12). 

 

வினா 17: உயிர்த்தெழுதலின்‌ உபதேசத்துக்கு பவுல்‌ அப்போஸ்தலன்‌.

எங்வளவு பெரிய முக்கியத்துவம்‌ கொடுத்துப்‌ பேசினார்‌ ?

 

விடை: “மரித்தோரின்‌ உயிர்த்தெழுதலில்லாவிட்டால்‌ கிறிஸ்துவும்‌

எழுந்திருக்கவில்லையே -- கிறிஸ்துவுக்குள்‌ நித்திரையடைந்தவர்‌

களும்‌ கெட்டிப்ருபார்களே (அழிந்து போயிருப்பார்களே)” (1 கொரி.

15:13, 18).

 

வினா 18: நரகம்‌ என்ற அறியப்படாத ஓர்‌ இடத்திலே அறீதிமாள்கள்‌

தங்கள்‌ மரித்த நிலையில்‌ திப்பொழுது சித்திரவதை அடைந்து

கொண்டிருக்கிறாரீகளா 2. அல்லது. அவர்கஞுடைய அறீதிக்குச்‌

சரியான முழுத்‌ தண்டனையைத்‌ தற்சாலத்திலேயே அனுபவித்து

வருகிறார்களா ?

 

விடை: “கர்த்தர்‌ --- அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக கண்டிக்கும்படி) நியாயத்தீர்ப்பு நாளுக்கு (ஆயிரவருஷயுக நாளுக்கு) வைக்கவும்‌ அறிந்திருக்கிறார்‌” (2 பேது. 2:9; யோபு. 21:30).

 

சீர்திருத்தப்படக்‌ கூடாதவர்களுக்கு அழிவு

வினா 19: பரீட்சிக்கப்படுகிறரபொழுது, சீர்திருத்தப்படக்கூடாதவர்களாய்‌

முளப்பூர்வமாய்‌ சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கும்‌ துள்மார்ச்கராய்‌)

காணப்படுகிறவர்களின்‌ முடிவு என்ன ?

 

விடை: 1000 வருட யுகத்தில்‌ பரீட்சிக்கப்படும்பொழுது சீர்திருத்தக்‌ கூடாதவர்கள்‌ “ஜீவனை அடையாதபடி. அறுப்புண்டு போவார்கள்‌”. நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்‌; (இந்த அழிவினின்று உயிர்த்தெழுதல்‌ கிடையாது; ஏனென்றால்‌ ஆயிரவருஷ அரசாட்சிக்‌ காலத்திலும்‌ “பாவத்தின்‌ சம்பளம்‌ மரணமே” (இது இரண்டாம்‌ மரணத்தைக்‌ குறிக்கும்‌). அப்பொழுதும்‌ தேவனுடைய கிருபை வரமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்‌ மூலமாய்‌ மாத்திரம்‌ அடையக்கூடிய நித்திய ஜீவனே. “குமாரனையுடையவன்‌ ஜீவனையுடையவன்‌”. தேவனையுடைய குமாரன்‌ இல்லாதவன்‌ அவ்வரத்தைப்‌ பெற்றுக்‌ கொள்ளமாட்டான்‌ (மத்‌. 25:46 ;வெளி.

20:14,15) 2 தெச. 1:10; ரோ. 6:23; 1; யோவா. 5:12).

 

வினா 20: நரகம்‌ ((12:.572௦1 - ததியோல்‌) என்பது ஐுவாலித்து எரிகிற அக்கினியுள்ள இடமாகவும்‌, மனுவரை உயிருடன்‌ வதைக்கிற இடமாகவும்‌, அங்கே மனதிலும்‌ சாரத்திலும்‌ சித்திரவதையை அனுபவிக்கும்‌ ஜனங்களுடைய கூக்குரல்களும்‌," தாராணங்களும்‌, சாபமொழிகளும்‌ நிறைந்த பயங்கரமான இடமாகவும்‌ இருக்குமானால்‌, அது பெளனமும்‌ அற்தகாரமுூம்‌ மறதியும்‌ உணர்ச்சிபின்மையுமுள்ள.. இடமாகவோ அல்லது நிலைமையாகவோ இருப்பதாக வேதபுத்தகம்‌ ஏன்‌ உறுதி கூறுகிறது 2 மீயாபு. 10:21,22; சங்‌. 88:3-12, 6:5) 146, 4; பிர, 9:10; ஏசா. 38:18).

 

விடை: தேவன்‌ சரீரத்தையும்‌ ஆத்துமாவையும்‌ இரண்டாம்‌ மரணத்‌தினால்‌ அழித்துப்போட வல்லவராயிருப்பதாலும்‌, சத்தியத்தை அறியும்‌ அறிவை 1009 வருட யுகத்தில்‌ அடைந்த பின்பு மனப்பூர்‌வமாய்ப்‌ பாவஞ்செய்கிற துன்மார்க்கரை அவர்‌ அழித்துப்‌ போடுவதாக அறிவிப்பதாலும்‌, நித்திய வேதனை உண்டு என்றும்‌ சதாகாலமும்‌ பாவம்‌ நிலைத்திருக்குமென்றும்‌ சொல்லுகிற உபதேசங்கள்‌கள்ளப்‌ ' போதகங்களென்று தெளிவாய்‌ ரூபகரமாகிறது அல்லவா ? மேலும்‌ இந்த ரூபகரமானது தேவன்‌ அநீதியுள்ளவரல்ல என்பதை விளங்கப்‌ பண்ணி அவருடைய குணத்தின்‌ பரிசுத்தத்தை வெளியரங்கமாக்குகிறது அல்லவா? 

 

  1. நீ கிறிஸ்தவனானது முதற்கொண்டும்‌ அதற்கு முன்னும்‌ உன்னைக்‌ கலங்கப்பண்ணி வந்திருக்கிற எல்லா சந்தேகங்களோடும்‌ மேலே காட்டிய குறிப்புகள்‌ நெருங்கிய சம்பந்தமுடையவைகளாயிருக்கவில்லையா? மேலும்‌ தேவ ஆவியின்‌ ஏவுதலினால்‌ எழுதப்பட்ட தேவனுடைய வசனமென வேத புத்தகத்தின்‌ மேல்‌ உனக்குள்ள விசுவாசத்தைப்‌ பெலப்படுத்துவதிலும்‌, நிலைப்படுத்துவதிலும்‌, உறுதிப்படுத்துவதிலும்‌ உன்னிலுள்ள சந்தேகங்களை

வேத வாக்கியங்களின்‌ மூலமாய்‌ தீர்த்து வைப்பதிலும்‌ உனக்கு அதிகமாய்‌ உதவி செய்கிறது அல்லவா? ஆம்‌, கள்ளப்‌ போதகங்களால்‌ தங்களில்‌ குழப்பமடைந்து அநேக சந்தேகங்களுக்குட்பட்டு நிலைகுலைந்துபோன அநேக கிறிஸ்தவர்களுக்கும்‌ இன்னும்‌ அநேக அவிசகவாசிகளுக்கும்‌ இது பாக்கியமான பலனைக்‌ கொடுத்‌திருக்கிறது. தேவனை உண்மையாய்‌ தேடுகிறவர்கள்‌ அவருடைய ஞானமும்‌ கிருபையுமாகிய பொக்கிஷங்களைக்‌ கண்டடையும்படி அவர்களுக்கு வழிகாட்டுவது வேதபுத்தகமே. அவருடைய வெளிச்‌சத்தில்‌ வெளிச்சத்தைக்‌ காண்போமாக (சங்‌. 36:9).



 



  1. இந்தபாடம் எல்லாரையும் கவரச்செய்கிற தன்மையுடையதாயிருக்கிறது.  சமீப காலங்களில் பலதரப்பட்ட அடிப்படை கொள்கை கொண்ட கிறிஸ்தவ குழுக்களால் இதில் அதிக ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.

 

  1. மில்லினியம் (Millennium) என்று சொல்லப்படுகிற ஆங்கில பதம் மில்லி (Mille) என்ற வார்த்தையிலிருந்து வந்தது.  அதற்கு அர்த்தம் ஆயிரம் என்பதாகும்.  அ-னஸ் (Annus) என்ற வார்த்தைக்கு வருடம் என்பது அர்த்தமாகும்.  மேலும் சரியான பெயர்சொற்படி பார்க்கும்போது அது விசேஷமான ஆயிர வருட காலப்பகுதியைக் குறிக்கிறது.  அதாவது யேசுக்கிறிஸ்துவும் அவரது உண்மையான சபையும் பூமியின் மேல் ஆட்சி செய்யும் மகிழ்ச்சியும் செழிப்புமான 1000 வருட காலமாகும். அமில்லனியலிஸ்ட் (Amillennlalists) என அழைக்கப்படும் சிறுபான்மையான கிறிஸ்துவ மக்கள், ஆயிர வருட அரசாட்சியினை அல்லது பூமியின் மேல் வரப்போகிற தேவனுடைய இராஜ்ஜியத்தை கிறிஸ்துவும் அவரது உண்மையான சபையும் ஆட்சி செய்வதை மறுகின்றனர்.  அவர்கள் அந்த வேதபகுதிகளை ஆவிக்குரிய விதமாய் வியாக்கியானப்படுத்தி, “ஆயிரம்” என்பது அடையாளமான ஒரு எண் என்றும், வாக்களித்திருக்கும் இராஜ்ஜியம் சபையின் பூமிக்குரிய வாழ்நாட்களைத்தான் குறிக்கும் எனவும் கூறுகிறார்கள்.  



  1. ஆனால் அது சரியல்ல என்று வேதவாக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.  அதாவது சங்கீதம் 90 : 4 மற்றும் II பேதுரு 3 : 8 (அப் 17 : 31; II தீமோ 4 : 1 உடன் ஒப்பிடவும்) வெளி 20: 4, 6ல் குறிப்பிட்டுள்ள 1000 வருடங்கள் சொல்லர்த்தமான ஆயிர வருடங்களைத்தான் அர்த்தப்படுத்துகின்றன.  வெளிப்படுத்தின விசேஷத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வேறு எண்களும் சொல்லார்த்தமாக பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன, அதாவது இரண்டு சாட்சிகள், ஏழு சபைகள், ஏழு தூதர்கள், ஏழு எக்காளங்கள் மற்றும் ஏழு கலசங்கள், பன்னிரண்டு அப்போஸ்தலர்கள், பன்னிரண்டு அஸ்திபாரங்கள், பன்னிரண்டு வாசஸ்தலங்கள், பன்னிரண்டு ஜாதிகள், பன்னிரண்டு விலை உயர்ந்த கற்கள் முதலியன சொல்லர்த்த எண்களே என்று நாம் அறிவோம்.

 

ஆயிர வருட ஆட்சிக்கு முன்பு include மற்றும் ஆயிர வருட ஆட்சிக்கு பின்பு போதனைகள்

  1. பூமியிலே ஏற்படும் தேவனுடைய இராஜ்ஜியத்தை குறித்த 1௦௦௦ வருடங்கள் கொண்ட ஆயிர வருட ஆரசாட்சியில் நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களில் இரண்டு வித்தியாசமான வகுப்பாரைக் காணலாம்.

Pre Millennialism

ஆயிர வருட ஆட்சிக்கு முன்பு (ப்ரி மில்லனியஸம் – Pre Millennialism): இந்த போதனையின்படி கிறிஸ்து ஆயிர வருட ஆட்சிக்கு முன்பு வருகிறார் என்பதாகும்.  இதில் அவருடைய உண்மையான சபையுடன் ஆயிர வருடங்கள் ஆட்சி செய்வதற்கு வருகிறார்.  அந்த நாட்களில் எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்கு கீழாக்கி போடும்வரைக்கும் ஆளுகைசெய்து உலகத்தை மனந்திரும்ப வைக்கிறார் என்பதாகும்.  (Iகொரி 15 : 25, ஏசா 42 : 3, 4).

Post Millennialism

ஆயிர வருட ஆட்சிக்கு பின்பு (போஸ்ட் மில்லினியலிஸம் – Post Millennialism): இந்த போதனைப்படி கிறிஸ்து ஆயிர வருட ஆட்சிக்கு பின்பு வருகிறார், மனந்திரும்பிய உலக மக்களை தம்மோடு எடுத்துச் செல்லவும், உலகத்திலுள்ள காரியங்களுக்கு முடிவு கட்டவும் வருகிறார் என்பதாகும்.     

 

உண்மையான கருத்து

  1. “ஆயிர வருட ஆட்சிக்கு பின்பு இயேசுவின் வருகை” என்ற (Post Millennialism) போதனை உண்மையல்ல என்பதை வேதாகமம் தெளிவாக காட்டுகிறது.  ஏனென்றால் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது உலகத்தில் மனுக்குலம் மனம்திரும்பியிருப்பதற்கு பதிலாக மனம்திரும்பாத உலகமாகவும், ஜாதிகள் கோபத்துடனும் தேவனுக்கு விரோதமாகவும் எழுப்பும். அவர்களது கோபம் அவர்கள் மேலே ஊற்றப்படும்.  (சங் 2: 1 – 12; வெளி 11 : 18; 19 : 11 – 21) மேலும் கடைசி காலங்களில் பொல்லாப்பு நிறைந்த கொடிய காலங்கள் வருமென்று வேதம் கூறுகிறது (II தீமோ 3: 1 – 8).  பொல்லாதவர்களும், எத்தர்களுமானவர்கள் மோசம் போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களாகவுமிருந்து மென்மேலும் கேடுள்ளவர்களாவார்கள் (II தீமோ 3 : 13).  அதனால் அநேகர் விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள் (I தீமோ 4 : 1) பூமியிலே (உண்மையான) விசுவாசத்தை காண்பது அரிது (லூக் 18 : 8).  நன்மையும் தீமையும் சேர்ந்தே வளரும்.  ஆனால் யுகம் முடியும் வரையில் தீமையின் ஆதிக்கமுடையதாக காணப்படும் (மத் 13 : 3௦, 39) கள்ளபோதகர்கள் தந்திரமாக கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வஞ்சிப்பார்கள் (மத் 24 : 24) அந்த காலங்களில் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து பரியாசம் செய்வது அதிகரிக்கும்.  (II பேது 3 : 3, 4) செல்வந்தர்கள் தங்கள் செல்வங்களை திரட்டுவதில் ஏழைகளை ஒடுக்குவார்கள். அவர்கள் பூமியிலே சம்பிரமமாய் வாழ்ந்து சுகபோகமாய் வாழ்க்கை நடத்துவார்கள் (யாக் 5 : 3 – 6).

 

  1. நூறு வருடங்களுக்கு முன்பு லண்டன் மிஷனரி ஐக்கியத்தின் அறிக்கைப்படி, உலக ஜனத்தொகை 1,500,000,000.  இதில் 500,000,000 (மூன்று நபரில் ஒருவர்) பெயரளவிலாவது கிறிஸ்தவர்களாக இருந்தார்கள்.  அதன்பிறகு மிஷனரிகளும், சுவிசேஷர்களும்பல்வேறு மிஷனரி ஊழியங்களின் மூலம் உலகத்தை கிறிஸ்தவமாக மாற்றுவதற்காக அதிக சிரத்தையோடும், தன்னலமற்ற தியாகத்தோடும், கடினமான இடுக்கண்களையும் பொறுமையாக சகித்து, மரணபரியந்தம் துன்பத்தை ஏற்று கஷ்டப்பட்டு உழைத்தார்கள்.  உலகத்தில் அனைவரையும் மனந்திரும்ப செய்வது உண்மையாகவே சாத்தியம்போல அநேகருக்கு காணப்பட்டது.  ஒரு வகுப்பினர் “எங்களுக்கு 3௦ மில்லியன் டாலர் கொடுங்கள், நாங்கள் உலகத்தை மனந்திரும்ப வைத்துவிடுவோம்” என திரும்பத்திரும்பக் கூறினார்கள்.



  1. ஆனால் நடந்தது என்ன ? இத்தனை மிஷனரி மற்றும் சுவிசேஷக முயற்சி எடுத்த போதும், சமீப கால புள்ளியல் கணக்குப்படி, உதாரணமாக “கிறிஸ்டியன் இன்குயரர்” (The Christian Inquirer) என்ற பத்திரிகையின்படி தற்போதைய உலக ஜனத்தொகை 4,000,000,000 இதில் 1000,000,000 பேர்தான் இப்போது பெயரளவிலாவது கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்.  அதாவது இப்போது நான்கு நபரில் ஒருவர்தான்.  மேலும் இந்த அளவில் உண்மை கிறிஸ்தவர்கள் மிகவும் குறைவு.  அதிலும் உண்மை கிறிஸ்தவர்களின் விகிதம் ஓர் நூற்றாண்டுக்கு முன் இருந்ததைவிட தற்போது மிகவும் குறைவாகவே உள்ளது.

 

  1. இதைக் குறித்து சிந்திக்கும் ஆற்றலுடைய மக்கள் வேத வாக்கியத்துடன் தங்களது விவேகமான காரணங்கள் மற்றும் உண்மை நிகழ்ச்சி மூலமாக ஒப்பிட்டு பார்க்கும்போது, ஆயிர வருட ஆட்சிக்கு பின்பு இரண்டாம் வருகை (Post Millennialism) என்ற போதனையுள்ளவர்களும் மற்றவர்களும் சுவிசேஷயுகத்தில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பு மனுக்குலம் முழுவதும் மனம்திரும்புதல் என போதிப்பது எதிர்பார்க்கக்கூடாது என்றும், சுவிசேஷ யுகம் அல்லது சபையின் யுகத்தில் இது தேவ நோக்கமும் திட்டமும் அல்ல என்பதும் அதிகமதிகமாக தெளிவகிக்கொண்டு வருகிறது.  இல்லாவிடில் தேவன் எப்போதும் தனது நோக்கத்தை சாத்தான் மற்றும் பொல்லாத மக்களின் எதிர்ப்புகளின் மத்தியிலே நிறைவேற்றுகிறவராய் (ஏசா 46 : 9 – 11; 55 : 8 – 11) இருக்கிறதால் முழு உலகமும் மனந்திரும்புதல் நிறைவேறிவருகிறதைக் காணக்கூடுமே.



  1. பெரும்பாலான சிந்திக்கும் பிரசங்கிகளும், போதகர்களும், கற்பிப்பவர்களும் மற்றும் பிறரும், மனுக்குலத்தின் மத்தியிலிருந்து எல்லா இனம் பாஷைக்காரர்கள் மற்றும் ஜனங்கள் மற்றும் தேசங்களிலிருந்து ஒரு கூட்டத்தை தெரிந்தெடுத்து, பிரித்தெடுத்து சீஷர்களாக்குவதே (மத் 28 : 19; அப் 15 : 14; வெளி 5 : 9) ஆயிர வருடத்திற்கு முன்பு தேவனுடைய நோக்கமாகும் என்பதை அறிந்துவருகிறார்கள்.  அவர்களே ஆயிர வருடத்திற்கு முன்புள்ள ஆபிரகாமின் வித்து (சந்ததி), ஆபிரகாமின் பிள்ளைகள் (the Premillennial Seed of Abraham).   அவர்கள் ஆயிர வருட ஆட்சியில் பூமியை ஆசீர்வதித்து, உலகத்தை மனந்திரும்பச் செய்வார்கள். (ஆதி 12 : 3; 22 : 16 – 18; கலா  3 : 8, 16, 29).

 

  1. ஆயிர வருடத்திற்கு முன்பு ஆபிரகாமின் சந்ததியாக (Seed – வித்து) வருபவர்கள் பூமியிலே இராஜ்ஜியம் ஸ்தாபிதாமாகும் முன்னர் கீழ்க்காணும் மூன்று படிகளின்மூலம் வந்தவர்களாவார்கள்.  I. மனந்திரும்புதல், 2. இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக விசுவாசித்தல், 3. பிரதிஷ்டை அல்லது தேவனுக்கென்று அர்ப்பணித்தல் ஆகியவை ஆகும்.  உண்மையான கிறிஸ்தவனாக வாழ மிகவும் கஷ்டமாகயிருக்கும் இப்பொல்லாத உலகத்தில் அவர்கள் தேவனுக்கும், அழைக்கப்பட்ட அழைப்புக்கும் தனது பிரதிஷ்டையை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர்களாய் இருந்தவர்களாவார்கள் (கலா 1 : 4; II தீமோ 3 : 12).

 

ஆயிர வருட அரசாட்சி குறித்த வாஞ்சை அதிகரித்தல் 

  1. ஆயிர வருட ஆட்சிக்கு முன்பு கிறிஸ்துவின் வருகை (Pre – Millennialism) என்ற போதனையும், கிறிஸ்துவும் அவருடைய உண்மையான சபையும் ஆளுகின்ற ஆயிர வருட அரசாட்சி குறித்தான வாஞ்சையும், நம்பிக்கையும் சமீப காலத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது.  ஆயிர வருடத்திற்கு பின்பு இயேசுவின் வருகை (Post Millennialism) என்ற போதனையில் வாஞ்சையும், நம்பிக்கையும் பெருமளவில் குறைந்து இருக்கிறது.  ஏனெனில் உலகத்தின் நிலைமை வர வர மிகவும் மோசமாகிக் கொண்டே போகிறது.  இந்த யுகத்தில் உலகம் மனந்திரும்புதலுக்கான நம்பிக்கையின் எதிர்பார்ப்பும் மேலும் மேலும் தூரமாகிகொண்டே போகிறது.

 

  1. மக்களிடையே இது குறித்து மறுக்கப்பட்ட அல்லது பேசப்பட்டாத அல்லது சிறிதளவு முக்கியத்துவம் காட்டின வேளைகளில், வந்து கொண்டிருக்கிற ஆயிர வருட அரசாட்சி குறித்து போதித்து, அதன் முக்கியத்துவத்தை எங்களது பத்திரிக்கைகள் மற்றும் பிரசுரங்கள் வாயிலாக பல வருடங்களாக எடுத்துக் காட்டப்பட்டு வருகிறது.  அநேக சந்தர்ப்பங்களில் மற்றவர்களும் இதைக் குறித்து தெளிவாக புரிந்து கொள்ளாவிடினும், நிகழ்கால சத்தியத்தை குறித்து போதுமான அறிவை பெற்றிடாவிடினும், அவர்கள் இப்பொழுது இதைக் குறித்து போதனையின் மூலம் அதிகமதிகமாக வலியுறுத்தி எடுத்து சொல்வதை நாம் பார்க்கும் போது அது மிகவும் திருப்தியும், மகிழ்ச்சியும் அளிக்கக் கூடியதாக உள்ளது.



  1. ஆயிர வருட அரசாட்சி மற்றும் தேவனுடைய இராஜ்ஜியம் பூமியில் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது வெகு சமீபத்தில் நடைபெற உள்ளது என்பதை பில்லி கிரகாம், எம்.ஆர்.டி. கான், டாக்டர். எஸ்டேப், ஹால் லின்ட்சி, சேலம் கிர்பன் (Billy Graham , Mr. De Haan, Dr. Estep, Hal Lindsey and Salem Kirban) போன்ற அநேக பிரபலமான சுவிசேஷகர்கள், பிரசங்கிகள் மற்றும் எழுத்தாளர்கள் அனைத்து உலகம் மீதான செல்வ செழிப்பு சமாதானம், தேவனும் அவருடைய திட்டம் பற்றிய அறிவு, பாதுகாப்பு மற்றும் சமத்துவம், பூரண அரசாங்கம் அமைவதற்கும் மற்றும் உலகம் முழுவதும் இதன் விளைவினால் பூரண ஏதேன் நிலைமை பெருகுவதற்கும் ஆயிர வருட யுகமே என்பதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

  1. தேவனுடைய இராஜ்ஜியம் வெகுசீக்கிரம் ஸ்தாபிக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று வேறு சிலர் நினைப்பது அர்த்தமுள்ள போக்கை காட்டுகிறது. இன்னும் அநேகர் முதல் படியாக இது குறித்த வெளிச்சத்தில் மேலும் வந்து, இது குறித்து அதிகமாக எடுத்துக்கூறி போதிப்பார்கள் என்றும், அடுத்தப்படியாக எல்லாரும் ஆயிர வருட ஆட்சியில் தேவனுடைய நோக்கம் மற்றும் திட்டம் பற்றிய அறிவை நன்கு புரிந்து கொண்டவர்களாயிருப்பார்கள் என்றும் தாங்கள் இந்த போதனையின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்துக்கொள்வார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

 

படி 1: 1௦௦௦ வருட பூமிக்குரிய இராஜ்ஜியம் 

  1. நாம் முதலில், வேதம் சொல்லர்த்தமாக 1௦௦௦ வருட ஆட்சி அல்லது கிறிஸ்துவும் அவருடைய உண்மையான மணவாட்டி சபையும் பூமியின் மேல் அரசாட்சி செய்வதை தெளிவாக போதிக்கிறது என்பதனை அறிந்து உணரவேண்டும்.  (வெளி 5 : 9, 1௦; 2௦ : 4, 6; II பேது 3 : 8; மத் 19 : 28; லூக் 12 : 32; 22 : 29, 30).  இது பரந்த உலகத்தின் மீது பரிபூரண சுற்றுப்புரம், சூழ்நிலை பூரண அரசாங்கத்தோடு ஏற்படும் சமாதானம், செல்வச்செழிப்பு, தேவனைப் பற்றிய அறிவு, பாதுகாப்பு மற்றும் சமதத்துவம் வந்து கொண்டிருப்பதற்கான காலங்கள் ஆகும்.

 

  1. அந்த சமயத்தில் சாபம் பூமியிலிருந்து எடுக்கப்பட்டு ஏதேன் தோட்டம் போல் மாற்றப்படும் (ஏசா 35 : 1, 2; 61 : 4; எசேக் 36 : 35).  சாத்தான் முழுவதுமாக கட்டப்பட்டு தடுக்கப்படுவான், ஆதலால் அவன் ஜனங்களை ஒருபோதும் சோதிக்க இயலாது.  நீதி ஜனங்களில் செல்வாக்கைப் பெறும்படி கிறிஸ்து முழுவதுமாக ஆளுகை செய்வார் (வெளி 2௦ : 1 – 3; சங் 72 : 7, 8; ஏசா 26 : 9; 42 : 3, 4).  தப்பறையும், அறியாமையும் பூமியிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டு தவிர்க்கப்படும்.  சத்தியம் எங்கும் அதன் செங்கோலை உயர்த்திக்காட்டும் (ஏசா 25 : 7 – 9; 11 : 9).  பாவம் கவிழ்க்கப்பட்டு நீதி சிம்மாசனம்மேறும் (சங் 107 : 41, 42 ஏசா 62 : 12).  இம்மனுக்குல வம்சம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு எல்லா விஷயத்திலும் முழு சுயாதீனத்தை பெறும் வாய்ப்பு கிடைக்கும் (ரோம 8 : 20).  எல்லாரும் மகிழ்ச்சி அடையும்படி மக்கள் சஞ்சலம் விலகி வழி கொடுக்கும் (ஏசா 35 : 1௦).

 

  1. யுத்தங்கள் முடிவடைந்து சமாதானம் எங்கும் ஆட்சி செய்யும் (ஏசா 2 : 4; 9 : 7).   நீதிமான்கள் இனி ஒருபோதும் துன்பப்படமாட்டார்கள்.  ஆனால் அவர்களுடைய நீதியினால் எங்கும் உயர்த்தப்படுவார்கள் (ஏசா 25 : 8; சங் 72 : 7).  துன்மார்க்கர் இனி ஒருபோதும் உயர்த்தப்படமாட்டார்கள்.  ஆனால் தாழ்த்தப்பட்டு சீர்திருந்துவதற்க்காக அடிக்கப்பட்டு பின்னர் சீர்திருத்தப்படக்கூடாதவர்கள் நிர்மூலமாக்கப்படுவார்கள் (மல் 3 : 15, 18; ஏசா 26 : 9; சங் 37 : 35, 36).  தவறான மார்க்கங்கள் இனி ஒருபோதும் இருக்காது ஒரே ஒரு உண்மையான மார்க்கம் எங்கும் ஏற்றுக்கொள்ளப்படும் (ஏசா 65 : 15; 60 : 14, 15; செப் 3 : 9).  ஓடுக்குகிற அரசாங்கம் இனி ஒருபோதும் இருக்காது.  கிறிஸ்துவினால் ஏற்படுத்தப்படும் அரசாங்கம் எல்லாருக்கும் ஆசீர்வாதம் அளித்து உதவி செய்யும் (ஏசா 21 : 2 – 4; 60 : 12; சங் 72 : 12 – 14).  ஜனங்கள் இனிமேல் விருதாவாய் உழைப்பதுமில்லை.  வருத்தப்பட்டு வேலை செய்ய வேண்டியதுமில்லை.  ஆனால் எல்லாருக்கும் தேவனுடைய அரவணைப்பினால் செழிப்பு தழைக்கும் (ஏசா 65 : 23; 60 : 17).  அப்போது சுயநலத்தால் பிறர் பொருள் மீது ஆசை வைத்து பிறரை சுரண்டி வாழ்வது, வறுமை போன்றவை இருக்காது.  ஆனால் எல்லாரும் அவரவர் உடைமைகளை மகிழ்ச்சியோடு பயப்படுத்துவாரில்லாமல் அனுபவிப்பார்கள் (ஏசா 65 : 22; மீகா 4 : 4).
  2. இது குறித்த சத்தியத்தை அநேகர் போதிப்பதை பார்க்கும்போது, நாங்கள் மகிழ்ச்சி அடைக்கிறோம்.  ஆனால் அவர்கள் இன்னும் அடுத்த படிகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.  

 

படி 2: மனுக்குலம் பரிபூரண நிலமைக்கு மீண்டும் கொண்டுவரப்படுதல் 

  1. மேலும், கிறிஸ்துவும் அவருடைய உண்மையான சபையும் சேர்ந்து ஆயிர வருட மத்தியஸ்த இராஜ்ஜியத்தில் ஆட்சி செய்யும் போது, மனுக்குலத்திலுள்ள எல்லோரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள்.  தங்களை தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்து அதனை கீழ்படிதலோடு நிறைவேற்றுவார்கள்.  இவ்விதமாக படிப்படியாக மனுக்குலம் பூரண நிலமைக்கு உயர்த்தப்படும்.  அதனால் அவர்கள் இழந்துப்போனத்தை மீண்டும் அடைவார்கள்.

 

  1.  அப் 3 : 19 – 21 கூறுகிறது, “பரலோகம் ஏற்றுக்கொள்ளவேண்டும்” (தன்னிடமாக வைத்துக் கொள்ளும் – விவிலியம் மொழிப்பெயர்ப்பு) இயேசுகிறிஸ்து – உலகத்தோற்ற முதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கத்தரிசிகள் எல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் (நிறைவேறித் தீருங்காலம் என்பது சரியான மொழிபெயர்ப்பு அல்ல – ஆங்கில வேதாகமம் காண்க) திரும்பப் பெறும் காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அதாவது, அவருடைய இரண்டாம் வருகை அதுவரை துவங்காது என அறிகிறோம்.

 

  1.  திரும்பப் பெறுதல் என்பது பழைய சுயதேசத்துக்கு திரும்ப வருவதை அர்த்தப்படுத்துகிறது.  மனுக்குல குடும்பத்தில் சுயநிலையானது தேவனின் ரூபத்தைப் போல், தேவனின் சாயலைப்போல் (Image of God and likeness of God) ஆனது, இவை நம்முடைய ஆதிப்பிதா ஆதாமிடமும் ஆதித்தாய் ஏவாளிடமும் பிரதிபளித்தது.  தேவனின் ரூபம் என்பது பரிபூரண ஜீவி, பரிபூரண நிலைமையில், ‘மிகவும் நன்று’ என்பதாய் அர்த்தப்படுத்தும் (ஆதி 1 : 26, 27, 31; எபி 2 : 6 – 8) நிலையில் இருப்பதாகும்.  தேவனின் சாயல் பெறுதல் என்பது தேவன் அண்டசராசரத்தையும் ஆட்சி செய்பவர் போல் மனிதன் அனைத்தையும் பூமியின்மேல் ஆண்டுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது என நாம் புரிந்துக்கொள்ளலாம் (ஆதி 1 : 26, 28, 29; மத் 25 : 31).

 

  1. தேவனுடைய ரூபம் (Image) என்பது சரீர சம்பந்தமாக, மனது சம்பந்தமாக, ஒழுக்க ரீதியாக மற்றும் சமய சம்பந்தமான விஷயங்களில் பரிபூரணமடைவதைக் குறிக்கிறது.  தேவனுடைய சாயல் (likeness) என்பது பரிபூரண பூமியானது பரிபூரண ஆட்சியாளர்களாய் பொறுப்பேற்று இருப்பதை குறிக்கிறது.  இதற்கு ஆதாம், ஏவாள் விழுந்து போவதற்கு முன்னுள்ள நிலை உதாரணம்.  ஆனால் பவுல் (எபி 2 : 8)இல் சுட்டிக்காட்டுவதுப்போல் தேவனுடைய ரூபமும் சாயலும் தற்போது இல்லாமல் போய்விட்டது.  (ஆதியில் உள்ள பரிபூரண நிலை மற்றும் ஆளும் உரிமை) தேவனுடைய ரூபம் இருக்கவேண்டிய இடத்தில் சரீர சம்பந்தமான, மனது சம்பந்தமான, ஒழுக்க ரீதியான மற்றும் சமய சம்பந்தமான வீழ்ச்சி வந்துள்ளது.  தேவனுடைய சாயல் இருப்பதற்கு பதிலாக சாபம் நிறைந்த இவ்வுலகத்தில் மனிதனை கொடுங்கோன்மை ஆட்கொண்டு இருக்கிறது.  அவை அவனை அதிகமாக அவனுடைய் ஜீவன் அழிக்கும் வரை ஒடுக்கிறது.       இவையெல்லாம் ஆதாமின் பாவத்தினால் மனுஷன் மேல் வந்ததாக வேதாகமம் உறுதியாகக் கூறுகிறது.  (ஆதி 3 : 1 – 24; ரோம 5 : 12 – 21; Iகொரி 15 : 21, 22).  தற்போது மனுக்குலம் இதனால் ஏற்பட்ட சேதத்தின் அழிவில் உள்ளது.  நமது சந்ததியின் இந்த துக்கமான, நிலைக்குலைந்த நிலை நமது சிருஷ்டிகரின் மிகுந்த அனுதாபத்தையும், இரக்கத்தையும் பெற அவரிடம் முறையிட்டிருக்கிறது.  தேவனுடைய அதிருப்தியினால் நிறைந்த மரண சாப தண்டனையின் (மரணம் நித்தியமாக – உயிரோடே வதைத்தல் அல்ல) மத்தியிலும் விழுந்து போன மற்றும் ஆக்கினைக்கு உட்பட்ட – மனிதனை மரணத்தினின்று மீட்க அவருடைய அன்பான குமாரனை உலகத்திற்கு அனுப்பி இவ்விதம் மீட்கும் பொருளை கிரயம் செலுத்தி மனுக்குலத்தின் மேலுள்ள தமது இரக்கத்தை நினைவுகூர்ந்தார். ( I தீமோ 2 : 4 – 6; மத் 20 : 28; யோவா 3 : 17; ரோம 5 : 7, 8, 16 – 19)

 

  1.  மீட்கும் பொருளை கிரயமாகச் செலுத்துவதற்கு, கிறிஸ்துவின் முதல் வருகை இருந்தது போல, அவருடைய இரண்டாம் வருகை அந்த மீட்கும் பொருள் கிரயத்தை தெரிந்தெடுக்கப்படாத மற்றவர்களுக்கு கொடுக்கவும் அவர்களுக்கு மீட்பு கிடைக்கச் செய்யவும் ஆகும்.  அதாவது மனுக்குலம் அனைத்தும் பழைய அசல் நிலைக்கு (பாவத்திற்கு முன்னான ஏதேனின் நிலைக்கு) திரும்ப வருவதற்குரிய காலமாகும்.  திரும்ப கொடுத்தலின் காலத்தில் (times of restitution அப் 3 : 21), ஆதாமின் பாவத்தினால் அழிந்துபோன தேவ சாயலும், ரூபமும் மறுபடியும் அனைத்து சந்ததியார் மேலும் கொண்டுவர இயேசு மீட்கும் பொருள் கிடைக்கச் செய்யும் காலமே அவரது இரண்டாம் வருகையாகும்.  அவரது முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட சுவிசேஷயுகமானது, அவரது மணவாட்டி சபையை தெரிந்தெடுத்து அதற்கு மட்டும் ஆசீர்வாதம் கிடைக்கும்படி செய்த காலமாகும்.

 

  1. பாவமற்ற மனிதனாகிய கிறிஸ்து இயேசுவின் மரணம் ( I தீமோ 2 : 3 – 6) அனைவருக்கும் ஆதாமின் பாவத்தினால் வந்த ஆக்கினையிலிருந்து விடுதலை பெறுவதற்கு வேண்டி போதுமான மீட்பின் புண்ணியத்தை அளிக்கிறது.  அதுமட்டுமல்லாது அந்த ஆக்கினையினிமித்தம் விளைந்த பாதிப்புகளிலிருந்தும் மீட்புபெற ஒரு சந்தர்ப்பத்தையும் கொடுக்க உத்தரவாதமாய் உறுதியளிக்கிறது.  அதாவது கிறிஸ்துவின் மீட்பின் புண்ணியம் ஆதாம் பாவம் செய்யுமுன்னிருந்த அசல் பரிபூரண நிலைக்கு மனுக்குலம் மறுபடியும் திரும்புவதற்கு ஒரு தருணத்தை கொடுக்கிறது.  மகிமையான தேவரூபம் மனுக்குலத்திற்கு திரும்ப வரச்செய்யவும், பரிபூரண சரீரத்தை, மனதை மற்றும் இருதயத்தை மனுக்குலத்திற்கு கொடுக்கவும், மேலும் தேவசாயலைப் பெறச் செய்யவும் அதாவது மறுபடியும் ஏதேனாக மாற்றப்பட்ட இப்பூமியில் பரிபூரண ஆட்சியை மனுக்குலத்திற்கு கொடுக்கவும் (“அதைக் கீழ்படுத்தி ஆண்டுக்கொள்ளுங்கள்” ஆதி 1 : 28) கிறிஸ்து வருவது அவரது இரண்டாம் வருகையின் நோக்கங்களின் ஒரு பகுதியாகும்.  கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சிக்குரிய நிபந்தனைகளை தெளிவாக ஏற்றுக்கீழ்படிகிற அனைவரும் இப்படிப்பட்ட எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ளுவார்கள்.

 

  1.  இவ்வாறு திரும்பப் பெறுதலின்போது அல்லது மீண்டும் பழைய நிலையை அடையும்போது (Restitution or Restoration) ஏதேன் போன்ற நிலைக்கு கொண்டு வருவது மட்டுமல்லாது, பரிபூரண இயற்கை சார்புகள் ஒன்றுக்கொன்று பூரணமாய் நிலைவரப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் (Ecology) பூமியிலே காணப்படும்.  மேலும் ஆதாம் முதலில் பரிபூரணமாய் இருந்ததுபோல உற்சாகமாய் அப்பொழுது கீழ்படிகிற மனுக்குலம் பரிபூரணப்படுத்தப்படும்.  மனுக்குலம் பொதுவாக பரலோகத்தில் அல்ல பூமியில் என்றும் வாழ்வதற்காக சிருஷ்டிக்கப்பட்டது. ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்து தேவதூதர்களைக் கொண்டு சுடரொளி பட்டயத்தால் விரட்டப்பட்டு தோட்டத்திற்கு புறம்பாக்கப்பட வேண்டியதாயிற்று.  இல்லாவிடில் அவர்கள் தொடர்ந்து ஜீவனுக்குரிய மரத்தின் கனிகளை உண்டு பூமியிலே பரிபூரண மனிதர்களாகச் சதாகாலமும் ஜீவித்திருக்கலாம்; மரிக்க வேண்டியதும் வந்திருக்காது (ஆதி 3 : 22 – 24). தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் மனுக்குலத்திற்கான பொதுவான சட்டத்திலிருந்து அதாவது பூலோகவசிகளாக வாழும் நிர்ணயத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்களாய் பரலோகத்தில் நித்திய காலமாய் நித்திய வாசியாக இருப்பார்கள் (எபி 1௦ : 34; I பேது 1 : 4). மற்ற எல்லா மீட்கப்பட்ட மனுக்குலமும் திரும்பக் கொடுத்தலின் இரட்சிப்பை பெற்று பூமியின் வாழ்வார்கள்.  

 

  1.  இவ்வாறு திரும்பக் கொடுத்தவைகளைப் (Restitution) பற்றி படித்தல் தேவனுடைய திட்டத்தை பற்றி புரிந்துக்கொள்ள ஒரு முக்கியமான படி ஆகும்.  பலர் இதனை ஏற்றுக்கொண்டு கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதை நாங்கள் அறியும்போது மகிழ்ச்சி அடைகிறோம்.  ஆனால் இதை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள் இன்னும் ஏராளமாய் இருக்கிறார்கள்.

படி 3: ஜீவனும் மரணமும் நன்மைக்காக

  1. தேவனுடைய வழிகள் சமத்துவமாய் பட்சபாதமில்லாமல் இருந்தாலும் (எசே 18 : 29 – 32).  அதிலே மரணமானது தன் பலனை இடைப்பட செய்யக்கூடாததாலும் உயிரோடிருக்கிரவர்கள் மட்டுமல்லாது மரித்தவர்களும், இந்த உலகத்திலே இரட்சிப்பு அடைய சந்தர்ப்பம் பெற்றுக் கொள்ளாதவர்களும் – எபி 6 : 4, 5 இல் கோடுக்கப்பட்டுள்ள ஐந்து ஆசீர்வாதங்களையும் அடையாதவர்களும், நன்மை பெற்று ஆயிரவருட ஆட்சியிலே பூமிக்குரிய இரட்சிப்படைய வாய்ப்பைப் பெறுவார்கள்.  Iதீமோ 2 : 3 – 6 இன்படி “தேவன் நமது இரட்சகர் – அவராலே எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் (ஆதாமின் அக்கினியிலிருந்து), சத்தியத்தை அறிகிற அறிவை (சரியான அறிவை) அடையவும் தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார்” என்பதனை அறிவார்கள்.  அந்த அறிவை பெறாமல் இறந்தவர்கள் அதைப் பெறவேண்டுமானால் அவர்கள் மரணத்திலிருந்து திரும்ப உயிரோடே எழுப்பப்பட வேண்டும்.  தேவன், அவர்கள் அதைப் பெற்றுக்கொள்ளும்படி செய்வார்.  சங் 22 : 27 – 29; யோவா 1 : 9: லூக் 2 : 10 – 14; பிலி 2 : 6 – 11; எசே 16 : 44 - 63 ஆகிய வசனங்களில் அறியலாம்.

 

  1.  மனுக்குலத்திற்கான தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை உண்மையாகவே புரிந்துக்கொள்ள வேண்டுமானால், தெரிந்து கொள்ளப்படாமல் இறந்தவர்களுக்கும் மற்றும் தெரிந்தெடுப்புக்குட்படாமல் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் திரும்ப கொடுத்தல் அல்லது மறுபடியும் ஆதாமில் இழந்துப்போன பழைய நிலைக்கு திரும்ப கொண்டுவரப்படுதல் (Restitution)  என்ற வேதாகம சத்தியத்தை தெளிவாக அறிந்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

 

படி 4: பூமியிலே நித்திய இராஜ்ஜியம் 

 

  1. தெரிந்தெடுப்புக்குள் வராத ஆனால் மறுபடியும் அசல்நிலையில் நிறுத்தப்பட்ட மனுக்குலத்தோடு பூமியிலே அமைந்த தேவனுடைய இராஜ்ஜியம் 1௦௦௦ வருடம் முடியுமளவுமட்டுமல்லாது, நித்திய காலமாக ஜீவியம் நடத்துவதற்கு ஆகும்.  இதனை அநேக வேத வாக்கியங்கள் தெளிவாக காட்டுகிறது.  அதாவது தானி 2 : 35, 44; 7 : 13, 14, 18, 21, 27 இல் நித்திய நித்தியமாய் என்பதும், இந்த இராஜ்ஜியம் பரலோகத்தில் அல்ல ஆனால் “பரலோகத்தின் கீழே” என்பதும் குறிப்பிடத்தக்கது – (ஒத்து வாக்கியம் மத் 6 : 10; வெளி 11 : 15; 21 : 1 – 4).

 

  1.  “இப்பொழுதுள்ள பொல்லாத உலகம்” (கலா 1 : 4) அதனுடைய ‘பரலோகங்கள்’ (அதன் ஆட்சி செய்யும் அதிகாரங்கள்) அனைத்தும் சாத்தானுக்கும் அவனுக்கு கீழ்பட்டவர்களுக்கும் உட்பட்டுள்ளது (II கொரி 4 : 4).   இந்த ‘பூமி’ (தற்போது உருவாகியுள்ள மனித சமுதாயம்) இந்த மகா உபத்திரவத்தின் காலத்திலே ‘அக்கினி’யினால் அழிக்கப்பட வைக்கப்பட்டுள்ளது (II பேது 3 : 7 – 13).  ஆனால் பூமியாகிய கிரகமோ மனித குடியிருப்புக்காக  சிருஷ்டிக்கப்பட்டுள்ளது.  மேலும் அது என்றும் நிலைத்திருக்கும் (ஏசா 45 : 18; சங் 115 : 16; பிர 1 : 4).

 

  1.  புதிய பூமி அதாவது புதிய சமுதாய ஒழுங்குகள் மறுபடியும் பழைய, பரிபூரண, மீட்கப்பட்ட, சமாதானமான, பாதுகாப்பான, சந்தோஷமாக வாழும் மனுக்குலத்துடன் சதாகாலம் நிலைத்திருக்கும்.  அதேவிதமாக புதிய வானம் அதாவது புதிதாக அமைந்த தேவனால் தெரிந்தேடுக்கப்பட்டவர்களாலான ஆவிக்குரிய ஆட்சி இருக்கும் (ஏசா 65 : 17; 66 : 22; II பேது 3 : 13).  “வானத்திலும், பூமியிலும்- பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும் – சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வெளி 5 : 13) என்று சொல்லும் இந்த மகத்துவமான எதிர்பார்ப்புகளுக்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  இந்த மகத்துவமான எதிர்பார்ப்புகளுக்காக  நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  இந்த மகத்துவமான வேதாகம சத்தியங்களை எல்லாரும் படிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் போதிக்கவும் நாங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறோம்.

பின்வருவனவற்றை நீங்கள் அறிவீர்களா?

 

தாம் இருக்கிற இடத்திலே - பரலோகத்திலே - தம்முடைய சீஷர்களும் இருக்கும்படி, அவர் தாமே மறுபடியும் பூமிக்கு வந்து, அவர்களைத் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்வதாக, இயேசு தம்முடைய சீஷர்களுக்கு வாக்களித்துள்ளார். - யோவா. 14 : 3; 17 :24.

 

இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்னே மனுக்குலம் முழுவதையும் (உலகத்தை) மனந்திரும்பச் செய்ய வேண்டுமென்பது, தேவனுடைய ஏற்பாடாக இருந்ததில்லை; ஆனாலும் "தேவன் அவர்களினின்று (சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும்  ஜாதிகளிலுமிருந்து - வெளி. 5 :9 , 10) தமது  நாமத்துக்காக ஒரு ஜனத்தைத்  தெரிந்து கொள்வதே”  (அப். 15 :14) அவருடைய ஏற்பாடாயிருந்தது; இவர்கள் உலகத்தை ஆசீர்வதிக்கவும், நியாயந்தீர்க்கவும், மனந் திரும்பச்  செய்யவும் இயேசுவோடுகூட அவருடைய ஆயிர வருஷ ராஜ்யத்தில் பூமியிலே அரசாளுவார்கள். (அப். 17 : 31; வெளி. 3 : 21; 20 : 4, 6; மத். 19 : 28; 1 கொரி. 6 : 2).

 

இயேசு தமது இரண்டாம் வருகையில் தம்முடைய  மகா வல்லமையைக்  கொண்டு அரசாளத் தொடங்குகிறபொழுது, ஜாதிகள் மனந்திரும்பி இருப்பதற்கு பதிலாக கோபங்கொண்டிருக்கிறார்கள் - 'மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக்  ( உண்மையான சுவிசேஷத்தைக் ) காண்பாரோ?" (லூக். 18 :8; 1 தீமோத். 4 : 1;  2 தீமோத். 3 : 1-8, 13; 2 பேது. 3 : 3, 4; சங். 2; வெளி. 2 : 26, 27; 11 : 17-19; 19 :11-21.)

 

இயேசு தமது முதலாம் வருகையில் ஆதாமுக்காகவும் அவனது சந்ததிக்காகவும் தமது பூரண மானிட ஜீவனை ஒரு மீட்கும் பொருளாக ( ஒரு பிரதிக்கிரயமாகச் ) சமர்ப்பித்து ( மத். 20 : 28;  மாற். 10 :45;  ரோம. 5 : 12 - 21; 1 திமோ. 2 : 5, 6; ஓசி. 13 : 14 ), தெய்வீக இனத்துக்குரிய அழியாமையுள்ள ஜீவனை அடைந்து கொள்ள வழிநடத்தும் ஒரு புதிதும் ஜீவனுமான வழியைச் சுவிசேஷ யுகத்தில் தெரிந்தெடுக்கப்படும் சபைக்கென்று திறந்துவைத்தார். ( யோவா. 14 : 1 - 6; 2 தீமோ. 1 :10; எபி. 3 : 1; 10 :19, 20; 2  பேது. 1 : 4 ).

 

ஆயிர வருஷ காலங்கொண்ட தமது இரண்டாம் வருகையில் ( இரண்டாந்தரம்  வந்திருக்கையில் ) இயேசு முதலாவது தமது மணவாட்டியும் ( 1கொரி. 15 : 50 - 54;  1 தெச. 4 : 15 - 17;  2 தீமோ. 4 : 8 ) அவருடைய தோழிகளாகிய கன்னிகைகள் என்னும் திரள்  கூட்டத்தாரும் ( சங். 45 : 14, 15;  வெளி. 7 : 9 - 17 )  அடங்கிய தெரிந்தெடுக்கப்பட்ட சபையையும்,  தெரிந்தெடுப்புக்குட்பட்ட மீதியானவர்களையும் ( சங். 45 : 16;  ஏசா. 32 : 1;  லூக். 13 : 28 )  மேன்மைப்படுத்தி,  அதற்குப்பின்பு,  "உலகத்தோற்ற முதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகளெல்லாம் திரும்பக்  கொடுக்கப்படுங்  காலங்களில் (அப். 3 : 21; - ஆங்கில பைபிள் காண்க; நிறைவேறித்  தீருங்காலங்கள் என்பது சரியான மொழிபெயர்ப்பு அல்ல) தெரிந்தெடுப்புகுட்படாத மீதியான மனுக்குலம் முழுவதையும் [ உபத்திரவ காலத்தின் அழிவுக்குத்தப்பி அப்பொழுது உயிரோடுடிருகிறவர்களையும் ( செப். 3 : 8, 9; மத். 24 : 21, 22 )  மரித்தோரையும் ( யோவா. 5 : 28, 29;  தானி. 12 : 2) ] ஆசீர்வதிக்கிறார். ( அப்.  3 : 19 - 24;  அப் 15 : 16, 17;  ஏசா. 35 ).

 

விருப்பமுள்ள யாவருக்கும் ஜீவ தண்ணீரை இலவசமாய்க்  கொடுத்து, பூமியிலுள்ள சகல வம்சங்களையும் ஆசீர்வதிக்கும் வேலையில் சபையாகிய கிறிஸ்துவின் உடன் சுதந்தரர்கள் ஆபிரகாமின் சந்ததியின் ஒரு பாகஸ்தராயிருந்து, வரப்போகிற திரும்பக்  கொடுக்கப்படும் காலங்களில் அவருக்கு உதவிபுரிவார்கள். ( ரோம. 8 : 17; ஆதி. 12 : 3; 22 : 18;  அப். 3 : 25;  கலா. 3 : 8, 16, 29;  வெளி. 22 : 17 ).

 

ஆதாமின் குலத்திலுள்ள எவருக்கும் தேவன் இரண்டாவதான ஓர் அவகாசத்தை அருளிச்  செய்யாவிட்டாலும், நித்திய ஜீவனை அடைந்து கொள்வதற்காக நிறைவானதும் பூரணமானதுமான ஒர்  அவகாசத்தை  அவர் எல்லாருக்கும் கொடுக்கிறார். அந்த ஒரே அவகாசத்தை இந்த ஜீவியத்தில் பெற்றுக்  கொள்ளாதவர்கள், இழந்து போனவைகள் திரும்பக்  கொடுக்கப்படும் காலத்தில் ( ஆயிர வருஷ அரசாட்சிக் காலத்தில்) பெற்றுக் கொள்வார்கள்; ஏனெனில் இயேசு  ஒவ்வொரு மனிதனுக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தார்  ( அனுபவித்தார் ); மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி  எல்லா ஜனத்துக்கும் உண்டு. (எபி. 2 : 9;  லூக். 2 : 10, 30 - 32; 3 : 5;  யோவா. 1 : 9, 29; 12 : 32;  1 தீமோ. 4 : 10; 1 யோவா. 2 :2 ).

 

கிறிஸ்து தம்முடைய ஆயிர வருஷ அரசாட்சியில், "எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக்  கீழாக்கிப் போடும் வரைக்கும் ஆளுகை செய்ய வேண்டும். பரிகரிக்கப்படும் (அழிக்கப்படும்) கடைசி சத்துரு மரணம்." (ஆதாமினால் உண்டான மரணமடையும் தன்மை )  ( 1கொரி. 15 : 24 - 26;  வெளி. 21 : 4).

 

உலகம் ஜீவனை அடையும்படி (யோவா. 6 : 51) இயேசு "மாம்சத்திலே கொலையுண்டார் " - மாம்சத்திலே மரணத்துக்குள்ளாக்கப்பட்டார்; என்றாலும் ஒரு மானிட ஜீவியாக உயிரோடெழுப்பபடாமல், ஓர் ஆவி ஜீவியாக (1பேது. 3 : 18, R.V; 1 கொரி. 15 : 45, 50;  2 கொரி. 3 : 17; 5 : 16 உயிரோடெழுப்பப்பட்டு, மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரானார் ( 1 கொரி. 15 : 20; கொலோ. 1 :18); இது முதற்கொண்டு அவர் ஓர் ஆவி ஜீவியாக, சகல தேவ தூதர்களைப்  பார்க்கிலும் மிக உயர்ந்தவராகவும் (எபே. 1 :20 - 23;  பிலி. 2 : 8 - 11);  தேவனுடைய தற்சொரூப  முடையவராகவும் (எபி. 1 : 3 - 5), மானிட கண்களால் பார்க்கப்படகூடாத வராகவும் (மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக்கூடாதவருமாயி ருக்கிறவர்" -  1தீமோ. 6 : 16;  யோவா. 1 : 19; 5 : 37 ), காற்றைப்போல் போகவும் வரவும் கூடியராகவும் (யோவா. 3 : 6, 8) இருக்கிறார்.

 

ஆவி ஜீவிகளை  அவர்களுடைய இயல்பான நிலையில் மனுஷர் தங்களுடைய கண்களால் பார்க்க முடியாதவர்களாயிருந்தபோதிலும், மனுஷர் நடுவில் அவர்கள் செய்ய நேரிடும் ஊழியங்களுக்குத் தகுந்தபடி மானிட சரீரங்களை உருவாக்கிக் கொள்ளவும், அவைகளில் மனுஷருக்குத் தோன்றவும், பின்பு அவைகளைக் கலைத்து விடவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு ஆபிரகாம், கிதியோன் முதலியவர்களுக்கு ஆவி ஜீவிகளாகிய தேவ தூதர்கள் அளித்த காட்சிகள் திருஷ்டாந்தங்களாகும். ( ஆதி. 8 : 2;  நியா. 6 : 12, 21).

 

அதுபோலவே இயேசுவும் தமது உயிர்த்தெழுதலுக்குப்  பின்பு ஓர் ஆவிஜீவியாக இருந்ததினால், தம்முடைய சீஷர்களுக்குப்  பலவிதமான மாம்சச்  சரீரங்களில் அல்லது உருவங்களில் (மாற். 16 : 12) அந்தந்தச்சமயத்துக்கேற்றவாறு வஸ்திரங்களையும் உண்டுபண்ணிக் கொண்டு (அவர் மனுஷனாயிருக்கையில் அவருடையதாயிருந்த வஸ்திரங்களைப்  போர்ச்சேவகர்கள் பங்கிட்டுக் கொண்டார்கள் மத். 27 : 35) தோன்றினார். (உம்.) ஒரு தோட்டக்காரனைப்  போலவும் ( யோவா. 20 : 11 - 18 ), ஒரு வழிப்போக்கனைப் போலவும் ( எம்மாவு  என்னும் கிராமத்துக்குப்  போன சீஷர்களோடு அவர் அப்பம்  பிட்கையிலேயே  அவர்கள் அவரை இனமறிந்தார்கள்; உடனே அவர் மாம்ச  சரீரத்தைக்  கலைத்து விட்டு மறைந்து விட்டார். ( லூக். 24 : 13 - 35), கைகளிலும் கால்களிலும் ஆணிகளா  லுண்டான தழும்புகளையுடையவரைப் போலவும் (யோவா. 20 : 25 -29), மீன் வாங்க வந்தவரைப் போலவும் ( யோவா. 21 : 1 - 14 ),  பற்பல சமயங்களில் பற்பல உருவங்களில் தமது உயிர்த்தெழுதலுக்குப்  பின்பு  இயேசு தமது சீஷர்களுக்குக்  காணப்பட்டார்.

 

யூதர்களுக்குப்  பயந்ததினால் அவருடைய சீஷர்கள் கதவுகளைப்  பூட்டிக்கொண்டு கூடியிருந்த அறைக்குள் ஓர் ஆவி ஜீவியாக மாத்திரமே இயேசு பிரவேசித்திருக்கக்கூடும். அப்படிப்  பிரவேசித்த பின்பு அந்த இடத்திலேயே ஒரு மாம்ச சரீரத்தை உண்டு பண்ணிக்கொண்டு, ஆபிரகாமின் காலத்தில் அவர் செய்ததுபோல (ஆதி. 18 : 8 ); சடபதார்த்தங்களினால்  உண்டான ஆகாரத்தைப் புசித்து, தனது சரீரத்தைத்  தொட்டுப்  பார்க்கும்படி கேட்டு, அவர்களை நோக்கி, "நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ( அவர்களுக்குத்  தரிசனமளிக்கத்தக்கதாக அந்த இடத்திலேயே - அறைக்குள்ளேயே - அவர் உருவாகிக்  கொண்டவைகளைப்  போன்றவைகள்) ஒரு ஆவிக்கு (ஒர் ஆவி ஜீவிக்கு - அவருடைய உயிர்த்தெழுதல் முதல் அவர் ஆகியிருக்கிற ஓர் ஆவி ஜீவிக்கு - 2 கொரி. 3 : 17) இராதே" என்று சொன்னார். பூட்டப்பட்ட அறையில் சுவர்கள் வழியாகவாவது, வாசல்கள் வழியாகவாவது, மாம்சம்  எலும்புகள்  வஸ்திரங்கள் முதலியவைகள் வந்திருக்க முடியாதென்பது பிரத்தியட்சமான விஷயம்; என்றாலும் ஓர் ஆவி ஜீவியால் அப்படிச் செய்ய முடியும் (யோவா. 3 : 8); ஏனெனில் அப்படிப்பட்ட தடங்கல்கள் ஆவி ஜீவிகளைக்  கட்டுப்படுத்தாது. இவ்விதமாக இயேசு மெய்யாவே ஓர் ஆவி ஜீவியாக அறைக்குள் வந்திருந்தாரென்பதை அவர் உருவாக்கிக் கொண்ட சரீரதத்தைக்  கலைத்துவிடுமுன்னே நிரூபித்துக்  காட்டினார். ( யோவா. 20 : 19 - 23; லூக். 24 : 34 - 48 ).

 

அவர் சவுலுக்குத் தரிசனமானபொழுது ஒரு மாம்ச சரீரத்தை உருவாக்கி கொள்ளவில்லை. அவருடைய ஆவிக்குரிய சரீரத்தினுன்று (பிலி. 3 : 21) உண்டான மகிமையுள்ள ஒளியானது சவுலின் கண்களைக்  குருடாக்கிவிட்டது; அரை குறையான பார்வையை மீண்டும் பெறுவதற்கு ஒர் அற்புதம் தேவையாயிருந்தது. (அப். 9 : 1 - 18; 2 கொரி. 12 : 7;  கலா. 4 : 13 - 15.)

 

இயேசுவின் இரண்டாம் வருகையாகிய அவர் வந்திருக்கும் காலத்தின் முதற்  பருவம் (காலப்பகுதி ) இரவில் திருடன் வருகிற விதத்தைப்  போல இரகசியமானது (வெளி. 16 : 15; லூக். 21 : 34 - 36; 2 பேது. 3 : 10 ); அக்காலத்தில் அவர் வந்திருப்பதை உலகம் அறியாது. (லூக். 17 : 26 - 30; மத். 24 : 37 - 39 - வந்திருத்தல் என அர்த்தங்கொண்ட பரூஷியா ( Parousia)   என்ற கிரேக்க பதம் மத். 24 : 37, 39 - ல் வருங்காலத்திலும் என தப்பிதமாய் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. E.R.V. காண்க ); ஆனால் அக்காலத்திலுள்ள தேவனுடைய உண்மையான ஜனங்களோ, வேதக் காலக்கணக்கு, தீர்க்கதரிசன நிறைவேறுதல்கள், காலங்களின் அடையாளங்கள் முதலியவைகளின் மூலமாய்  இயேசு வந்திருப்பதை அறிந்து கொள்வார்கள். (1 தெச. 5 : 1 - 5).

 

இவ்விதமாக, "அவர் எப்படி - எந்தவிதமாக - வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ அப்படியே - அவ்விதமாகவே - (அமைதியாகவும், எந்த ஒரு பெரிய ஆடம்பரமில்லாமலும், உலகம் அறியாத பிரகாரமாகவும், ஆனால் அவருடைய உண்மையான சீஷர்கள் மாத்திரம் அறிந்து கொள்ளத்தக்கதாகவும்) வருவார் " (அப். 1 : 1). அவர் அதே  சரீரத்தில் அல்லது உருவத்தில் வருவாரென்று இவ்வாக்கியம் தெரிவிக்காமல், அந்த விதமாகவே வருவாரென்று தெரிவிக்கிறதென்பதைக் கவனிக்கவும்.

 

இயேசு சிலுவையிலறையப்படுவதற்கு முன்னே, "இன்னும் கொஞ்சக்  காலத்திலே  உலகம் என்னைக் காணாது" என்று சொன்னார். (யோவா. 14 : 19 ); ஆகையால் அவர்கள் இனிமேல் தங்களுடைய இயல்பான மாம்சக்  கண்களினால் அவரை ஒருபோதும் பார்க்க மாட்டார்கள்; என்றாலும் அவர் இரண்டாந்தரம் வந்திருக்கும் காலத்தின் இரண்டாம் பகுதிக் காலத்தில், அதாவது, அவருடைய எபிபனியா அல்லது அப்போகாலுப்சிஸ் என்று சொல்லப்படும் அவரது வெளிப்படுங்  காலத்தில் "அவர் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின் மேல் (மகா பெரிய உபத்திரவத்தின் கொடிய துன்பத்தில் ) வருகிறதை" தங்களுடைய மனக் கண்களினால் காண்பார்கள் - அறிந்துகொள்வார்கள். (லூக். 21 : 27; மத். 24 : 21, 30 ).

 

இயேசு இரண்டாந்தரம் வந்திருக்கையில் அவர் உலகத்துக்கு வெளிப்படுத்தப்  படுகிறபொழுது, அதின் பயனாக, "கண்கள் யாவும் அவரைக் காணும்" ; அவர் வந்திருப்பதையும், சாத்தானுடைய ராஜ்யத்தை அழிப்பதிலும் தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதிலும் விளங்கும் அவருடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மனுக்குலம் முழுவதும் தங்களுடைய மனக்  கண்களினால் பகுத்தறிந்து கொள்வார்கள். ( 2 தெச. 1 : 7, 8; வெளி. 1 : 7 ).

 

அறிவுப் பெருக்கத்தையும் பிரயாணப்  பெருக்கத்தையும் முன் ஒருபோதும் சம்பவித்திராத உபத்திரவத்தின் காலத்தையுமுடைய முடிவு காலத்தில் நாம் இப்பொழுது இருக்கிறோமென்று வேதத் தீர்க்கதரிசனமும் வேதகாலக் கணக்கும் காலங்களின்  அடையாளங்களும் தெரிவிக்கின்றன. ( தானி. 12 : 1, 4, 9, 10; லூக். 21 : 25 - 27; யாக். 5 : 1 - 8).

 

தானியேலின் பெரிய சிலையின் கால்விரல்களினால் குறித்துக்  காட்டப்படுகிற தற்காலப்  பூலோக அரசாங்கங்களாகிய " இந்த இராஜாக்களின்  நாட்களிலே" ( அவர்கள் அரசாண்டு கொண்டிருக்கும் காலத்திலேயே ) தேவன் சாத்தானுடைய ராஜ்யத்தை அழித்து பூமியிலே தமது நீதியுள்ள ஆளுகையை ஸ்தாபித்துக்  கொண்டிருக்கிறார். (தானி. 2 : 35, 44; சங். 46; செப். 1: 16 - 18; 3 : 8, 9; 2 பேது. 3 : 7 - 13).

 

" இராஜ்யத்தினுடைய சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் ( அவர்களெல்லாரையும் மனந்திரும்பச் செய்யாதே போனாலும் ) பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது” ; ஆகையால் யுகத்தின் முடிவு வந்துவிட்டது ( நாம் யுகத்தின் முடிவில் இருக்கிறோம். - மத். 24 : 14; 13 : 39 ).



இயேசுவின் இரண்டாம் வருகையையும் அவருடைய சமாதான அரசாட்சியையும் சுட்டிக் காட்டுகிற அநேக அடையாளங்களில் ஒன்று இஸ்ரவேலர்  (யூதர்கள் ) தங்கள் சுய தேசத்துக்குத் திரும்பி வருவதேயாகும். இது அவர்கள் தங்கள் மேசியாவை ஏற்றுக்கொள்வதற்கும், அதின் பயனாக அவர்களுக்கும் புறஜாதிகளுக்கும் வரும் மாபெரும் ஆசீர்வாதங்களை அடைந்து கொள்வதற்குமுரிய ஓர் ஆயத்த நடவடிக்கையேயாகும். - ( சகரி. 8 ; 12 : 9, 10; 14 : 16 - 21;  மத். 23 : 39; ஏசா. 2 : 2 - 4; எரே. 23 : 5 - 8; 24 : 6, 7; 30 : 7 - 11, 18 - 24; 31 : 8 - 12, 27 - 34;  ஆமோ. 9 :11, 15;  ரோம. 11 : 25 - 29.)






“நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி (Propitiation – சினம் தணித்து திருப்தி செய்தல்) அவரே நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாக இருக்கிறார்” 1யோவா 2:2

  1. செய்தி வரிசையில், ‘காலையில் மகிழ்ச்சி’ என்ற பொருளில், குறித்த வேளையில் மனுக்குலத்தை ஆசீர்வதிப்பது தேவனுடைய நோக்கமாய் இருக்கிறது என்பதை தெளிவாக படித்தோம்.  சாத்தான், சத்தியத்தை நெறியினின்று புரட்டினத்தின் விளைவாக, (தப்பறைகளை சத்தியம்போல ஒளியின் வேஷத்தை எடுத்து கொள்ளச் செய்ததின் விளைவாக), அநேக நூற்றாண்டு காலமாக இந்த உன்னத மகிமையான நோக்கத்தை அறிந்து உணரக்கூடிய வழிகள் மறைந்திருந்தன.  எனினும் தேவனுடைய வார்த்தையானது, எவ்விதம் இயேசு இம்மையிலோ அல்லது 1௦௦௦ வருட யுகத்திலோ தம் மூலம் தேவனிடத்தில் வருகிறவர்களை முற்றும் முடிய (பூரணமடைந்து நித்திய ஜீவன் பெறும்வரைக்கும்) ரட்சிக்க வல்லவராய் இருக்கிறார் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.  எபி 7:25.

 

உலகத்துக்கான நமது ஜெபம்

 2.1  இயேசு “உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலங்களிலே செய்யப்படுகிறது போல, பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று அவரது மாதிரி ஜெபத்தில் (மத் 6:1௦) கூறினார்.  அதனை கிறிஸ்தவர்கள் தொண்டுதொட்டு, பாரம்பரியமாக ஜெபித்து வருகிறார்கள்.  தேவனுடைய ஆளுகை ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டு விட்டது என்பது சந்தேகப்படக்கூடியதில்லை.  சிந்திக்கிற கிறிஸ்தவர்களில் அநேகருடைய மனங்களில், அதே சமாதானமும், அதே ஒருங்கிசைவும், அவரது நீதியான பிரமாணங்களுக்கு, அதே மரியாதையும், தீமையான தாக்கங்களின் செல்வாக்குகளிலிருந்து அதே விடுதலையும், பூமியிலும் காண்பதற்கு வாஞ்சை மிகவும் எடுப்பாய் இருக்கிறது.

2.2 ‘தேவனுக்கு உன்னத சிறந்த அன்பு’, அயலானுக்கு சமமான அன்பு’ என்பதாக தேவனால் கொடுக்கப்பட்டதும், யேசுவால் ரத்தினச் சுருக்கமாக்கப்பட்டதுமான உன்னதக் குறிக்கோளை நெருங்கிய குடும்ப ஜீவியத்திலும், சமுதாய பரந்த அமைப்பிலும் அடைவதைவிட, வெறேதும் சிறப்பாக இருக்க முடியாது.  இந்த பூமியானது, நமது அறிவுக்கு அப்பாற்ப்பட்ட இனி வரும் யுகயுகமாய் மனுக்குல குடியிருப்புக்கான வாசஸ்தலமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.  அதனை அநேகரால் கண்டுகொள்ள கூடாதிருந்தாலும், அதுவே இந்த ஜெபத்தின் உட்கருத்தின் ஏற்பாய் இருக்கிறது.

  1. ஆனால் அதனை சந்தேகித்து கேள்விகள் எழும்புகின்றன.  இன்றைய நிலையில் உலகம் நிச்சயமாக அதற்கு மிகவும் அசாதாரணமான சூழலின் கீழ் இருக்கிறது.  மேலும் ஜீவிய காலம் முழுவதும் கற்றக் கல்வியறிவு ஒவ்வொரு சந்ததியிலும் இருந்து அடுத்து (மரணத்தில்) தொலைந்து போகிறதாகக் காணப்படுகிறது.  மரணம் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது.  எனினும் இயேசு, ‘தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் (அழிந்து போகாமல்) நித்திய ஜீவனை அடையும்படி அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” என்று (யோவா 3:16,17) கூறுகிறார்.  தேவன் தமது குமாரனில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் ரட்சிக்கப்படுவதற்காகவும், நித்திய ஜீவனைப் பெறுவதற்காகவும் அவரது குமாரனை அனுப்பினார் என்று இயேசு கூறுகிறார்.      

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய ஜீவன் 

 

  1. ரட்சிக்கப்படுதல் என்றால் என்ன? ரட்சிக்கப்படுதலுக்கு விசுவாசம் ஒரு நிபந்தனையாக இருக்குமானால், ரட்சிக்கப்படாதவர்களுக்கு அதாவது விசுவாசியாதவர்களுக்கு என்ன நேரிடும்? மனிதர்கள் ரட்சிப்படையும்படி வானத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ஒரே நாமத்தை (யேசுவை – அப் 4:12) அறியக்கூடாது போனவர்களின் வருங்கால நிலையென்ன? அதாவது கிறிஸ்து யேசுவுக்கு முன், வாழ்ந்து மரித்துபோனவர்களின் வருங்கால நிலை என்ன? மனநிலைக் குன்றினதினால் யேசுவை ரட்சகராக அறிந்துக்கொள்ளக்கூடாதவர்களின் வருங்கால நிலையென்ன? இன்றுங்கூட செய்தியை கேட்காதவர்களும், தேவனுடைய நோக்கத்தையும் கிறிஸ்துவின் ஊழியத்தையும் குறித்து உண்மையை கண்டுக்கொள்ளக் கூடாதவர்களும், ஊனமானவர்களும், தேவனற்ற உலகத்தின் செல்வாக்குகளால் பாதிக்கப்பட்ட பண்புடையவர்களுமானவர்களின் வருங்கால காரியம் என்ன? ‘ரட்சிக்கக்கூடாதபடிக்கு, கர்த்தருடைய கரம் குறுகிப்போகவில்லை....’ (ஏசா 59:1) அவ்விதம் வேதாகமத்தில் பதில் இருக்கிறது என்பதாக வேதாகமம் நமக்கு உறுதியளிக்கிறது.

இரட்சிக்கப்படுதல் என்றால் என்ன?

5.1 தேவன் விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க வாக்குப்பண்ணியிருக்கிறதால் மரணமே சத்துருவாக இருக்கிறது என்பது அதிலிருந்து புரிந்துகொள்ளுகிறோம் (1கொரி 15:16).  ஆகவே சத்துருவாகிய மரணத்திலிருந்து நம்மை மீட்டு விடுவிக்க அவர் வாஞ்சிக்கிறார்.  மரணத்துக்குப் பின்பு பரலோகத்தில் நித்தியகாலமாக பூரிகைகளை ஊதிக் கொண்டும், விண்ணுலக சிங்காசனத்தைச் சுற்றி உலாவிக் கொண்டும், பூமி வெந்துருகி போவதைப் பார்த்துக் கொண்டும் இருப்பார்கள் என்பதான, இடைக்கால கருத்துக்களை சத்திய அறிவுபூர்வமான சிந்தனை நிராகரிக்கிறது.  மரணத்திற்குள் சென்ற அனைவரும் ஒன்றுமறியாத நித்திரை நிலையைத்தான் அடைகிறார்கள் என்பதாக வேதவாக்கியங்கள் கூறுகின்றன (பிர 9:5,6,1௦; 3:19-21; யோபு 16:1௦,21; சங் 146:4; யோவா 5:28; 11:11,13).

5.2 எனினும் கிறிஸ்தவர்கள் இரட்சிப்புநாளில் (Day of Salvation – 2கொரி 6:2; 1பேது 1:4 – சுவிசேஷயுகத்தில் – பரம அழைப்புக்கான காலத்தில்) உண்மையாக விசுவாசமாய் இருந்தவர்களுக்கு பரலோககுடியிருப்பு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டு இருக்கிறது என்பதை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட பரலோக சிந்தையுடையவர்களுக்கு, பூமி ஒரு தற்காலிக குடியிருப்பாக இருக்கிறது.  இந்த பூமியில் குடியிருக்கும்போது, பரலோகத்தில் ஒரு இடத்தில் தங்களை பொருத்தமாய் பொருந்தச் செய்வதற்காக இம்மையில் கடினமான பாடங்களைக் (அப் 14:22) கற்று குணாம்சங்களை விருத்தி செய்து கொண்டனர்.

6.1 மிகக்கவனமான வேதாகம மாணவர்களால், கிறிஸ்துவின் பாடுகளிலும் வெகுமதிகளிலும் பங்குகொள்ள சிலருக்கு சிலாக்கியம் இருப்பதைக் குறித்தும், அவ்விதமாய் பூமியை அஸ்திபாரப்படுத்துவதற்கு முன்பே தேவன் சித்தமுள்ளவராய் இருந்தார் (எபே 1:4) என்பதைக் குறித்தும் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து கண்டுக்கொள்ள முடியும்.  அவ்விதமானதொரு உன்னதமான வாய்ப்பு, இயேசு பூமிக்கு வந்து, ‘பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது’ (பரலோக ராஜ்யம் கையருகே) என்று கற்றுக்கொடுப்பதற்கு முன், மனிதர்களுக்கு தெரியாது.

6.2 யூதர்களைப் பொறுத்தமட்டும், அவர்கள் தேவனோடு அவர்களது உடன்படிக்கையில் உண்மை விசுவாசத்தோடு இருந்தற்கான வெகுமதி, பூமியில் ஒரு வளமான நிலையைப் பெறுவதாகும்.  ஆனால் தெய்வீக குணங்கொண்டவர்களில் மிகவும் சொற்ப்பபேர் மட்டும், தேவனுடைய காரியங்களின் மகா உன்னதத் திட்டத்தில் மனுக்குலத்துக்கான உயர்ந்த சிறந்த பலாபலனை மங்ககலாகக் கண்டனர். 

  1. அப்படிப்பட்டதொன்றை மங்கலாக கண்ட முற்கால தேவ பக்தியான மனிதர்களில் மிக உன்னதமானவர் ஆபிரகாம் ஆவார்.  தேவனுடைய சிநேகிதன் என்று அவர் அறியப்பட்டார் (யாக் 2:23).  அவருடைய விசுவாசமும், கீழ்ப்படிதலும் அவருக்கு உன்னத சிலாக்கியங்களைக் கொண்டுவந்தன.  ஆபிரகாமுக்கு சுவிசேஷம் முன்னதாகவே பிரசங்கிக்கப்பட்டதென்று வேதவாக்கியங்கள் நமக்குத் தெரிவிக்கிறது.  ஆபிரகாம் ஏதோவொரு வழியில், தூரத்திலிருக்கிற ஒரு சிறந்த தேசத்தைக் குறித்து அதாவது பரம ராஜ்யத்தைக் குறித்து ஒரு கருத்துப் படிவத்தை புரிந்து கொண்டவராய் இருந்தார் (கலா 3:8; எபி 11:8-16).  எனினும் ஆபிரகாம் அநேகமாக பூலோக ரீதியில் தேவன் அவர்களுக்குக் கொடுத்த அவர்களது சொந்த தேசத்தில் ஒரு பெரிய தேசமாக ஆகவும், எதிரிகளின் படையெடுப்பிலிருந்து பாதுகாப்பாக ஆகவும், பூமிக்குரிய வளத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் ஆகவும், மற்ற அனைத்து தேசங்களுக்கும் ஆசீர்வாதமாக (ஆதி 12:2-6; 17:6-8; 22:15-18) நிர்ணயிக்கப்பட்டவர்களாய் ஆகவும், நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் மட்டுமே கொண்டதொரு ஒரு ஜனத்துக்கு முற்பிதாவாக ஆனார்.  இந்த நம்பிக்கைகள் தாவீது, சாலமோன் ஆகிய ராஜாக்களின் கீழ் ஒரு குறிப்பிட்டளவுக்கு பெறப்பட்டிருப்பினும், மரணமானது தடுக்கப்படாது  அதன் வேலையை செய்தது, அதன் சாபத்திலிருந்து ஒரு இரட்சிப்பும் கிடைக்கவில்லை.  ஜீவன் அதன் எல்லா பூரணத்திலும் எந்த வழியிலும் அவர்களுடைய பிடிக்குள் இருக்கவில்லை.
  2. தேவனுடைய தயவையும், வாக்குதத்தங்களையும் பெற்றிருந்த தேவஜனமே கடின உழைப்பு, துயரம், வியாதி, மரணம் போன்றவைகளின் பொதுவான அனுபவங்களை அனுபவிக்க வேண்டுமானால் (அவை இரண்டும் இல்லாத) பொதுவான உலகத்துக்கு என்ன நம்பிக்கை கொடுக்கப்பட முடியும்?

சந்தோஷ செய்தி

  1. ஆபிரகாமுக்கு சுவிசேஷம் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது(கலா 3:8).  அது தேவன், மனுக்குலம் முழுவதையும் மரண தீர்ப்பிலிருந்து (Death Sentance) மீட்டுக் கொள்ளுவதற்காக, தமது மனதில் வைத்திருந்த மா உன்னதத் திட்டத்தின் குட்டிச் சித்திரமாக இருக்கிறது.  இயேசு, ‘இழந்துபோனதைத் தேடவும், இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்தார்’ (லூக் 19:1௦) என்று இயேசு கூறுகிறார்.  அவ்விதம் இழந்துபோனது ஜீவனையேயாகும்.  மனுக்குலச் சரித்திரத்தின் ஆரம்பத்தில் கீழ்ப்படியாமை எனும் செயல், சிருஷ்டிகரின் தயவை (நித்திய ஜீவனை) மனுக்குலத்திடமிருந்து பறித்துக்கொண்டது.  சிருஷ்டிகர் மட்டுமே நித்திய ஜீவனுக்கேற்ற நிலைமைகளைக் கொடுக்க முடியும்.  அப்போஸ்தலன் கூறுவதுபோல, ஒரே மனுஷனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும், உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷருமே பாவஞ்செய்தபடியால் மரணமே எல்லோருக்கும் வந்தது (ரோம 5:12).

1௦. ஆபிரகாமுக்குக் கொடுத்த தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படி தனி மேம்பாடான முன் அம்சம் என்ன? பூமியிலுள்ள ஜனங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் (ஆதி 12:3; கலா 3:8) என்பதே அதுவாகும்.  இந்த உன்னத நோக்கம் நிறைவேறுவதற்கு வழிமுறை என்ன என்பது, ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை ரட்சிக்கிற மீட்பராக (மத்1:21), இயேசு வந்தபின்பே புரிந்து கொள்ள முடிந்தது.  பரிசுத்த பவுல், கலா 3:16 இல் இயேசு கிறிஸ்துவே ஆபிரகாமின் மெய்யான வித்து என்பதாயும் (தமிழ் வேதாகமத்தில் சந்ததி என்று மொழியாக்கம் செய்திருப்பது தவறாகும். அது Seed – வித்து என்று இருக்க வேண்டும் – ஆங்கில வேதாகமம் பார்க்கவும் – ஆதி 3:15) அந்த வித்தின் மூலமே தேவனுடைய அன்பு எல்லா மனுக்குலத்தையும் ஆசீர்வதிக்க பாய்ந்தோட இருக்கிறது என்பதாயும் கூறுகிறார்.

  1. எனினும், கிறிஸ்துவின் வேலையைக் குறித்த மேலோட்டப் பார்வையில் தேவனுடைய ரட்சிப்பின் திட்டம் தோல்வியாகத் தெரிகிறது.  மனுக்குல சந்ததியின் மொத்தத் தொகையை ஒப்பிடுகையில், கொஞ்சம் பேரே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கருத்து, ஒரு வருந்தக்கூடிய ஒரு முடிவுக்கு நம்மை நடத்துகிறது அல்லவா.  ஏன் அப்படி? தேவனுடைய நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ளாததே காரணமாகும்.

தேவனுடைய இருபடி நோக்கம் 

  1. வேத வாக்கியங்கள், எந்த சந்தேகத்துக்கும் வழியில்லாது, இயேசு கிறிஸ்துவின் மூலம் இரண்டு இரட்சிப்புக்களை முன் வைக்கின்றன.  அவைகள் முற்றிலும் தனிப்படுத்தப்பட்டவைகளும், தெளிவாக வித்தியாசப்படுத்தப்பட்டவைகளும் ஆகும்.  ஒன்று, பரலோக சுதந்தரிப்பும் (Heavenly inherintance), மற்றொன்று பூலோக சுதந்தரிப்புமாகும் (earthly inheritance), சத்திய வார்த்தைகளை சரியாக பகுத்து (rightly divided) அறியும்போது (2தீமோ 2:15) தேவசத்தியத்தை, அவைகளில் வித்தியாசங்களை நம் மனதில் நிறுத்த உதவிசெய்யும்.
  2. மகா உன்னத பரலோக இரட்சிப்பு, விசேஷமாக தெரிந்துக்கொண்ட வகுப்பாருக்குரியது.  அவர்கள் யேசுவோடு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆபிரகாமின் பரலோக வித்தின் பாகமாக கருதப்படுகிறார்கள்.  அவர்கள் இந்த வாழ்க்கையில் யேசுவோடு பாடுகளை அனுபவிக்கவும், மறுமையில் அவருடைய சிங்காசனத்தில் பக்குகொள்ளவும் நிர்ணயிக்கப்பட்டவர்கள் ஆவர்.  (எபி 2:3; கலா 3:29; 2தீமோ 2:12) இந்த தெய்வீகத்தைப் பெறுவதற்கான அழைப்பு, இயேசு தம்முடைய சீஷர்களை கரு மையமாக சேகரித்தபோது, அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் ஆரம்பித்தது.  அவ்விதம் இந்த வரைப்படத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற சுவிஷேசயுகம் ஆரம்பித்தது. 

 

  1. யூத ஜனம் விசுவாசமுள்ள ஒரு சிலரைத்தவிர, யேசுவை தங்களுடைய மேசியாவாக ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தனர்.  அவ்விதமாக அந்த வித்தின் பாகமாக அதாவது கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்களாக ஆவதற்குரிய அழைப்பையும் புறக்கணித்தனர்.  ஆகவே அதற்குரிய அந்த அழைப்பு புறஜாதிகளுக்கு, அதாவது எல்லா ஜனங்களுக்கும் திறவுண்டது (மத் 28:19; அப் 15:16).  ஆபிரகாமுக்கு அவனுடைய வித்து வானத்தின் நட்சத்திரங்களைப் போலிருக்கும் (ஆதி 22:17) என்ற விதமாய் சொன்ன தேவனுடைய முறையானது, இப்பொழுது அர்த்தமுள்ளதாயிற்று.  யேசுவில் விசுவாசமுள்ளவர்களாய், ஆபிரகாமைப் போல அதே விசுவாசத்தை, ஆனால் இப்பொழுது தெளிவாக்கப்பட்ட புதிய பரம நம்பிக்கைகளோடு அப்பியாசிக்கிறவர்கள், ஆபிரகாமுடைய ஆவிக்குரிய பிள்ளைகளாக கருதப்படுகிறார்கள் (ரோம 4:11; கலா 3:7) என்பது இப்பொழுது அர்த்தமுள்ளதாயிற்று.
  2. அடுத்த பகுதியாக பொதுவான இரட்சிப்பு (யூதா 3) இலவச கிருபையாக எல்லாருக்கும் அதாவது ஏதோவொரு காரணத்தினால் பரலோக சுதந்திரத்துக்கு அழைக்கப்படாத எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது.  தெரிந்து கொள்ளப்படாதவர்களுக்குரிய இந்தப் பொதுவான இரட்சிப்பு ஆயிரவருட யுகத்தில் பூமியில் கிறிஸ்து ஆளும் பொழுது கொடுக்கப்பட இருக்கிறது.  இந்த ஆயிரவருட யுகத்தை வரைப்படத்தில் காணவும். 
  3. உலகத்துக்கான தேவனுடைய மா உன்னத அன்பு, எந்தவிதத்திலும் மகா ரட்சிப்பின் நாளில் (சுவிஷயுகத்தில்) அந்த அழைப்புக்கு செவிசாய்த்து விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டுமல்ல.  அவருடைய அன்பு மனுக்குலத்தின் ஒவ்வொரு தனிப்பட்டவர்களையும் அதிக நிச்சயமாக சேர்த்துக் கொள்ளுகிறது.  எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதாயும், எல்லாரும் சத்தியத்தைப் பற்றிய அறிகிற அறிவை அடைய வேண்டும் என்பதாயும் தேவன் வாஞ்சிக்கிறார்.  ஆகவே இயேசு எல்லாருக்காகவும் தம்மையே மீட்கும் பொருளாக (ஈடு கிரயமாகக் – Corresponding price) கொடுத்தார் (1தீமோ 2:4-6).

தேவதிட்டத்தை தீர்க்கமாக வரை (ஆபகூக் 2:2)

  1. ஆக்கினைக்குள்ளாக்கப்பட்ட ஆதாமின் இடத்தை எடுத்துக்கொள்ள, இயேசு தம்மையே பலி செய்தது, ஆதாமின் வழி வந்த சந்ததியாகிய மனுக்குலமனைத்தையும் மரண சாசனத்திலிருந்து விடுவிக்கிற விளைபயனைக்கொண்ட விதியாக இருக்கிறது.  அது, பரலோக சுதந்திரத்துக்கு அழைக்கப்படாதவர்களுக்கு, தேவனுடைய நித்தியநோக்கத்துக்கு முக்கிய பங்கான பூரணமான நித்திய ஜீவனை பூமியில் அடையும் வாய்ப்பைக் கொடுக்கிறது.  ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் அதன் வெகுபரந்த தரிசனத்தில் காணப்படுகிறது.  ஆபிரகாமுடைய சுபாவ வழிவந்தோர் நடைமுறையில் எண்ணப்படமுடியாதவர்களே.  எனினும் காலத்தின் நிறைவில் விசுவாசிகளாக ஆன எல்லோரும் கிறிஸ்துவின் கீழ் கூட்டப்படும்பொழுது (எபே 1:1௦) ஆபிரகாமுடைய பூமிக்குரிய வித்து மெய்யாகவே கடற்கரை மணலைப்போல் இருக்கும் (ஆதி 22:17).

பரலோக ரட்சிப்பு

  1. இந்த பாக்கியம் பெற்ற வகுப்பாராக ஆகுவதற்கான அழைப்பு வரம்புக்குட்படுத்தபட்ட ஒன்று.  இயேசு தமது முதல் வருகையில் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை (யோவா 3:13) என்று கூறினார்.  பேதுருவும் தாவீதைக் குறித்து அதையே சொல்லுகிறார் (அப் 2:34).  இயேசு யோவான் ஸ்நானனின் சிறப்பை அங்கீகரித்தபோதிலும், பரலோக ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் யோவானைக் காட்டிலும் பெரியவனாக இருக்கிறான் என்று சொல்லுவதில், (மத் 11:11) யோவான் பூமிக்குரிய உயிர்த்தெழுதலுக்குரியவன் என்று அர்த்தப்படுத்துகிறார். யேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமானவர் (யோவா 14:6).  அவர் பாவத்துக்கான கிரயத்தை செலுத்தும்வரை அந்த அழைப்புக்கு வழி திறக்கப்படவில்லை.
  2. சீஷர்கள் பெந்தெகொஸ்தேயில் பரிசுத்தாவியை பெற்றனர்.  அது அவர்கள் தெய்வீக சுபாவத்திற்கு ஜெனிப்பிக்கப்பட்டவர்களாய், சபையின் அங்கத்தினராய் ஆகக்கூடியவர்கள் என்பதற்கும், அவர்களுடைய வேலை மெய் உறுதிபாடோடு ஆரம்பித்தது என்பதற்கும் தெய்வீக நிச்சயமாய் இருக்கிறது.  சபையின் ரட்சிப்பை நிர்ணயிக்கும் நிபந்தனைகள், உலகத்து ரட்சிப்புக்குரிய நிபந்தனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.  அவர்களுடைய பூலோக ஜீவிய காலத்தில் தெய்வீக அழைப்பின்கீழ் கிறிஸ்துவோடு பாடுபட உலகத்தைவிட்டு அழைக்கப்பட்டவர்கள் ஆவர்.  அவர்கள் ஆயிரவருட யுகத்தில் கிறிஸ்துவின் ராஜ்யமாக, அவர்கள் செயல்படும் காலத்தில் ஜீவ கிரீடத்தைப் பெற்று, கிறிஸ்து யேசுவோடு அவருடைய சிங்காசனத்தில் உட்காருகிறார்கள் (வெளி 2:1௦; 3:21).

2௦. வேதவாக்கியமும், உலக சரித்திரமும் சுவிசேஷயுகம் முழுவதும் வாழ்ந்த பரிசுத்தவான்களின் ஜீவியத்தைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும், உபத்திரவங்களைப் பற்றியும், ரத்தசாட்சியைப் பற்றியும், பதிவு செய்து இருக்கின்றன.  அவர்களுடைய ஜீவியம், கொடிய பாடுகளைக் கோருகிற நிபந்தனைகளைக்கொண்ட ஒரு இடுக்கமான வழியாகும்.  அவர்களுடைய எஜமானோடு, தங்களுடைய சரீரங்களை ஜீவபலியாக படைத்தனர்.  அவர்கள் சுவிசேஷத்தை உலகத்துக்கு பிரசங்கித்தனர்.  யாரெல்லாம் தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு (மத் 16:24) எஜமானைப் பின்பற்றி வந்து.  அதன் மூலம் குறித்த காலத்தில் அதாவது புறஜாதியாரின் நிறைவு (fullness of gentiles – ரோம 11:25) வரும்போது, சபையில் சேகரிக்கப்பட, தெரிந்துக்கொள்ளப்படவிருந்தார்களோ அவர்கள் எல்லோரையும் தேடுவதற்காக, சுவிசேஷத்தை உலகத்துக்கு பிரசங்கித்தனர்.

பரலோக ரட்சிப்புக்கு கதவு மூடப்படுதல் 

21.1 நமது கர்த்தரால் அவரது முதல் வருகையில் இந்த பரலோக ரட்சிப்பு முதல் முதலாவது பேசப்பட ஆரம்பித்ததால் (எபி 2:3), அவ்விதம் அதற்கு ஒரு திட்டமான ஆரம்பம் இருந்தது.  அதுபோல அதற்கு ஒரு முடிவும் இருக்க வேண்டும்.  அது முடிய வேண்டியது ஒரு அவசியமாயிருக்கிறது.  ஏனெனில் மனுக்குலம் அனைத்தையும் ஆசீர்வதிக்கிற ஒரு பெரிய அடுத்ததொரு வேலை ஆரம்பிக்க அவசியமாயிருக்கிறது.  அவ்விதம் பரலோக ராஜ்யத்தில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பு எப்பொழுது ஒரு முடிவுக்கு வருகிறது?

21.2 யேசு, தாம் திரும்பி வருவதாக, சீஷர்களுக்கு வாக்குக்கொடுத்து இருக்கிறார்.  அவர்களுடைய விசுவாச ஓட்டம் அவர்களுடைய எஜமானோடு பரலோக சுதந்திரத்தை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறதால், அவர்களை அவருடைய வந்திருத்தலில் தம்மோடு சேர்த்துக் கொள்ளுதல், அவருடைய முதல் நோக்கமாகும் (யோவா 14:3).  இந்த வெகுமதியானது சபைக்கு சோம்பலான சுயநல பேரின்பம் நிறைந்த ஒரு நித்தியத்தையோ, அவர்களுடைய புதிய மகிமையான ஸ்தானங்களில் முழுமையும் தனிப்பட்ட தன்னல இன்ப நுகர்வையோ அர்த்தப்படுத்தவில்லை.  அவர்கள் ஒரு நோக்கத்தோடு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் (எபே 1:9-11; 2தீமோ 1:9), அப்போஸ்தலனாகிய பவுல், பரலோகத்திலும் பூமியிலுமுள்ள அனைத்து காரியங்களையும் தேவனோடு ஒப்புரவாக்கும் ஒரு மகத்துவமான வேலையில் பங்குகொள்ளும் ஒரு நோக்கத்திற்காக அழைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறுகிறார். 2கொரி 5:19

  1. அவ்விதம் சபையானது அவர்களது உயிர்த்தெழுதலில் பரலோக பிதாவின் தெய்வீக சுபாவத்தை அடைவது மட்டுமல்லாது, அவருடைய குணாம்ச பண்புகளையும் பிரதிபலிக்கிறது.  உலகம் அழிந்து போகாமல், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவன் உலகத்திற்காகக் கொண்டுள்ள மெய்யான வாஞ்சை நிறைந்த அதே அன்பை, அவர்களும் பிரகாசிக்கச் செய்கிறார்கள்.  நாம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இருக்கிறோம் என்பதற்கான அநேக ஆதாரங்களை வேதாகமம் கொடுக்கிறது.  பரிசுத்த தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்ட இழந்து போனதை திரும்பப்பெறுகிற காலம் (Time of Restitution – அப். 3:19-21-ஆங்கில வேதாகமம் காண்க) அதிவிரைவில் ஆரம்பிக்க விருக்கிறது.

பூலோக ரட்சிப்பு

  1. பரலோக ரட்சிப்புக்கான பரம அழைப்புக்கான வாசல் மூடப்படுகிறதில், பூலோக ரட்சிப்புக்கான அடுத்த வாசல் திறக்கிறது.  ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள் (1கொரி 15:22).  நம்முடைய கர்த்தரின் பலியின் பிரதான காரண நோக்கம், உலகத்தை மரண சாசனத்திலிருந்து மீட்பதே.  அது உலகத்தை மனுஷீகத்திலிருந்து ஆவியின் சுபாவத்திற்கு பொதுவான ஒரு மாற்றத்தை கொண்டது அல்ல.  ஆனால் அது சிருஷ்டிகருடைய சாயலில் உண்டாக்கப்பட்ட அசல் மனிதனுடைய பூரணத்திற்கும், அவனது சுகத்திற்கும், நித்திய சந்தோஷத்திற்கும் தேவையான ஒவ்வொரு ஆசீர்வாதங்களால் சூழப்பட்ட நிலைமைக்கும், தூக்கியெடுத்து நிறுத்தும் உத்திரவாதத்தை அளிக்கிறது.
  2. துன்பத்தையும் வியாதியையும் மரணத்தையும் கொண்ட பொதுவான அனுபவத்தால் இன்னும் பாதிக்கப்படுவதால் முழுமையான கருத்தில் ஒருவனும் இரட்சிக்கப்பட்டாயிற்று என்று இப்பொழுது கூற முடியாது.  எனினும் அநேகருக்கு தேவனுடைய வார்த்தையில் ஆழமான விசுவாசம் இருக்கிறது.  ஏதாவதொரு காலத்தில் ஆபிரகாமின் வித்துக்குள் பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் (ஆதி 12:3) என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்புகிறார்கள்.  அப்போஸ்தலன் கூறுகிறதுபோல சர்வ சிருஷ்டியும் தேவனுடைய புத்திரர்கள் வெளிப்படுவதற்காக பிரசவ வேதனைப்பட்டு அறியாமலேயே காத்துக்கொண்டிருக்கிறது (ரோம 8:19-22) அப்பொழுது கிறிஸ்துவும், அவருடைய சபையும், இழந்து போனதைத் திரும்பபெறும் மகா வேலையை ஆரம்பிக்கிறார்கள் (2கொரி 5:19; வெளி 22:17).
  3. பரி.பேதுரு, இந்த வரவிருந்த மகிமையான நம்பிக்கையளிக்கிற வாய்ப்பை, நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னதாகவே சுட்டிக்காட்டி, அதனை தெம்பூட்டும் காலம் (The Time of Refreshing – புத்துணர்வூட்டும் காலம்) என்று அழைக்கிறார்.  மேலும் அவர் அதேவிதமாக எல்லா தீர்க்கதரிசிகளும் அந்த ஆயிரவருடயுக ஆசீர்வாதத்தை விளக்கியிருப்பதாகக் கூறுகிறார்.  இந்த தேவனுடைய ராஜ்யமான ஆயிர வருட யுகத்தில் யேசுவும் அவரது மணவாட்டியும் பூமியின் மேல் ஆண்டு, அதனை தெய்வீக தத்துவங்களுக்கு இணக்கமாக மறுபடியும் கொண்டு வருவார்கள்.  (அப் 3:19-21 ஆங்கில வேதாகமத்தை ஒப்பிட்டு படிக்கவும்).  உலகம் ஆயிரக்கணக்கான வருடங்களான சரீர, மன, சன்மார்க்க, மத ரீதிகளில் இப்பிரபஞ்சத்தின் அதிபதியாகிய சாத்தானின் கீழ் குன்றிப்போன பின்பும் (யோவா 14:30), தீமையோடு ஒரு கசப்பான அனுபவத்தைப் பெற்ற பின்பும், பூமியின் ஜனங்கள் இழந்து போனதைத் திரும்பப் பெறும் காலத்தில் அவர்களுடைய சிருஷ்டிகரை அறிய வருவதாலும், மனித சிந்தனைக்கும், கற்பனைக்கும் அப்பாற்ப்பட்ட முன்னிருந்த வளமான வாய்ப்புகளையும், சந்தோஷங்களையும் அவர்கள் கண்டு கொள்வதால், பெரியதொரு அறிவூட்டும் செயல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவார்கள்.

 

மறுஜென்மக் காலம் 

  1. கிறிஸ்து, தாம் ஆளுகிற காலத்தை நோக்கிப்பார்த்து அதனை மறுஜென்மக்காலம் (regenretion – மத். 19:28 – மரணத்திலிருந்து எழுந்து வந்து, புது ஜீவனைப் பெறுவதற்காக உருவாக்கப்படுதல்) என்று குறிப்பிடுகிறார்.  அதனை சபையை மட்டும் குறித்து அவர் சொல்லாமல், பொதுவாக அந்தக் காலத்தைக் குறித்து சொல்லுகிறார்.  சிலர் (உடனடியாக) நித்திய ஜீவனுக்கும் மற்றவர்கள் நியாயத்தீர்ப்பு அடைய எழுந்து வருவதைக் குறித்து கூறுகிறார்.  (ஆக்கினையடையுபடி – யோவா 5:29 – எழுந்து வருவார்கள் என்பது சரியான மொழியாக்கம் அல்ல – ASV, RHV, Diaglott மொழியாக்கங்களைக் கவனிக்கவும்) ஜட்ஜ்மெண்ட் என்பது தண்டனையை வெறுமனே கொடுப்பது அல்ல. (நிதானித்தறிதலைக் கற்றுக் கொள்ள – Judgement – நியாயத்தீர்ப்பு நாள் என்ற தலைப்பில் செய்தியைக் கொண்ட சிறு புத்தகத்தைப்பெற எங்களுக்கு எழுதுங்கள் – ஏசா 26:9; 2:4) மனுக்குலம் (ஆதாமுக்குள்) ஏற்கனவே மரணத்துக்குள் நியாயந்தீர்க்கப்பட்டாயிற்று.  அந்த தண்டனையை எடுத்துப் போடுதல் தீமைக்குப் பதில் நன்மையோடு கொண்டதொரு அனுபவத்தையும், முழுமையான நேர்மையான ஒரு பரீட்சையையும் கொண்டுவரும்.  அந்த அனுபவம் மனுக்குலத்துக்கு ஒருபோதும் இன்னும் இருந்ததில்லை.

27.1. ‘நியாயத்தீர்ப்பு நாள்’ என்பது உலகமக்கள் நீதியாய் நிதானிக்கப்பட்டு ஆளப்படுதலாகும்.  அது போதிக்கப்படுதல், சிட்சையால் சரிசெய்யப்படுதல் ஆகியவையும் கொண்டதாகும்.  எல்லோருக்கும் வெற்றி தோல்விக்குரிய காரியங்கள் என்ன என்பதைக் குறித்து தெளிவாக புரிந்துகொள்ளும் நிலைக்கு வரவேண்டும்.  மேலும் எல்லோரும் தேவன் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் சுயசித்தத்தை பயன்படுத்தி நித்திய ஜீவனைப் பெறுவதற்கான நிபந்தனைகளை தெரிந்து கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ உதவி செய்யப்பட வேண்டும்.

27.2 தேவனோடு ஒப்புரவாகுதல் மாற்றமுடியாத நிஜமாக ஆகும்.  அப்பொழுது உள்ளான இருதயமும் மனமும் பெரிய அளவாய் மறுஜென்மம் அடையும்.  அதன் பிரதிபலிப்பாக வெளிப்படையான காணக்கூடிய விதமாக மனுஷசரீரம் புதுப்பித்தலும், ஆரம்ப பூரண நிலைக்குரிய கனத்துக்கும் மகிமைக்கும் (சங் 8:5) தூக்கி நிறுத்தப்படும்.  நியாயத்தீர்ப்பு (Judgement – நிதானித்தறியும்) நாள் வரவேற்க்கப்படத்தக்கதான ஒரு காலமாகும்.  சங்கீதக்காரன் கூறுகிறதுபோல, வானங்கள் மகிழ்ந்து பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதன் நிறைவும், முழங்குவதாக.  நாடும் அதிலுள்ள யாவும், களிகூர்வதாக.  “அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.  அவர் வருகிறார்.  அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.  அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களை சத்தியத்தோடும் நியாயத்தீர்ப்பார்” சங் 96:1-13.

28.1. நீதி வாசஞ்செய்யும் புதிய பூமியைக் குறித்து நாம் கவனமாய் கருத்தில் சிந்திக்கும்பொழுது நடைமுறைக்குரிய அநேக காரியங்கள் நம் மனதில் வரும்.  அவைகளை தற்காலிகமாக ஓரங்கட்டிவிட்டு, தேவனை அவரது வார்த்தையின்படி பிடித்துக் கொள்ளுவோம்.  அசைக்கமுடியாத விசுவாசத்தோடு அவரது ராஜ்யம் வருவதற்காக ஜெபிப்போமாக.  கிறிஸ்து ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் உலக ஆளுகையின் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு பூமியில் ஆளும்போது, மனுக்குலத்து பெருவாரியான ஆண்களும், பெண்களும் தேவனுடைய உன்னத அன்புக்கு நிச்சயமாக செவி சாய்ப்பார்கள்.  அந்த நித்திய ஜீவனுக்குள் அதன் எல்லா பூரணத்தில் பிரவேசிப்பார்கள்.  அதுவே நமது ஆரம்ப அசல் இறுதி விதியாகும் (destiny).

28.2 வடிவிலும், அம்சத்திலும், செம்மையாகவும், குணாம்சத்தில் உன்னதமாகவும், தேவனுடைய நீதியான பிரமாணங்களோடு மனதிலும் இருதயத்திலும் மாற்றக்கூடாதவாறு இணைத்துக் கோர்க்கப்பட்டவர்களாகவும், வரவிருக்கிற மகிமையான யுகங்களுக்குள் பிரவேசிப்போம்.  அதாவது தேவனுடைய நித்திய நோக்கத்தில் மேலும் மேலும் அவைகள் நமது இடத்தை வெளிப்படுத்திக் கொடுக்க நாம் அந்த மகிமையான யுகங்களுக்குள் பிரவேசிப்போம்.

TWO SALVATIONS – BS 792    

Joh 5:28  இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;



வேதாகமத்தில் யேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து “இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.” லூக்கா 2:10 என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இன்றைய கிறிஸ்தவ மண்டலம் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் இந்த நற்செய்தியை அறிவிக்காமல், இந்த உலகில் கிறிஸ்துவை அறியாதவர்கள் புற மதத்தவர் எல்லோரும் உயிர்த்தெழுப்பப்பட்டு வேதனையை அனுபவிக்க நரகத் தீயில் தள்ளப்படுவார்கள் என்று தவறான போதனையை பரப்புகிறார்கள்.

“ ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” – 1 கொரி 15:22 என்று வேதாகமம் சொல்கிறது. உயிர்த்தெழுந்தபின் தீமையை வெறுக்கவும் நீதியாய் நடக்கவும் கிறிஸ்துவின் ஆளுகையில் கற்றுக் கொள்வார்கள். 



பேய் பிடித்திருப்பது சிலருக்கு மன நல பிரச்சினையாகஇருக்கலாம். ஆனால் சிலருக்கு அது மனநல பிரச்சினை அல்ல. கிறிஸ்துவும் அசுத்த ஆவிகளை விரட்டியிருக்கிறார் இல்லையா. ஆகவே அசுத்த ஆவி பிடிப்பது உண்மைதான் . அவைகள் விழுந்து போன தேவ தூதர்கள். நோவா காலத்தில் தங்ககளது மேன்மையை இழந்து பாவம் செய்த தூதர்களின் வேலையே. இந்த அசுத்த ஆவிகள்.

" ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்க்கு போகின்றது. " என்பது உயிர் மூச்சை குறிக்கிறது. ஆதாமின் உடலை உருவாக்கிவிட்டு அவனுக்கு சுவாசத்தை கொடுக்கிறார். உடனே அவன் ஜீவ ஆத்துமா ஆனான். அதாவது சுவாசிக்கும் இயங்கும் உயிர் ஆகிறான். மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இந்த இயக்கம், அல்லது ஜீவ ஆத்துமா ஒன்றே

 

மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. 
20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. - Ecc 3:19

சுவாசமே மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் உயிராகிறது. ஏனென்றால் பிராணவாயு மூளைமுதல் உடலின்எல்லாபாகங்களுக்கும் அவசியம். அதைக் கொண்டு போவது ரத்தம். ரத்தத்தை இயக்குவதற்கே இதயம். ஆகவே சுவாசமே ஒரு உயிருக்கு அடிப்படை.

 

அதன் இயக்கம் என்பது தேவனுடைய ஆவியால், அதாவது தேவனுடைய சக்தியால் இயக்கப் படுகிறது. தேவன் அதை அந்த சக்தியை எடுத்துக் கொள்ளும்போது மனிதனும் , மிருகமும் மாண்டு போகின்றனர்.

மனிதனின் மூளையில் பதிந்திருக்கும் நினைவுகள்தான் அவனது குணாம்சத்தை, தனிப்பண்பை (personolity ) காட்டுகிறது.

தேவன் இந்த நினைவுகளை , குணாம்ச பண்புகளை பாதுகாத்து உயிர்த்தெழும் நாளில் புதிய சரீரத்தில் வைத்து உயிர்க் கொடுக்கிறார். நாம் அன்று மீண்டும் உயிரடைந்து இதே நினைவுகளோடு குணங்களோடு வருவோம்.

"வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது”- 2 தீமோ. 3 : 16, 17.


புத்தகங்களுக்கெல்லாம் புத்தகம்


"நீதியின்மேல் (சரியானதும், உண்மையானதும், நன்மையுமானவை) பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் (வேறு யாருமல்ல) திருப்தியடைவார்கள்”. "கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்: தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை (பாவம், தப்பறை, அறியாமை, மூடபக்தி, மனிதனுண்டாக்கிய குழப்பமுள்ளதும் ஒன்றுக்கொன்று முரணானதுமான சித்தாத்தங்கள், விசுவாசப்பிரமாணங்கள், மதங்கள் ஆகியவற்றிலிருந்து) விடுதலையாக்கும்” என்று இயேசு வாக்குத்தத்தஞ் செய்கிறார். (மத். 5:6; லூக். 11 : 9, 10; யோவா. 8 : 32)


சத்தியத்தை நாம் எங்கே கண்டுபிடிப்போம்?


வெளிப்படுத்தப்படும் சத்தியத்தை, மனிதன் அறிந்து கொள்ளும்படி அவனுக்கு சக்தியைக் கொடுத்த ஞானமுள்ள சிருஷ்டி கர்த்தா ஒருவர் இருக்கிறார். “பரத்திலிருந்து வருகிற ஞானமாகிய” சுத்தமான சத்தியத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமான ஜோதிகளின் பிதாவாகிய தேவனை நாம் தேட வேண்டும். (யாக். 1: 5, 17; 3: 17) சாத்தானென்றும், பிசாசென்றும், பழைய பாம்பென்றும் அழைக்கப்பட்டு உலகமனைத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிற, “பொய்களின் பிதாவை” நாம் நம்பக்கூடாது. (ஆனால் சாத்தானையே மக்கள் அதிகமதிகமாக வெளியரங்கமாகக் கூட வணங்குகிறார்கள்). “உங்கள் எதிராளியாகிய இவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோவென்று வகை தேடிச் சுற்றித்திரிகிறான்” “இப்பிரபஞ்சத்தின் தேவனாகிய” இவன் “ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்து. (தேவனுடைய வசனத்தை) விசுவாசியாதவர்களின் மனதைக் குருடாக்கினான்.” அவன், “ஆதி முதற்கொண்டு மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான். சத்தியம் அவனிடத்தில் இல்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை. அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” (வெளி. 12 : 9; 1 பேது. 5 : 8; 2 கொரி. 4 : 4; 11: 14; யோவா. 8 : 44;14 : 30; 16 : 11).


ஆகையால், தெய்வீக சத்தியத்தை தேடுகையில், எவரும் சாத்தானால் ஏவப்பட்ட மனிதனுடைய கோட்பாடுகளிலும், விசுவாசப் பிரமாணங்களிலும் தேடலாகாது. சத்தியமல்லாதவையாயினும் சத்தியமென உரிமை கொண்டாடும் இவைகள் மனுஷரால் எவ்வளவு விரும்பப்பட்டவைகளாயினும் கவலையில்லை; இவைகளில் சத்தியத்தைத் தேடாது பரிசுத்த வேதாகமத்தில் தேட வேண்டும். (வேதாகமத்திலுள்ள அநேக உள்ளான, புறம்பான அத்தாட்சிகள் அது தேவனுடைய வாக்கு, சத்தியம் என நிரூபிக்கிறது) இதைக் குறித்து இயேசு, “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” என்று கூறினார். (யோவா. 17 : 17; 6: 63).


"கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்கத்தக்கது” பரிசுத்த வேத எழுத்துக்களே; ஏனெனில், “வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும். கடிந்து கொள்ளுதலுக்கும். சீர்திருத்தலுக்கும். நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறது.”  (2 தீமோ. 3:15-17)

 


வேத சத்தியத்தை அறிய விரும்பும் ஒருவன் உண்மையும், தாழ்மையும், சாந்தமும், முன்னுள்ள தனது அபிப்பிராயங்களையும்கூடத் தள்ளிப்போடவும் விருப்பமுடையவனாயும் இருக்க வேண்டும். 'தேவன் சத்தியபரராயிருப்பது எந்த மனிதனையும் பொய்யனாக்குகிறது”. என்பதை ஒருவன் ஒப்புக் கொள்ளவேண்டும். “இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை." இப்படியாக ஒருவனுடைய விசுவாசம் மனுஷனுடைய ஞானத்திலே நிற்காமல், தேவனுடைய பெலத்திலேயே நிற்கிறது. (ரோம. 3 : 4;ஏசா. 8 :20; 1கொரி. 2 : 4, 5).


ஜோதிகளின் பிதாவுக்கு எதிராகப் பொய்களின் பிதா :


ஜோதிகளின் பிதா ஆதாமிடம் சொன்னது: "அதை நீ புசிக்கும் நாளில் (கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருடங்கள் போல இருக்கிறது - 2 பேது. 3: 8; சங். 90 : 4 - ஆதாம் 930 வயதில் மரித்தான்) நீ சாகவே சாவாய்." (நீ செத்துக்கொண்டே சாவாய் மார்ஜினில் பார்க்கவும்) (ஆதி. 2 : 17) - ஆனால் பொய்களின் பிதா பகிரங்கமாகவே தேவன் சொன்னதை மறுத்து, “நீங்கள் சாகவே சாவதில்லை” என்ற மாபெரும் நிரந்தரமான முதற்பொய்யை ஏவாளிடத்திலே சொன்னான். (ஆதி. 3 : 4).


மரணத்தில், “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால். நீ பூமிக்கு திரும்புவாய்; நீ மண்ணாயிருக்கிறாய். மண்ணுக்குத் திரும்புவாய்” என ஜோதிகளின் பிதா ஆதாமுக்குத் தண்டனை விதிக்கும்போது, அவனுக்குச் சொன்னார் (ஆதி. 3 : 19); ஆனால் பொய்களின் பிதா இதற்கு மாறாக, ஆதாம் மரணத்தில் அவன் முன்னிருந்த நிலைமைக்கு 'திரும்பவில்லை'; ஆனால், இன்னும் ஜீவனோடிருந்தே, முற்றிலும் ஓர் புதிய நிலைமைக்குப் போனான் என்று பொய் சொல்லுகிறான்.' 

 

சரித்திரம் நிரூபிக்கிறதுபோல, ஜோதிகளின்பிதா, அவர் விதித்த மரண தண்டனையை எல்லா இடங்களிலுமுள்ள மானிட சந்ததிகள் மீது நிறைவேற்றிவிட்டார். ஆனால், பொய்களின் பிதாவோ ஏவாளை, அவளும், ஆதாமும், அவன் சந்ததியாரும் 'தேவர்களைப் போல' (தூதரைப் போல) என்றென்றும் சிரஞ்சீவிகளாக வாழ்வார்களென நம்பும்படி ஏமாற்றிவிட்டான். (ஆதி. 3: 5;1 தீமோ. 2 : 14).


ஜோதிகளின் பிதா, இச்சத்தியத்தைத் தெளிவாய் நமக்குத் தந்து, இவ்வெளிச்சத்தில் பவுல் அப்போஸ்தலன் மூலமாய்க் கிறிஸ்தவர்களுக்குப் பின்வருமாறு கூறினார். "ஆகிலும். சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." (2 கொரி. 11 : 3) - ஆனால், பொய்களின் பிதாவோ, ஒருபொழுதும் ஆவியினால் ஜெனிப்பிக்கப்படாதவனாய், மனிதப் பிராணியாகவே சிருஷ்டிக்கப்பட்ட ஆதாம், எவ்விதமோ ஆவிக்குரிய மரணமடைந்தான் என்றும், மரணத்தில் அவனும், அவனுடைய சந்ததியார் அனைவரும் மேலும் ஜீவனோடிருக்கிறார்கள் (பரலோகத்தில் அல்லது நித்திய சித்திரவதையில், அல்லது இவை இரண்டிற்கும் இடையேயுள்ள ஓர் உணர்வுள்ள நிலைமையில்) என்றும்; ஆகையால் உயிர்த்தெழுதலின் நாளுக்கு அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையென்றும் கூறி, அநேகரை ஏமாற்றுகிறான்.


ஜோதிகளின் பிதா, "மனுப்புத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும். அவர்களுக்கும், இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு. இவைகள் சாகிறது போலவே அவர்களும் சாகிறார்கள். ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல, எல்லாம் ஒரே இடத்திற்குப் போகிறது. (பரலோகத்திற்கோ, நித்திய நரக வேதனைக்கோ அல்ல). எல்லாம் மண்ணிலே உண்டாகிறது: எல்லாம் மண்ணுக்கு திரும்புகிறது” (பிர. 3 : 19, 20; சங். 49 : 14) என்று கூறுகிறார் - ஆனால், பொய்களின் பிதாவோ, “மரணத்திற்குப்பின் அநேக மனிதருடைய கதி, மிருகங்களை விடப் படுமோசமடைகிறது. மிருகம் மரணத்தில் ஜீவனற்று அழிந்து போவதினால் அதற்கு எவ்விதமாக துன்பமுமில்லை. ஆனால், மனு மக்களோ உண்மையாகவே மரிக்காமல் ஏறக்குறைய அவர்களெல்லாரும் ஜீவனோடிருந்து - நித்திய நரக வேதனையில் வாதிக்கப்படுகிறார்கள், என்று கூறுகிறான். 

 

ஜோதிகளின் பிதா, “மனிதன் ஜீவாத்துமாவானான்." [எபிரெய பதம் : நாபேஷ் = உணர்ச்சியுள்ள பிராணி] "பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்,” “ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க கூடாதே(ஆதி. 2 : 7; எசே. 18 : 4, 20; சங். 22 : 29; 30 : 3; 78: 50) என்ற கூறுகிறார். ஆனால், பொய்களின் பிதாவோ, மனிதனுடைய ஆத்துமா தன்னில் தானே ஜீவனுடையது என்றும்; அது, சாகவே முடியாதென்றும்; அது ஏதோ ஓர் அணு போன்ற மிக நுட்பமானதும், பிரிக்கக்கூடாததும், பார்க்கக்கூடாததுமாக அவனுக்குள்ளேயே இருந்து, சதாகாலமும் அவசியம் உயிரோடிருக்க வேண்டியது என்று உபதேசிக்கிறான்.

ஜோதிகளின் பிதா, "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். (மரண நிலைக்கு எதிரானது)” (ரோம. 6 : 23) என்று கூறுகிறார். ஆனால், பொய்களின் பிதாவோ, இதற்கு நேர்மாறாகப், “பாவத்தின் சம்பளம் (தண்டனை) மரணமல்ல; நரக வேதனையுள்ள நித்திய ஜீவன் என்றும், பொல்லாதவர்கள் தேவனிடமிருந்து கிறிஸ்துவின் மூலம் நித்திய ஜீவனை ஈவாகப் பெறாமல் தேவன் தாமே அழிக்கக் கூடாததாய் அவர்களுக்குள்ளிருக்கும் ஆத்துமாவாலேயே நித்திய ஜீவனைப் பெறுகிறார்களென்றும் உபதேசிக்கிறான். இவ்விதமாகத் தேவன், "ஆத்துமாவையும். சரீரத்தையும் நரகத்திலேயே அழிக்கக் கூடியவராக இருக்கிறார்” என்று இயேசு கூறியதற்கும் எதிரிடையாகக் கூறுகிறான். [இங்கே நரகம் என உபயோகித்திருக்கிற வார்த்தைக்கு மூல பாஷை, ஹேட்ஸ் அல்ல, கெஹென்னா அதாவது இன்னோம் பள்ளத்தாக்கு என்ற பதம். இது இரண்டாம் மரணமாகிய நித்தியமான பரிபூரண அழிவைக் குறிக்கிறது]. (மத். 10 : 28). 

 

ஜோதிகளின் பிதா, "மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்" "அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்." "அவனுடைய ஆவி பிரியும். அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” “மரணத்தில் உம்மை நினைவு கூர்வதில்லை. பாதாளத்தில் (grave - கல்லறைக் குழியில் மரண நிலையில்) உம்மைத் துதிப்பவன் யார்?" (பிர. 9 : 5, 10; யோபு 14 : 21; சங். 146 : 4;6 : 5; 115 : 17)…. ஆனால், பொய்களின் பிதாவோ, இதற்கு நேர் விரோதமாக - அடிக்கடி திறமையுள்ள போதகர்கள், சித்திரக்காரர்கள் மூலம் - இறந்து போன பெற்றோர், ஆவி உலகத்தில் இன்னும் உயிரோடிருந்து, பூமியிலுள்ள தங்கள் குழந்தைகளை நடத்துகிறார்கள் என்று கூறுகிறான்.


ஜோதிகளின் பிதா, “(தம்மைத் தவிர) இயேசு ஒருவர் மாத்திரமே சாவாமையுள்ளவர்” (1 தீமோ. 6 : 16) என்று கூறி, முதலாம் உயிர்த்தெழுதலில் (அதற்கு முன்னல்ல) அவர் அவர்களுக்கு “அளிக்கப் போகிற” மகிமை, கனம், அழியாமையைத் தேடும்படி திருச்சபைக்கு அவர் போதித்தார். "தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினையின் நாளிலே" - இங்கே சுவிசேஷ யுக முடிவிலுண்டாகும் மகா உபத்திரவ காலத்திலே - கிறிஸ்துவின் மணவாட்டியாக அவர்கள், "அவரைப்போல”, மாற்றப்பட்டு "அழியாமையைத் தரிப்பார்கள்” என்று கூறுகிறார். (ரோம. 2 : 5-7; வெளி. 20: 6; தானி. 12: 1-3;1 யோவா. 3 : 2;1 கொரி. 15: 53, 54). ஆனால், பொய்களின் பிதா, "மனித ஆத்துமா தன்னில்தானே ஜீவனுள்ளதாகையால், அழியாமையுள்ளதென்றும், உனக்கு இயற்கையாகவே உள்ளதும், மனிதனாகப் பிறந்தது முதலே உனக்கு உண்டாயிருந்ததுமான அழியாமையைத் “தேடுவதும், அணிந்து கொள்வதும் மூடத்தனமானது” என்று கூறுகிறான்.


ஜோதிகளின் பிதா, இவ்வாறு கூறுகிறார் “இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.” (கொலோ. 1:18; வெளி. 1: 5) அவருடைய வசனத்தின் மூலம் ஆவியினால் ஜெனிப்பிக்கப்பட்டு (யோவா. 3:5; 1கொரி. 4 : 15; யாக். 1 : 18; 1 பேது. 1: 3, 23, 25) பின்பு இயேசுவைப் போல மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலில் ஆவி ஜீவியாகப் பிறந்தவர்கள் மட்டுமே பரலோகத்தில் மானிடக் கண்களால் பார்க்கக்கூடாத நிலைமையில், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கக் கூடும். ஆகையால், இயேசுவின் முதலாம் வருகைக்குமுன் “பரலோகத்துக்கு” ஏறினவன் "ஒருவனுமில்லை" (யோவா. 3 :13) என்றும் பெந்தேகோஸ்தே சமயத்தில் தாவீது “பரலோகத்துக்கு எழுந்து போகவில்லையே”(அப். 2 : 29-34) என்றும், இயேசுவின் இரண்டாம் வருகை வரையிலும் அப்போஸ்தலர்கள் கூடத் தங்களின் பரலோகப் பரிசான அழியாமையால் முடி சூட்டப்படக் காத்திருக்க வேண்டியதாயிருந்தது என்றும். (வெளி. 2 : 10; 1 கொரி. 15: 48-54; கொலோ. 3 : 4; 1 தெச. 4: 13-17;2 தீமோ. 4 : 8; 1 பேது. 1: 4, 5, 13; 5: 4; யோவா. 14 : 2, 3; 1 யோவா. 3: 2). ஆயிர வருட நியாயத் தீர்ப்பு நாளில் அச்சமயம் நடைபெறும் "நீதிமான்களின் உயிர்த்தெழுதலில்” (அப். 17 : 31; 2 பேது. 3 : 7, 8) பூர்வ காலத் தீர்க்கத்தரிசிகளுடன் தமது ஜனங்களுக்கெல்லாம் கிறிஸ்து பலனளிக்கிறார் என்றும் கூறுகிறார். (மத். 16 : 27; லூக். 14 : 14; வெளி. 11: 18; 20 : 12; 22 : 12)...... ஆனால் பொய்களின் பிதாவோ, ஒருவரும் காத்திருக்க வேண்டியதில்லை; ஆனால் மரணத்தில் எல்லாரும் நியாயந்தீர்க்கப்பட்டு, பரலோகத்தில் நித்திய ஜீவனையோ அல்லது பாப்பு மார்க்கத்தாரும், மற்றும் பெரும்பாலான புரோட்டஸ்டான்டு மார்க்கத்தாரும் பிற மதத்திலிருந்து எடுத்துக் கொண்ட எரிநரக நித்திய வேதனையையோ அடைகிறார்கள் என போதிக்கிறான்.


ஜோதிகளின் பிதா "உயிர்த்தெழுதலின் காரணமாக ஆதாமுக்குள் மரிக்கிறவர்கள் முற்றிலும் நிர்மூலமாகிப் போகவில்லையென்றும். பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டுப் புறப்பட்டு வருங்காலம் வருகிறது.

 

ஏனென்றால் கிறிஸ்து. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார். இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது.” ஆகையால், “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், (ஆதாமுடைய தண்டனையிலும், மரணத்திலுமிருந்து) சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார்." அதன் பின்பு அவரிடமிருந்து நித்திய ஜீவனைப் பெறும் ஒரே ஒரு பூரண அவகாசத்தை ஈவாக அடைய வேண்டும். (உலக ஜனத்தொகை வீதத்தைப் பார்க்கும் பொழுது இதுவரை சொற்பப் பேருக்குத் தான் இவ்வாய்ப்பு கிடைத்திருக்கிறது). ஆகையால், உணர்வற்ற மரண நித்திரையில், "பூமியின் தூளில்" "நித்திரையடைந்தவர்களினிமித்தம் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போல நாம் துக்கப்படுகிறதில்லை” ஏனென்றால் "அவர்கள் விழித்தெழுந்திருப்பார்கள்” “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” (யோவா. 5 : 28, 29; 1 தீமோ. 2 : 4-6; 1 தெச. 4: 13-17;தானி. 12 21கொரி. 15 : 22) ஆகையால் பொய்களின் பிதாவோ, “நீங்கள் சாகவே சாவதில்லை” - நீங்கள் மரிக்கிறது போலத் தோன்றும்; ஆனால், உங்களுடைய சரீரம் மாத்திரம் மரணத்தில் நித்திரையடைகிறது; நீங்கள் (அதாவது உங்கள் ஆத்துமா) முற்றிலும் விழித்திருக்கிறது; முன்னிலும் அதிகமாய் ஜீவனோடிருக்கிறது, உங்களுக்கு ஒரு போதும் உண்மையாகவே தேவைப்படாத உங்கள் மாம்ச சரீரமானது ஆத்துமாவுடன் திரும்பவும் சேர்த்து கட்டப்படுவதுதான் உயிர்த்தெழுதல் என்று போதிக்கிறான்.

 

 ஜோதிகளின் பிதா, - பாவத்தின் கொடிய பலாபலன்களை மனுக்குலம் அனுபவத்தால் கற்றறிந்த பின் அவர், அவருடைய ஞானம், நீதி, அன்பு, வல்லமையாகிய குணசீலங்களுக்கிணங்கத் திருந்தக் கூடாத துன்மார்க்கர் யாவரையும் அழித்து பிரபஞ்சத்தைச் சுத்தமாக்குவார் – “துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.” "அவர்கள் இராதவர்களைப்போல் இருப்பார்கள்.” "துன்மார்க்கன் இரான்” “அழிந்து போவார்கள்" "புகைந்து போவார்கள் " (சங். 145 : 20; 37 : 10, 20; ஒப. 16) அவர்கள் நித்திய ஆக்கினையை அடைவார்கள். [மத். 25 : 46 ஆக்கினையென்று மொழிபெயர்க்கப்பட்ட “கொலாசின்” என்ற கிரேக்க வார்த்தையானது அறுப்புண்டு போதல் வெட்டுண்டு போதல் என்று அர்த்தமுள்ளது; (முடிவற்ற) நித்திய வேதனையல்ல. ஜீவனின்றி நித்தியமாய் அழிந்து போகுதல், நித்திய மரணம் - முற்றிலும் பூரண, நித்திய அழிவாகிய “இரண்டாம் மரணத்தை” அடைவார்கள். ஏனெனில் "பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோம. 6 : : 23)] ஆனால் இதற்குமாறாக “நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்." (மத். 25 : 46) - ஆனால் பொய்களின் பிதா, தேவனுடைய பரிசுத்த குண இலட்சணங்களை மறுத்துத் தள்ளி, தம்முடைய மனுஷ சிருஷ்டிகளில் கோடானு கோடிப் பேரைப் பேய்த்தனமாக, கொடூரமாகப் பழிவாங்கும் நோக்கமாய் நித்திய காலமாகச் சித்திரவதை செய்வார் என்று அவரை வர்ணித்துத் தூஷிக்கிறான், ஷியோல் என்ற எபிரெய வார்த்தையையும், ஹேட்ஸ், ஹெகன்னா என்ற கிரேக்க பதங்களையும் பெரும்பாலான மனுமக்கள் சித்திரவதை செய்யப்படுகிற இடம் என்ற தப்பான அர்த்தங்கொடுக்கத்தக்கதாகச் சாத்தான் பிழையாக மொழிபெயர்த்து அவற்றைத் தப்பிதமாகப் பிரயோகித்து, தப்பான உரை விளக்கங் கொடுத்திருக்கிறான்.


ஜோதிகளின் பிதா, அழிவை அறிகுறியாக அடையாளப்படுத்திக் காட்டுவதற்கு “அக்கினியை” உபயோகிக்கிறார். அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும் (அவர்களின் முழு அழிவில்) - நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்) (யூதா 7) - அக்கினி நித்தியமாய் எரிகின்றது என்றல்ல. அது அவர்களை நித்தியமாய் அழித்துப்போட்டது. பட்டணங்களை, ஜனங்களையல்ல - அவர்கள் இரட்சிப்படைய அவர்களுக்கு எதிர்கால நல்வாய்ப்பிருக்கிறது. (எசே. 16 : 46-63; மத். 10 ; 15; லூக். 10 : 11, 12). எனவே, அக்கினி அழிவை உருவகமாகக் காட்டுகிறது. (ஏசா. 66:24; மாற். 9 : 43-48-ல் கூறப்பட்டிருக்கிறதிலுள்ளபடி புழுவும், நரகமும் அழிவைத்தான் குறிப்பிடுகின்றன. (மேற்கண்ட வாக்கியங்களில் வரும் நரகம் என்ற பதம் ஆதாமுக்குள் மரிக்கிற உணர்வற்ற நித்திரை நிலைமையைக் குறிக்கிற ஹேட்ஸ் (Hades) அல்ல உதவாப் பொருட்களை அழிக்கிற இடமாகிய இன்னோம் பள்ளத்தாக்கைக் குறிக்கும் 'கெஹென்னா' (Gehenna) என்ற கிரேக்க வார்த்தையானது, வெளி. 20 :14, 15; 21: 8-ல் கூறப்பட்டிருக்கிற அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலாகிய ‘இரண்டாம் மரணத்தையே' குறிக்கிறது - ஜீவனையல்ல) - ஆனால், பொய்களின் பிதா அவனுடைய ஆதிப் பொய்யை ஆதரிப்பதற்காக அக்கினி (அழிவையல்ல) ஆனால் பத்திரப்படுத்துதலைக் குறிக்கிறதென்றும்; அக்கினிக்கடல் இரண்டாம் மரணமல்ல ஆனால் இரண்டாம் ஜீவன் என்றும்; நித்திய ஜீவன் என்பது அக்கினியால் பாதிக்கப்படாத பிசாசுகள் முதலியவற்றால், சொல்ல முடியாத அளவு வாதையில் துன்பப்படுவதாகும் எனப் போதிக்கிறான்.


ஜோதிகளின் பிதா, நித்திய அக்கினி (அழிவு) “பிசாசுக்காகவும். அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது” (மத்.25 : 41). அவன், அக்கினிக் கடலில் தள்ளப்படுவான். (இரண்டாம் மரணம் - முற்றிலும்
பூரணமான நித்திய அழிவு) இரவும் பகலும் சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். [வாதிக்கப்படுவார்கள் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் 'பசானிசோ'. இவ்வார்த்தை முதலிற் ‘சோதிக்க’ என்ற அர்த்தமுடையது. (பின்பு சந்தேகப்பட்ட குற்றவாளிகளைச் சோதிக்கும்பொழுது அவர்களை வாதிக்கிறதுண்டு. இவ்விரண்டாம் கருத்தையே இப்பொழுது தப்பிதமாக எடுத்துக் கொண்டார்கள்.) ஏசா. 14 : 16;66 : 24 வசனங்களை ஒத்துப்பார்க்க. நீதிமான்கள் திருந்த முடியாத பொல்லாதவர்களின் போக்கு பற்றி நித்திய காலமாகச் 'சிந்திப்பார்கள்' வெளியே போய் உற்றுப் பார்ப்பார்கள்” அதாவது மனதிலே சிந்தனை செய்து, சோதித்து, பரிசீலனை பண்ணி அதன்பயனாகப் பிரிக்க முடியாதபடி பொல்லாதவர்கள் தீமையுடன் இணைக்கப் பட்டிருந்தால் அவர்கள் நியாயமாகவே அழிவுக்குத் தகுதியுள்ளவர்கள் தான் எனத் தீர்மானிப்பார்கள்](வெளி. 20 :10) “மரணத்திற்கு அதிகாரியான பிசாசானவனைக் கிறிஸ்து அழிப்பார்” என்றும் (எபி. 2 : 14) சாத்தான் லூசிபராக (வெளிச்சம் சுமக்கிறவன்) "தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தான்” – “உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டது மட்டும் குறையற்றிருந்தாய்” என்று கூறப்பட்டிருப்பவன் முழுவதும் நித்திய காலமாய் நாசமாக்கப்படுவான் - "இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்” (ஏசா. 14 : 17-20; எசே. 28 : 11–19) என்று கூறுகிறார். ஆனால் பொய்களின் பிதாவோ, அவனுடைய இறுதியான அழிவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை நிச்சயமாகவே விரும்பாதபடியால் பின்கண்டவாறு வஞ்சிக்கிறான். (1) சிலரை (கிறிஸ்தவ விஞ்ஞானிகள்' முதலியவர்களை)த்தான் ஒரு ஆள் அல்லவென்று மறுக்கவும், பொல்லாத வெறுங் கொள்கைகள் என்று உரிமை கொண்டாடவும், (2) வேறு சிலரை (சகல மனிதரும் இரட்சிக்கப்படுவார்களென்ற கொள்கையுடையவர்கள் முதலியவர்களை) “அக்கினிக் கடல்” என்பது சுத்தமாக்கிப் பத்திரப்படுத்துதல் என்பதைக் குறிக்கிறது - சகலரும் நித்திய ஜீவனையடைய இரட்சிக்கப்படுவார்கள் என்று நம்பவும் (3) மேலும் மற்றவரை தேவன் இல்லையென்றும், வேதாகமம் நம்பத்தகாதது, அது தேவ வெளிப்படுத்துதல் அல்லவென்று மறுக்கவும், செய்யும்படியாக வஞ்சிக்கிறான். 

 

இவ்வாறாக, , “அன்பாயிருக்கிற” (1 யோவா. 4 : 8) தேவனாகிய ஜோதிகளின் பிதாவிடம் கடைசியில் சுத்தமான பிரபஞ்சம் இருக்கும். பொல்லாதவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு பொல்லாங்கு என்றென்றும் செயல்படாது ஓய்ந்துபோம் - “நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்." (சங். 107 : 42). அப்பொழுது வானத்திலும் பூமியிலுமுள்ள சர்வ சிருஷ்டியும் தேவனையும் கிறிஸ்துவையும் துதித்து, "சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும். ஆட்டுக்குட்டியானவருக்கும். ஸ்தோத்திரமும், கனமும். மகிமையும். வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக” என்று பாடுகிற மாபெரும் நித்திய கீர்த்தனையைச் சேர்ந்து பாடுவார்கள். (வெளி. 5: 13, 14).

உலகத்தில் பஞ்சங்கள்,  நாசங்கள் ஏன்?

மனிதர்களிடையே யுத்தம், ஏன்?

ஏன் தீமை செயல்படுகிறது?

நோய்கள் மரணம் ஏன்?

ஏன் இந்த அழிவுகள்?






மனிதர்களால் யுகங்களாக தேடப்பட்ட பதில்




கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்?













மனிதர்களால் யுகங்களாக தேடப்பட்ட பதில்

 

உலகத்தில் அழிவுகள்,  நாசங்கள், மனிதர்களிடையே யுத்தம், ஏன்? கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால், ஏன் இந்த அழிவு? ஏன் தீமை செயல் படுகிறது? நோய்கள் மரணம் ஏன்? கடவுள் அன்பாக இருக்கிறார் எனில் ஏன் மனிதர்கள் வதை பட தீமையில் உழழ அனுமதிக்கிறார்? இக் கேள்விகள் மனிதர்களுக்கு எப்பொழுதுமே புரிபடாத, விடை தெரியாத கேள்விகளாகவே இருந்து வந்திருக்கிறது. பல தத்துவ ஞானிகளுக்கும் குழப்பமான, புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருந்து வந்திருக்கிறது.

 

ஆனால் வியக்கவைக்கும் வகையில் உற்சாகமூட்டும், பகுத்தறிவுக்கு ஏற்ற பதிலை வேத எழுத்துக்கள் கொடுக்கின்றன.



கடவுள் தீமைக்கு காரணர் அல்ல, தீமையை அவரால் செய்ய முடியாது

 

தேவன் இயற்கையிலும் மனுஷரிடையேயும் சூழ்ந்திருக்கிற தீமையான காரியங்களை நேரடியாக உண்டுபண்ணாதிருந்தாலும், அத்தீமையை மனுஷருடைய  கீழ்படியாமை, பாவத்திற்கான நியாயமான பின்விளைவாக அனுமதித்திருக்கிறார்.  இருப்பினும், மனிதனின் தீமை விளைவிக்கும் கடுங்கோபத்தையும், மனிதர்களுடைய பாவச்செயல்களையும், தேவனுக்கு எதிரான சாத்தானுடைய பகைமையையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத உயரிய திட்டத்தை செயல்படுத்த உபயோகபடுத்துகிறார்.  தேவபிள்ளைகள் அவருடைய வார்த்தையின் வெளிப்பாடாகிய வேதத்தின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக மட்டுமே அதனை அறிகிறார்கள்.

 

உதாரணமாக தேவ ஆட்டுக் குட்டியானவரை அவமாரியாதை செய்தபோதும், கேலி செய்தபோதும், சிலுவையில் அறையும்போதும் சாத்தானுக்கும் அந்த தீயநோக்கம் கொண்ட யூத குருமார்களுக்கும், பரிசேயர்களுக்கும் மற்றும் இதயமில்லாத ரோம வீரர்களுக்கும் தாம் தேவ திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உதவுகிறோம் என்பதை எவ்வளவு குறைவாகவே அறிந்திருந்தார்கள்!.

 

சிலர் எல்லா காரியங்களையும் செய்யக்கூடிய தேவன் சாத்தானுடைய திட்டங்கள் முழுவதுமாக நிறைவேறுமுன்னே அதை தடுக்க ஏற்ற சமயத்தில் தலையிட்டிருக்க முடியாதா? எனக் கேட்கின்றனர். சந்தேகமின்றி முடியும்,

 

ஆனால் அப்படியான தலையீடு தேவனுடைய உயரிய நோக்கத்தை நிறைவேறவிடாமல் தடுத்திருக்கும். அவருடைய நோக்கமானது அவருடைய பிரமாணத்தின் தவறற்ற நிலை, அதின் மாண்பு, அதின் நீதியான அதிகாரம் பற்றி வெளிப்படுத்துவதும் மற்றும் அப்பிரமாணத்தை மீறுவதின் மூலம் உண்டாகும் தீமையான பின்விளைவுகளை மனிதர்களுக்கும், தேவதூதர்களுக்கும் மெய்ப்பிப்பதுவே. இது தவிர இயல்பாகவே வேத வாக்கியங்கள் கூறுகிறபடி தேவனாலேயும் சில காரியங்களை செய்ய முடியாது. தேவனால் “எவ்வளவேனும் பொய்யுரைக்க” முடியாது,  (எபிரெயர் 6:18), “அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்” (2 தீமோத்தேயு 2:13). அவரால் தவறு (தீமை) செய்யக்கூடாது.



நமக்கு நித்திய சந்தோஷமான வாழ்வை கொடுக்கவே விரும்புகிறார்

 

தேவன் மனித இனம் சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும், இசைவாகவும் ஜீவிக்க விரும்புகிறார். அவருடைய இந்த விருப்பம் ஒவ்வொருவரும் நீதியின் கோட்பாடுகளையும் அன்பின் கோட்பாடுகளையும் பின்பற்றி செயல்படுத்தும்போதும் மட்டுமே நிறைவேறும் என்பதை அறிந்திருக்கிறார். இல்லையெனில், துன்பம் மற்றும் சந்தோஷமின்மை ஆகிய பின்விளைவுகளையுடைய தீமையே உண்டாகும்.

 

மனிதன் தன் சிருஷ்டிகருடனும் மற்றும் சக மனிதருடனும் இசைந்து வாழவே தேவன் விரும்பினார். இதற்கு மனிதன் முழுவதுமாக நீதியின் கோட்பாடுகளால் ஊக்குவிக்கப்பட்டால் மட்டுமே தன்னுடைய உண்மையான சந்தோஷத்தை அடைவதற்கும், சக மனிதருடைய சந்தோசத்தில் அக்கறை கொண்ட மனப்பான்மையோடு நிலைத்திருக்கவும் முடியும் என தேவன் அறிந்திருந்தார்.



மனித இனத்தின் சுயசித்தம், சுயமாக சிந்தித்து செயல்படும் தன்மை.

 

கோள்களின் அமைப்பு இயந்திரத்துக்குரிய ஒழுங்கோடு நகருகின்றன. உயிரினங்கள் இயல்பான உள்ளார்ந்த உந்துணர்வால் இயக்கப்படுகின்றன; ஆனால் தேவன் மனித இனத்தை சுய சித்தம் உடையவர்களாக இருக்கவும் மற்றும் அவர்கள் “ஆவியோடும் உண்மையோடும்” (யோவான் 4: 24) தம்மை தொழுதுகொள்ள விரும்பினார். தேவன் மனிதனை செயல்முறைத்திட்டம்பண்ணி தவறுகள் செய்யா மனிதனையும் அதன் மூலமாக குறைகளற்ற பூரணமான ஒரு உலகை உண்டாக்கியிருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட மனிதன் ஒரு யந்திர மனிதனைவிட எந்த விதத்திலும் சிறந்தவனாக  இருந்திருக்க மாட்டான். அவனால் சந்தோஷமாக இருக்கவும் முடியாது. ஆதியாகமத்தின் 3வது அதிகாரம் தெய்வாதீனமாக கொடுக்கப்பட்ட மனிதனுடைய சுயாதீனம் மற்றும் அவனுடைய விருப்பத்தேர்வு குறித்து விளக்க்குகிறது. மனிதன் நீதியை நடப்பித்தால் அவன் நித்தியமாக ஜீவிக்கலாம் என அறிவுறுத்தியிருந்தார். அவன் கீழ்படியவில்லையெனில், “செத்துக்கொண்டே சாவான்”. இங்கு குறித்துக்கொள்ள வேண்டியது பாவத்தின் சம்பளம் மரணம், நித்திய வேதனை அல்ல. (ஆதியாகமம் 2:17, சங்கீதம் 146:4).

 

மனிதன் துன்பம் மற்றும் மரணம் என்றால் என்ன என அறியாதிருந்தான். அவன் கீழ்படியாமற்போனான். இப்போது தேவன், மனிதனுக்கு கட்டுபடுத்தப்பட்ட அளவிலே தீமையோடு கூடிய அனுபவத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் “மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையின் அனுபவம் மூலம் அதை அறியும்படிக்கு அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்” என பிரசங்கி 1:13 ல் மற்றும் பிரசங்கி 3:1௦ ல் படிக்கிறோம். (Young’s literal translation பார்க்கவும்). 



சுதந்திரமாக செயல்படுவதில்  உள்ள சிக்கல் 

 

சுயசித்தம் இருப்பதால் மனிதன் தேவனுக்கு எதிராகக்கூட கலகம் செய்யலாம். மனிதன் தன்னுடைய சுதந்திரத்திற்கு முழுமையாக பொறுப்பானவனாகும் முன், அது தன்னை பெரிய அளவில் பாதிக்கும் என தேவன் நன்றாக அறிந்திருந்தபோதிலும், தேவன் சுயாதீனம் கொடுக்கவே விரும்பினார். என்னே ஓர் வியகத்தகுந்த வல்லமை!. மனிதன் வணங்காகழுத்துடையவனாக தன் சிருஷ்டிகருக்கு எதிராக அடங்காமல் நிற்கலாம். அவருடைய அதிகாரத்திற்கு கீழ்படிய மறுக்கலாம். அவன் தேவனுடைய தயவை ஏற்க மறுக்கலாம் மற்றும் சுயாதீனத்தின் மூலமாக மனிதன் மனிதனாக இருக்கிறான். மிருகம் போலவும் இயந்திரம் போலவும் அல்லாமல் தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறான்.

 

ஒரு தந்தை நெருப்பை தொடக்கூடாது என தன் குழந்தையிடம் அறிவுறுத்தலாம். ஆனால் அனலினால் சுடப்படுவதைக் குறித்து குழந்தைக்கு என்ன தெரியும்?. அறிவுள்ள தந்தை வெப்பத்தின் விளைவை தெரிந்துகொள்ளும் முன் குழந்தையை அடுப்பை தொடுவதிலிருந்து தடுப்பது கூடாத காரியம் என்பதை அறிந்திருக்கிறான். ஆகவே கட்டுபடுத்தப்பட்ட அளவில் சூட்டினை உணரும் அனுபவத்தை உண்டாக்குவான். குழந்தையின் கையை பிடித்து அனல் குறைவாகவுள்ள இடத்தில லேசாகவும் துரிதமாகவும் தொடச்செய்வதன் மூலம் நெருப்பின் ஆபத்தை உணரச்செய்ய முடிகிறது.. மேலும் பிள்ளைகள் சில பாடங்களை கடினமான அனுபவத்தின் மூலமாக மட்டுமே கற்றுக்கொள்வார்கள் என்பதை அறிந்த பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் பிள்ளைகளை எச்சரித்துக்கொண்டேயிருப்பார்கள்.



அவருடைய திட்டம் என்ன? 

 

இப்போதுள்ள தீமையின் ஆளுகையை தேவன் ஏன் அனுமதித்தார்?, அவர் நம் முற்பிதாக்களை பூரணராகவும் நீதி நேர்மையுடையவராகவும்  சிருஷ்டித்த பின்னர் ஏன் சாத்தானை அவர்களை சோதிக்கும்படியாக அனுமதித்தார்?. சாத்தான் தீமை செய்தபோது தேவனால் அவனை அழிக்கமுடியவில்லையா?. ஏன் அவர் தடைசெய்யப்பட்ட மரத்தை நல்ல மரங்களின் நடுவே இடம் பெற அனுமதித்தார்?. இப்படியான கேள்விகளுக்கு பதில் தேடிய பின்னர் கடைசியாக தேவன் மனிதனுடைய வீழ்ச்சிக்கான எல்லா சாத்தியகூறுகளையும் தடுத்திருக்ககூடாதா? என கேள்வி எழும்பும். சந்தேகமின்றி இப்படியான கேள்வி உருவாக தேவனுடைய திட்டத்தை புரிந்துகொள்வதில் உள்ள குறைபாடே காரணம். தேவன், பாவம், கீழ்படியாமை மற்றும் அவைகளின் கொடிய பின்விளைவுகளை பற்றிய எச்சரிப்பை மனிதன் புரிந்துகொள்ளமாட்டான் என்பதை அறிந்திருந்தார். 



ஆகவே தேவன், மனிதன் தன் சுயாதீனத்தின்படி (சுயதெரிந்தெடுப்பின்படி) முதலாவது தீமையை குறித்த அனுபவங்களையும் அதன் பின்னர் நீதியை குறித்த அனுபவங்களை பெறும்படியும் ஒரு திட்டத்தை முறைபடுத்தினார். இப்படியான மாறுபாடான அனுபவங்கள் தவிர வேறு எந்த விதமான செயல்முறையும் அனுபவமும் தேவனுடைய பிரமாணத்தின் அழகையும் நீதியையும், அதை மீறுவதின் மூலமாக வருகிற கொடிய பின்விளைவுகளையும் மெய்பித்து காண்பிக்க பயன்படாது.



நமது சிருஷ்டிகரின் உன்னத திட்டம்

 

அவரால் தவறு (தீமை) செய்ய முடியாது. ஆனால் சில சமயங்களில் நமது கிட்டப்பார்வையானது இத்தகைய எல்லையற்ற ஞான ஊற்றை குறித்து தெளிவாக தெரிந்துகொள்ள முடியாதிருப்பினும், தேவன் தமது சிருஷ்டிகளை உயிர் கொடுத்து உலகில் அறிமுகப்படுத்துவதற்கு ஞானமான மிகச் சிறந்ததொரு திட்டத்தையே அல்லாமல் வேறெதையும் தெரிந்தெடுக்கமாட்டார். நன்மைகள் நிறைந்த தமது திட்டங்களை செயல்படுத்துவதில் சில காலத்திற்கு தீமையையும் தீமை செய்பவரையும் பங்கு பெற அவர் அனுமதிக்கிறார்.

 

இருப்பினும் இது தீமையின் நலனுக்காகவோ அல்லது அவர் பாவத்தோடு ஒத்து இணைவாக இருக்கிறார் என்பதற்காகவோ அல்ல. ஏனெனில் அவர் “துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல“ என அறிவிக்கிறார் (சங்கீதம் 5:4). தீமையை எல்லா கருத்திலும் எதிர்த்தாலும் தேவனுடைய ஞானமானது தமது சிருஷ்டிகளுக்கு தீமையைக் குறித்த நிரந்திரமான அருமையான பாடமாக அமையும் ஒரு வழியாக பார்த்தபடியால் தேவன், தீமையை சில காலத்திற்கு அனுமதிக்கிறார். (அதாவது அதை தடுப்பதில்லை).

 

இதைக் குறித்து பலரும் சரிவர அறியாதிருந்தாலும், தேவனுடைய ஆழங்களை அறியும்படிக்கு “பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களை  அறியும்படிக்கு அருளப்பட்ட” ஆர்வமுடைய, மனத்தாழ்மையுள்ள, கற்றுக்கொள்ளும் மனப்பான்மைமிக்கவர்களுக்கு தேவன் அவரது ரகசியங்களை வெளிப்படுத்துகிறார்.   (மத்தேயு 13:11, 1 கொரிந்தியர் 2:10). 

 

இந்த தேவனுடைய பிரம்மாண்டமான நீதியான திட்டத்தை தெரிந்து கொள்ள விருப்பமிருந்தால் நீங்கள் எங்களை தொடர்பு கொண்டு மேலும் இது  பற்றிய சத்தியங்களை பெற்றுக்கொள்ளலாம்.

 

✡✡✡✡✡✡✡

அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்
மாற்கு 9:44


  1. சதா வதைக்கப்படவும் நித்தியமாய் துன்பப்படவும் நியமிக் கப்பட்ட எரிநரகமாகிய கிஹென்னாவை (Gehenna) உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் ஏற்படுத்தியுள்ளார் என்றும், முற்பிதாவாகிய ஆதாமுடைய பாவத்தின் நினைவாக மனுக்குலம் எல்லாம் இந்த அக்கினியாகிய ஆக்கினிக்குள்ளாகியிருக்கிறது என்றும், ஆனால் 'இடுக்கமான வழியாய்' இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றும் சிறு கூட்டம் மட்டுமே இந்த கொடூரமான நித்திய வேதனையிலிருந்து தப்புவிக்க இயேசுவின் மரணம் ஏற்பாடு செய்கிறது என்றும், மீதியுள்ள அனைத்து திரளான ஜனங்களும் ஆக்கினையடைந்து நித்தியமாய் ஜீவனோடு நரக வேதனையில் அங்கலாய்த்து பாடுபடுவார்கள் என்றும் கூறுகிற கொள்கைகளை பொதுவாக அநேகர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  2. வேறுசிலர் தேவன் அன்பாகவே இருக்கிறார் என்றும், இந்த அவிக்கமுடியாத அக்கினியும், அழிவில்லாத புழுக்களும் இருப்பது தேவையானது என்றும், அவைகளை அவருடைய அன்பு மேற்கொள்ள முடியவில்லை என்றும் கருதுகிறார்கள். மேலும் ஆதியிலே ஏற்பட்ட தேவ ஞானப்பிசகினாலோ/அல்லது தேவ வல்லமை சற்று குறைந்து விட்டதாலோ, சர்வ வல்லவர் கையளவு மக்களை மட்டும் இரட்சிப்பதைவிட மேலாக மீந்த திர்ளான ஜனங்களுக்கு எதுவும் அவரால் செய்யமுடியவில்லை என்றும், மற்ற பெருங்கூட்ட மான மனுக்குலம் முடிவேயில்லாது சதா வதைக்கப்பட்டு துன்பப்படுவார்கள் என்றும், அங்கே அக்கினி அவியாமலும், புழுக்கள் ஒருபோதும் சாகாமலும் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

  3. இவ்வாறு பரிசுத்தவான்களாக தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும், பரலோகத்திற்குச் செல்வார்கள் என்றும், மற்றவர்கள் அனைவரும் பரலோகம் செல்லும் சிலாக்கியத்தை இழந்துபோவது மட்டுமல்லாது ஜீவியகாலமெல்லாம் முடிவேயில்லாது நித்தியமாக வதைக்கப்படுவார்கள் என்றும், பலரும் சிறுபிராயத்திலிருந்து போதிக் கப்படுகிறார்கள். 'சிறு குழந்தைகளின் மனதில் இந்த நரகம் என்பது (வேதத்திற்கு புறம்பாக) வெண்சூடேறிய வெப்பம் மிகுந்த இடம் என வருணித்து சித்திரித்து போதிக்கப்படுகிறது.

  4. அனைத்து மனுக்குலமும் கட்டாயம் நித்திய வேதனையை அனுபவிக்க வேண்டும் என விமர்சிக்கப்பட்டும் புரிந்து கொள்ளப் பட்டும் இருக்கிறது. எந்த ஓர் சிருஷ்டியும் தொடர்ந்து நித்திய வேதனையை எவ்வளவுதான் தாங்கமுடியுமோ என்று நாம் ஆச்சரியத்துடன் வியப்படைந்தால், அதற்கு பதிலாக தேவன் அவருடைய சர்வ வல்லமையைப் பயன்படுத்தி நம்மை அந்த வெப்பத்தைத் தாங்கவும், வலியை சகிக்கவும் தக்கதாக்குவார் என்பது அப்படிப்பட்டவர்கள் தரும் விளக்கமாகும்.


அக்கினிப்புழுக்கள்


  1. இவ்வளவு அதிகமான வெப்பத்தை புழுக்கள் எவ்விதம் தாங்கிக் கொள்கின்றன? எந்த அளவுக்கு இப்புழுக்கள் கஷ்டப்படுகின்றன? இவைகள் எவ்விதம் ஜனங்களுடைய கொடுமையை அதிகப்படுத்துகின்றன? முதலிய கேள்விகள், அநேகருக்கு பெருமளவில் குழப்பத்தைத் தருகின்றன. ஆனால் இந்தக் கொடூரமான சாத்தானுடைய போதனையில் தொடர்ந்து ஆழ்ந்த சிந்தையுடைய சிலர், புழுக்கள் அக்கினிமயமானது என்றும், வெப்பத்தில் வாழக்கூடியன என்றும், வெப்பத்தை விரும்பக்கூடியவை என்றும், புழுக்கள் ஒருவித மேலுறையை பெற்றிருப்பதால், அவைகள் சேதமடையாது, உலக மனுமக்களை அதிகமாக வேதனையடையும்படி செய்கின்றன என்றும் ஒரு கொள்கையை வகுத்துள்ளனர். இவ்விதம் நமதுபாட வசனம் மனுக்குலமனைத்தும் நிர்ப்பந்தமாக வேதனையை சகிக்க வேண்டும் என்று போதிக்கப்பட்டும் புரிந்து கொள்ளப்பட்டும் இருக்கிறது.

  2. இந்த நியாயமற்ற அன்பற்ற கொள்கைகளை அநேகர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாபோதகரும், நமதாண்டவருமாகிய இயேசுவின் வாயிலிருந்து வந்த இப்பாட வசனத்தை மிகவும் வருந்தக்கூடிய அளவுக்கு பேர்கிறிஸ்தவ மண்டலம் தப்பபிப்பிராயப்படுத்தியிருக்கிறது. இவ்விதம் இந்தப் பாட வசனம் பல நூற்றாண்டுகளாக தேவனுடைய ஜனங்களால் தவறுதலாகப் புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னமும், அநேகர், இதைக்குறித்து மிகவும் தவறான அபிப்பிராயத்தில்தான் இருந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களது தவறானக் கருத்து சர்வ வல்லமையுள்ள சிருஷ்டி கரை இரக்கமற்ற ஒருவராகவும், தகப்பனத்துவமற்ற ஒருவராகவும் காண்பிக்கிறது.

  3. இப்பாட வசனத்தில் (மாற்கு 9:44) கூறப்பட்ட போதகரின் சொல்லிலிருந்து இப்படிப்பட்ட ஒரு கருத்து முடிவுக்கு வருவதா வல்லமை மி:குந்த அவருக்கு விருப்பம் ? அவர், இரக்கம், சாந்தம், அல்லது வெட்கம் போன்ற காரணங்களால் இதனை சரியாக விளக்கிக் கூறாதபடி ஆகிவிட்டாரா ? இதுவா தேவனுடைய வார்த்தையின் பொதுவான படிப்பினை? அல்லது தவிர்க்கமுடியாத மகாபெரிய பயங்கர தவறுதல் ஏற்பட்டு விட்டதா? அல்லது வார்த்தையின் உருவகப்படுத்தியிருக்கும் பொருளை அறியாது நேரடியாக அர்த்தப்படுத்தி தவறாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா? ஆம், நாம்தான் அதனை தவறாக அர்த்தப்படுத்தி புரிந்துகொண்டிருக்கிறோம்.

  4. சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் பார்த்தால் (2தீமோ 2:15) இவ்வாக்கியங்களில் உருவகப்படுத்தப்பட்டிருக்கும் கருத்தையும், சுயத்தோற்றமான சொல்லர்த்தக் கருத்தையும் நாம் தெளிவாகப் பிரித்து அறியமுடியும். இல்லாவிடில் நாம் பெரிதும் குழப்பத்திற்குள்ளாவோம்.

  5. மாபோதகராகிய இயேசுவின் சீஷர்களான யாக்கோபும் யோவானும் வானத்திலிருந்து அக்கினி இறங்கி சமாரியா பட்டணத்தை அழிக்க விரும்பினார்கள். ஏனெனில் அந்த ஜனங்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது அவர் தமது சீஷர் களைக் கடிந்துகொண்டு, மிகவும் இரக்கமுள்ளவராய், அவர்களைப் பார்த்து சொன்னது, "நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்கள் என்பதை அறியீர்கள் என்று அதட்டி மனுஷக்குமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார்" லூக் 9:55,56

  6. இதன்மூலம் இந்த இரண்டு தீவிரவாத சீஷர்களைவிட பரமபிதா அன்பின் ஆவியிலும், நீதியிலும் குறைவுபட்டவர் என்பதையா மனுஷக்குமாரன் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்? அல்ல. உக்கிரத்துடன் முழுமையாய் சமாரியர்களின் இவ்வுலக வாழ்வை ஒன்றுமிராதபடி அழிக்க வேண்டும் என்ற மனநிலையில் சீஷர்கள் இருக்கும்போது, நமது பரமபிதா அவர்களைவிட இன்னும் பன்மடங்கு அதிகமாக பேய்த்தனமாக மனுக்குலமனைத்தையும் நித்திய வேதனையில் ஆழ்த்தும் எண்ணமுடையவராய் இருக்கிறாரா? தேவ வல்லமையைக் கொண்டு நித்தியகாலமாக பூலோகவாசிகளை நிரந்திர, ஓயாது கஷ்டப்பட வைப்பதையா இயேசு இங்கு தெரிவிக்கிறார்? அவர்கள் துர்க்குணத்தில் உருவானவர்கள் என்றும் அவர்கள் தாய், அவர்களை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள் (சங் 51:5) என்றும் அவருடைய சொந்த வார்த்தைகளே அறிவிக்கும்போது மேற்கண்ட விதமாக தேவன் மனுக்குலத்துடன் செயல்படுவாரா? அதுவும் தேவன் அழிக்காமலும், செயலற்றும் போகும்படி கட்டாமலும் இருக்கும் சாத்தானானவன் எதிராளியாக இருக்கிற சாதகமற்ற சூழ்நிலையில் இருக்கும் அவருடைய பூலோகவாசிகளை அவ்விதம் வாதிப்பதையா இப்பாட வசனம் போதிக்கிறது. "உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமரானை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்" யோவா 3:17


ஷியோல், ஏதீஸ், டாற்றரு


  1. நரகம் என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தைக்கு ஆதியாகமம் முதல் மல்கியாவரை பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரேயே வார்த்தை ஷியோல் (Sheol) என்பதாகும். இந்த வார்த்தை, ஜேம்ஸ் அரசரின் மொழிபெயர்ப்பு - வேதாகமத்தில் (KJV) பாதாளம், குழி, நரகம் என பலவிதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல தடவைக்ளில் குழி மற்றும் பாதாளம் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாதாளம் என்பதே இதன் சரியான மொழிபெயர்ப்பாகும்.

  2. புதிய ஏற்பாட்டில் இதற்கு இணையான கிரேக்க பதம் ஏதீஸ் (Hades) என்ற வார்த்தையாகும். இதுவும் அதேபோல் பலவிதங்களில் பாதாளம் மற்றும் நரகம் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை பாதாளம் என்றே மொழிபெயர்க்க வேண்டும். எந்த ஒரு நியாயமான மேதையும் இந்த வார்த்தையின் மூல அடிப்படை அர்த்தத்தில் ஜீவன் அல்லது துன்பம் என்ற கருத்து சம்பந்தப்பட்டிருக்கிறது என சிறிதளவும் கருதமாட்டான். வேதாகமம், 'நீ போகிற பாதாளத்திலே (Sheol) செய்கையும், வித்தையும், அறிவும், ஞானமும் இல்லையே' (பிர 9:10) என்று தெளிவாக எடுத்துரைக்கிறது. நல்லோர், தீயோர் அனைவரும் மரணத்தில் பாதாளத்துக்கு (Sheol) போவார்கள். அங்கே உயிர்த்தெழுதல் வரும்வரை அப்படியே உணர்வற்ற நிலையில் இருப்பார்கள்.

  3. புதிய ஏற்பாட்டில் டாற்றரு (Tartaroo) என்ற வார்த்தை (வினைச்சொல்) ஒரு தடவை மட்டும் 2 பேதுரு 2:4இல் காணப்படுகிறது. இது, 'நரகத்துக்குத் தள்ளி' என தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. 'அடைக்கப்படுதல்' என்று இருக்கவேண்டும். அதாவது விழுந்து போன தூதர்கள் பூலோகமண்டலத்திலே நியாயத் தீர்ப்புக்காக அந்தகார சங்கிலியாலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள் (யூதா 6, எபே 2:2, 6:12) என்ற, கருத்தோடு மொழி பெயர்க்க வேண்டும். இது மனுக்குலத்தை எந்தவிதத்திலும் குறிக்காது, விழுந்துபோன தூதர்களைக்குறித்து நிற்கிறது. அப்போஸ்தலர் கூறுகிறபடி தண்டனைக்காக, தேவன் அவைகளை அடைத்து வைத்துள்ளார் (டாற்றரு). அவைகளை மகா நாளின் நியாயத் தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினால் கட்டி அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்.


கிஹென்னா


14.ஜேம்ஸ் அரசரின் மொழிபெயர்ப்பில் (KIV) நரகம் என்பதற்கு நான்காவது பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்கப் பதம் கிஹென்னா (Gehenna) என்ற வார்த்தையாகும். இது 12 தடவை புதிய ஏற்பாட்டில் வருவதை காணலாம். (மத் 5:22, 29, 30, 10:28, 18:9, 23:15,33, மாற்கு 9:43, 45, 47, லூக் 12:5, யாக் 3:6) நமது தலைப்பு பாடவசனம் இதில் ஒன்றோடு சேர்ந்ததாகும்.


15.கிஹென்னா என்ற சொல்லின் சரியான அர்த்தம் என்ன? அதன் பதம் எதைக்குறிக்கிறது? இது உத்தரிக்கும் ஸ்தலத்திற்கு உள்ள பெயரா? அல்லது புராட்டஸ்டன்ட் மதக்கொள்கையின்படி முடிவில்லாத சித்திரவதையான மிகவும் மோசமான இடமா? நாங்கள் கூறும் பதில் இல்லை என்பதாகும். அதன் விளக்கத்தை இங்கு காண்போம்.


இன்னோம் பள்ளத்தாக்கு


  1. கிஹென்னா என்ற கிரேக்க வார்த்தைக்கு ஒத்த எபிரேய வார்த்தை கி-இன்னோம் (Ge-Hinnom). இது இன்னோம் பள்ளத் தாக்கை அர்த்தப்படுத்துகிறது. இந்தப் பள்ளத்தாக்கு திரும்ப திரும்ப வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை சொந்தமாகக்கொண்ட குடும்பத்தாரின் பெயரால் இன்னோம் என்று இது பெயரிடப்பட்டது. இது வேதாகமத்தில் முதலாவதாகக் காணப்படுகிற பகுதி யோசுவா 15:8 ஆகும். எருசலேம் நகரத்தை எந்த ஒரு வேதாகம வரைபடத்தில் பார்த்தாலும், இந்த பள்ளத்தாக்கு நகர மதிலின் தெற்கு மற்றும் தென்மேற்கு பக்கத்தில் குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.


17.இப்பொழுது இன்னோம் பள்ளத்தாக்கு மூடப்பட்டு அதன் மேல் பழத்தோட்டம் வளர்ந்துள்ளது. ஆனால் ஆரம்பக்காலத்தில் இது மிகவும் ஆழமான பள்ளத்தாக்காயிருந்தது.

 


18.மிகவும் வருந்தத்தக்களவில் இஸ்ரவேல் ஜனங்கள் சிலை வணக்கம் செய்த காலகட்டத்தில் இன்னோம் பள்ளத்தாக்கு பலி செலுத்தக்கூடிய ஒரு இடமாக இருந்தது. அது அந்த மார்க்கத்தின் ஒரு புனித இடமாக பயன்படுத்தப்பட்டது. அந்நில தெய்வமான மோளேகு உருவம் செம்பினால் வடிவமைக்கப்பட்டு அங்கு நிறுத்தப் பட்டது. அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால், உருவத்தின் ஒரு பாகம் நாற்காலிபோல் செய்யப்பட்டிருந்தது. அதன்பின் பகுதியிலிருந்து சூளையின் தீ எழும்புமாறு அமைக்கப்பட்டிருந்தது. உருவத்தின் தலைபாகம் புகை வெளியே செல்லக்கூடிய குழாயின் மேற்பாகமாக இருக்குமாறு செய்யப்பட்டிருந்தது. உருவத்தின் கைகள் ஏதோ ஏந்திக்கொள்ள நீட்டப்பட்டதைப் போல அமைக்கப்பட்டிருந்தன. அவைகள் பழுக்கக்காய்ச்சி சூடேற்றப்படும். அப்பொழுது மூடபிரம்மையிலுள்ள இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பிள்ளைகளை பலியாக அதன் சூடேற்றப்பட்ட கைகளில் கொடுப்பார்கள். அங்கே பலியாகின்ற குழந்தைகளின் அழுகைக்குரல் வெளியே போகாதபடி அடங்க, அச்சமயம் மேளதாளம், கொட்டு அடிக்கப்படும் பூரிகை வாத்தியம் வாசிக்கப்படும் ஜனங்களும் கூக்குரலிடுவார்கள்.


  1. யோசியா என்ற சிறந்த இராஜா இராஜ்யபாரத்துக்கு வந்த பின்னர், விக்கிரக ஆராதனை அடியோடு ஒழிக்கப்பட்டு மறுபடியும் ஆலயத்தில் ஏகோவா தேவனை சரியாக தொழுது கொள்ளும் பழக்கம் ஆரம்பிக்கப்பட்டது. (2 இராஜா 23:10). அதன்பிறகு மறுபடியும் இந்த கொடிய பழக்கத்தை ஒருபோதும் இஸ்ரவேல் ஜனங்கள் செய்யாதபடிக்கு இன்னோம் பள்ளத்தாக்கு அருவருக்கப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டது. இது வெறுக்கப்படத்தக்கதான பள்ளத்தாக்காக மாறியது. எப்படியெனில், எருசலேமின் தேவையற்ற அழுக்குகளை போடும் ஒரு இடமாக பயன்படுத்தப்பட்டது. செத்துப்போன மிருகங்களை அங்கு எறிந்தார்கள். கொடிய குற்றம் புரிந்தவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றியபின், அவர்கள் உடலை அடக்கம் செய்வதற்குப்பதில் அங்கே போட்டனர். யூதர்கள், உயிர்த்தெழுதலில் நம்பிக்கைக் கொண்டிருந்ததால், மரித்த உடலை அடக்கம் செய்வது வழக்கம். மாறாக உடலை தூரே எறிந்துவிடுவது அன்னாருக்கு உயிர்த்தெழுதல் இல்லை என்பதை தெளிவாக்கவே இப்படி செய்தனர். ஆதலால் எதிர்கால வாழ்வுக்கு நித்திய ஜீவனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாத ஒரு கழிவு பொருளாக நிராகரிக்கப்படுதலை இது விளக்குகிறது.

  2. அங்கு எறியப்பட்ட செத்தமிருகங்களின் உடல்களையும் குற்றவாளிகளின் உடல்களையும் புழுக்கள் சாப்பிட்டு அழிக்கும். இப்படியாக புழுக்கள் செத்த சரீரங்களை முற்றிலும் அழிப்பதை யாரும் தடுக்கவில்லை. பள்ளத்தாக்கின் அடியில் தீ போடப்பட்டது. அது கீழே எறியப்படும் எரியக்கூடிய பொருட்கள் அனைத்தையும் எரித்துப்போட்டது. அத்துடன் கந்தகமும் சேர்க்கப்படும். அதன் புகை எந்த நோயையும் அழித்து விடும். ஒருவரும் அந்த தீயை அணைக்க விரும்பவில்லை. அவ்விதம் எரிந்துகொண்டிருத்தல் எல்லோராலும் விரும்பப்பட்டதாயிருந்தது. இதுவே நமது கர்த்தராகிய இயேசுவின் முதல் வருகை நாளின் கிஹென்னாவாக இருந்தது.


கிஹென்னாவும் இரண்டாம் மரணமும்


  1. இயேசுவானவர் இரண்டாம் மரணத்தை எடுத்துக்காட்டும் வகையில் கிஹென்னாவை உருவகப்படுத்திக் காட்டுகிறார். அது முழுவதும் மனப்பூர்வமாக பாவம் செய்யும் அனைவருக்கும் உரிய ஒரு பங்காகும். வெளிப்படுத்தின. புத்தகத்தில் உள்ள மற்ற அடையாளங்களுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கும்பொழுது நாம் ஏற்கனவே பார்த்ததுபோல இந்த கிஹென்னாவை இரண்டாம் மரணத்திற்கு அடையாளமாக உருவகப்படுத்தியே இயேசு விளக்குகிறார். (வெளி 20:14, 15, 21:8)

  2. அந்த பள்ளத்தாக்கிலே உள்ள புழுக்கள் அழியாத தன்மை வாய்ந்தன அல்ல. மற்ற புழுக்களையும், லார்வாக்களையும் போலவே சாகக்கூடியவை. அங்கே சுடர் விட்டு எரிந்துகொண்டிருந்த தீ (இப்போது ஒன்றும் எரிந்து கொண்டிருக்கவில்லை.) 'அங்கே அவர்கள் புழு சாவாமலும், அக்கினி அவியாமலுமிருக்கும்' என்று அடையாளப் படுத்தப்பட்ட வகுப்பாரின் அழிவு முற்றிலுமாயிருக்கும் என்பதையும், இவ்விதம் அழிந்துபோகும் அழிவிலிருந்து காப்பாற்ற ஒன்றும் இடைப்பட முடியாது என்பதையும் விளக்குகிறது. இது இரண்டாம் மரணத்தைக்குறிக்கிறது.

  3. ஆதாமினால் உண்டான மரணம் அதாவது முதல் மரணம் அழிக்கப்பட்டுவிடும் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. (1 கொரி 15:26). ஆதாமின் மரண சாபத்தை ஒழிக்கும்படி நியாயமான அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவே கிறிஸ்து மரித்தார். மேலும் ஆதாமின் சந்ததியில் யாரெல்லாம் கிறிஸ்துவின் புண்ணியத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்களோ அவர்கள், ஆதாமில் இழந்துபோய் கல்வாரியில் மீட்கப் பட்ட எல்லாவற்றையும் திரும்பவும் பெற்றுக் கொள்ள தூக்கியெடுக்கப்படுவார்கள். ஆனால் முழுவதும் பிரகாசிக்கப்பட்ட பின் பாவத்தை நேசித்து அதனோடு ஒத்து வாழ்கிற மற்றும் தெய்வசித்தத்திற்கு கீழ்ப்படிய மறுத்தவர்களை இரண்டாம் மரணம் முழுவதுமாக நித்தியமாக அழித்துவிடுகிறது..

  4. பூமிக்குரிய எருசலேம், பூமியெங்கும் ஸ்தாபித்தாக வேண்டிய தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு அதாவது பரலோகக்திலிருந்து இறங்கும் பரம எருசலேமுக்கு உருவகமாக இருப்பதைப் போல, கிஹென்னா மற்றும் அதன் அக்கினி மற்றும் புழுக்கள் எல்லாம் ஒவ்வொரு மனப்பூர்வ பாவியையும் அழிக்கும் இரண்டாம் மரணத்தை உருவகப்படுத்துகிறது. அதாவது கிறிஸ்துவின் மத்தியஸ்த 1000 வருட ஆட்சியின் காலத்திலும், அதன் முடிவிலும், சொற்பக்காலத்திலும், நீதி முழுவதும் ஸ்தாபிக்கப்பட்ட பூமிக்குரிய இராஜ்ஜியத்தை செம்மறியாடு போன்ற மனுக்குலத்திற்கு கொடுக்கும்முன்னும், மனப்பூர்வ மாய் பாவம் செய்தவர்கள் இரண்டாம் மரணத்தில் அழிக்கப் படுவார்கள் என்பதை கிஹென்னா விளக்குகிறது.

  5. புதிய எருசலேம் சொல்லர்த்தமான நகரத்தை போல் சொல்லர்த்த தங்க தெருக்களும், சொல்லர்த்த முத்துக்களினால் செய்யப்பட்ட வாசல்களும், சொல்லர்த்த கற்களாலான சுவர்களும் கொண்டதாக இல்லாது இருப்பதுபோல, இன்னோம் என்ற பள்ளத் தாக்கும் அல்லது நகரத்தின் வெளியே அக்கினி சடலும் சொல்லர்த்தமாய் இருப்பது இல்லை. இரண்டும் உருவகப்படுத்தப்பட்டவைகளே. எருசலேம் தேவனோடு இணங்கி ஒத்து போகிறவர்கள் தெய்வீக ஆசீர்வாதத்தையும் நித்திய ஜீவனையும் பெறுவதைக் குறிக்கிறது.

  6. அப்படியே கிஹென்னா தேவனைவிட்டு பிரிகிறவர்கள் நித்திய அழிவு அடைந்து அழிக்கப்பட்டு 'இரண்டாம் மரணத்தை' அடைவதை தெளிவாகக் காட்டுகிறது. அக்கினி ஒருபோதும் பாது காக்கப்படுதலுக்கு அடையாளம் ஆகாது. அதற்கு எதிரிடையாக எப்பொழுதும் அழிவையே குறிக்கும். கந்தகமும் கூட சேர்ப்பது மேலும் அழிவைத் தீவிரப்படுத்தும் தன்மையை விளக்குகிறது. ஏனெனில் எரிகிற கந்தகத்திற்கும் பயங்கர அழிவை உண்டாக்கும் தன்மை இருந்ததை முற்காலத்திலேயே அறிந்திருந்தனர். இது மானிட வர்க்கத்தை மட்டுமல்ல, பெரிய மிருகங்களையும் சிறுபூச்சிகளையும் நுண்கிருமிகளையும் மற்றும் உயிருள்ள அனைத்து ஜீவராசிகளையும் கொல்லும் தன்மையைப் பெற்றது.

  7. ஆதலால் கிஹென்னா என்ற இந்த பதம் இரண்டாம் மரணத்தை அடையாளப்படுத்துகிறது. இந்த இரண்டாம் மரணத்திலிருந்து ஒருபோதும் உயிர்த்தெழுதல் இல்லை. மறுவாழ்வு இல்லை. பரிசுத்த பவுலும் நித்திய அழிவை அர்த்தப்படுத்துகிறார். பரிசுத்த பேதுருவும் மிருகஜீவன்கள் போலவே அழிந்துபோகிறதைக் குறிப்பிடுகிறார் (2 தெச 1:10, 2 பேது 2:12). இது மிகவும் தெளிவாக வெளி 20:14இல் அக்கினி கடல் எனக் கூறப்பட்டிருக்கிறது. இது இரண்டாம் மரணத்தையே எடுத்துக்காட்டுகிறது.

ஏசாயா 66:24

  1. மனப்பூர்வமாய் மீறுகிறவர்களின் அழிவை இன்னோம் (கிஹென்னா) பள்ளத்தாக்கு எடுத்துக்காட்டும் அழிவாகிய அதே விளக்கத்தைத்தான் ஏசாயா தீர்க்கதரிசி இந்த பகுதியில் கூறுகிறார். ஏசாயாவின் நாட்களில் இன்னோம் பள்ளத்தாக்கில் சொல்லர்த்தமான காட்சி எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. அதனை உருவகப்படுத்தி பரிசுத்தாவிமூலம் தீர்க்கதரிசிக்கு சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. 

 

அதாவது புதிய வானம் புதிய பூமி என்று அடையாளமாகக் கூறப்படும் மனுக்குலத்தின் புதிய ஆவிக்குரிய மற்றும் பூமிக்குரிய அமைப்புகள் மேசியாவின் ஆட்சியில் நிறைவேறுவதை சுட்டிக்காட்டுகிறது. அப்போது தீமை செய்கிறவர்கள் பாதுகாக்கப்படாமல் முற்றிலும் முழுவதுமாக அழிக்கப்படுவார்கள் என்பதையே இங்கு விளக்குகிறது. "அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள். அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும். அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்." பிணம் என்பது உயிரற்ற இறந்த உடல் ஆகும். உயிருள்ள ஆத்துமாக்கள் வதைத்து துன்பப்படுவதை பார்ப்பார்கள் என்று இது கூறவோ, அதைப்பற்றிய எந்த ஒரு எண்ணத்தையோ இங்கு குறிப்பிடவில்லை. தேவன் மனுமக்கள் வதைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். ஆனால் சரியான தீர்ப்பு செய்வார் (ஏரே 19:5, 32:35)


தப்பறையை அறுத்தெறிவோம்


  1. தேவனுடைய எண்ணக்கூடாத சிருஷ்டிகளை மிகவும் வதைக்கப்படும் இடத்தில் தள்ளுவது தேவனுடைய ஏற்பாடு அல்ல. இதை இவ்விதம் அறிந்து உணரும்போது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி கொடுக்கிறது. அப்படியே வெளி 5:13இல் வேதம் தெளிவாகக் கூறுகிறது. "வானத்திலும் பூமியிலும், பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்
    டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றிலடங்கிய வஸ்துக்கள் யாவும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் உண்டாவதாக என்று சொல்லக் கேட்டேன்". நரகத்தில் ஜீவன்கள் வாழ்ந்துகொண்டு வேதனை அடைந்து கொண்டேயிருப்பின் மேற்கண்டபடி அவர்களால் ஸ்தோத்திரம் செலுத்தக்கூடுமோ? பூமியில் சமாதானம் இருக்குமோ? லூக் 2:14.


  2. வேதாகமமோ அல்லது நமது நிதானிக்கும் அறிவோ பாவத்தின் சம்பளம் நித்திய வேதனை என்ற போதனைக்கு எந்த ஒரு சிறிதளவும் ஆதரவு கொடுக்கவில்லை. இது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க நாம் இங்கு பார்க்கவேண்டிய உண்மை என்னவென்றால், பல்வேறு மதக்கொள்கைகள், அறிக்கைகள், பாட்டுப்புத்தகங்கள் மற்றும் வேத ஆராய்ச்சிகள் மட்டுந்தான் இதற்கு ஆதரவு கொடுக்கின்றன என்பதே. அதிகமதிகமாக சத்திய வெளிச்சம் வரக்கூடிய இந்த நாட்களில் சிந்தனைத் தெளிவு பெருகும் காரணத்தால் இந்த பயங்கரமான இருண்டகால கொள்கை கிறிஸ்தவர்களின் மத்தியில் விரைவாக செத்துக்கொண்டு வருகிறது. எனினும் இது, பொதுவான தேவனுடைய வார்த்தையிலும் சத்தியத்திலும் அவருடைய குணாம்சத்திலும் உள்ள அவர்கள் பக்தி வைராக்கியத் தினால் அல்ல. மேலும் அவர்களுடைய கொடுமையான மதக்கொள்கையாகிய விக்கிரகத்தை அழிக்க மனம் இசைந்தவர்களாய் இருப்பதினாலும் அல்ல. அவர்கள் தனிப்பட்ட முறையில் அதனை வெறுத்து மறுத்தாலும் இன்னமும் அந்த தப்பான கடுங்கொள்கையைக்குறித்து வெட்கப்படாமல், அதனை சேவித்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் தங்களது நேரத்தையும், பணத்தையும் கொண்டு அதற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் ஆச்சரியமாயிருக்கிறது.


31.இந்தத்தப்பறையின் பொதுவான செல்வாக்கானது நேர்மையான மனதுள்ள இவ்வுலகத்தின் கிறிஸ்தவத்தையும் வேதத்தையும் பழிக்கவும், மாய்மாலக்காரர்கள், நாஸ்திகர்கள் பேர்கிறிஸ்தவர்கள் போன்றவர்களை உருவாக்கவும் வழி செய்கிறது. இவ்வாறு பேர்கிறிஸ்தவ சபைகள் இந்த தூஷணத்தை பற்றிக்கொண்டும், தேவ வார்த்தைகள் பெயரளவில் மதிக்கப்பட்டாலுங்கூட உண்மையில் மறுக்கப்பட்டு வருகின்றன. தெய்வபயம் இருந்தாலுங்கூட நடைமுறையில் அது மறுக்கப்படுகிறது. அனலும் குளிருமில்லாத பிரசங்க மேடையிலும் ஆலயத்திலும் பிரசங்கம் செய்யும் சிறப்பு ஆசனத்திலும் இருக்கும், அதிகமறிந்த கிறிஸ்தவர்களே இதற்கு பொறுப்பு ஆவார்கள். அப்படிப் பட்ட அநேகர் மனப்பூர்வமாக சத்தியத்தை விட்டுக்கொடுக்கிறார்கள். தெய்வ குணாம்சத்திற்குபழி உண்டாக்குகிறவர்களாய், இலகுவான சுகபோகம், உலக நிம்மதி, தற்போதைய லாபம் போன்றவைகளுக்காக சத்தியத்தை விட்டுக்கொடுக்கிறார்கள். இதனால் தங்களுக்கே இலச்சையுண்டாக்கி தங்களை வஞ்சிக்கிறார்கள்.




  1. தவறான போதனைகளினால் வஞ்சிக்கப்படாதிருந்தால், சத்தியத்தில் ஸ்திரப்பட்டும் ஆசீர்வதிக்கப்பட்டும் இருக்கக்கூடும். 

 

அப்பட்டிப்பட்டவர்களாலேயே அந்த தப்பறையான நங்கூரம் அறுத்து கழற்றிவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று தங்களை தெரியப்படுத்தியிருக்கிறவர்கள் தங்களுக்குள்ளேயும், தேவனுக்கும் உண்மையாக இருப்பார்களேயாயின் ஏசாயா 29:13 இல் கூறுவதை சீக்கிரம் கற்றுக்கொள்வார்கள். "அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது”. எல்லாரும், "தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்லுவோமாக" ரோமா 3:4 என தீர்மானிப்பார் களேயாயின், மேலும் சமுதாய கோட்பாடுகள் எல்லாம் அபூரணமானது என்றும் தவறாக வழிநடத்துபவைகள் என்றும் எல்லாருக்கும் எடுத்துக்காட்டுவோமாயின், மதக்கோட்பாடுகள் எல்லாம் தகர்ந்து அழியும் பெரிய வேலை சீக்கிரம் நேரிடும். பிறகு இதுவரை இல்லாத அளவு வேதாகமம் படிக்கப்பட்டு உயர்வாக மதிக்கப்படும். மேலும் பாவத்தின் சம்பளம் மரணம், வேதனையில் நித்தியஜீவனுடன் நித்தியமாய் வாழ்கின்ற வாழ்வு அல்ல என்ற உறுதியான செய்தி ஒரு நீதியான விளைவை போதிக்கிறது என்று அறிந்து ஒப்புக் கொள்ளப்படும்.

ஆயிர வருஷ யுகம் -ஆதிகாரம் 5  

1.1. தேவனுடைய ராஜ்யம் பூமிமுழுவதும் ஸ்தாபிக்கப்படுதல், நமது கர்த்தருடைய இரண்டாம் வருகையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். அதற்கு தொடர்புடைய அதிகமான காரியங்களை இந்த அதிகாரத்தில் காண்போம்.  இந்த நமது பாடமாகிய தேவனுடைய ராஜ்யம் வேதவாக்கியங்களில் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் அபூர்வமான உயர்மேன்மையைக் கொண்டவைகளில் ஒன்றாகும்.'தேவனுடைய ராஜ்யம்' (kingdom of God), 'பரலோக ராஜ்யம்', (kingdom of Heaven), என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டில் மட்டும் சுமாராக150 இடங்களில் காணப்படுகின்றன.  

1.2. வேதவாக்கியங்களில் காணப்படுகின்ற அதன் உயர் மேன்மையானது, அது தேவனுடைய திட்டத்தில் அதிக முக்கியத்துவம் கொண்டது என்பதற்கு நிரூபணமாகும்.  ஆம், தெய்வீக காரியத்தின் ஒவ்வொரு பாகமும், தேவனுடைய ராஜ்யத்தோடு, குறிப்பிட்டு சுட்டிக்காட்டத்தக்கதாய்,  நெருங்கிய சம்பந்தத்தைக் கொண்டதாய் இருக்குமளவுக்கு, தெய்வீகத் திட்டத்தில் அதன் இடம் முக்கியமானதாகயிருக்கிறது. இந்த கருத்துக் கணிப்புகள், வேத வாக்கியங்கள் தெரிவிக்கிற முறையின் படி பலகோணங்களிலிருந்து முற்றிலுமாக செம்மையாக அதனை  படிப்பதற்கான தகுதியுடைமையை ஆலோசனையாக் கொடுக்கின்றன. (மத்.4:17; 6:33).

ராஜ்யம் என்பதின் பொருள்  

1.3. இந்த பாடத்தின் ஆரம்பத்திலேயே, ராஜ்யம் (kingdom) என்ற வார்த்தைக்கான வேதாகம அர்த்தம் என்ன என்று காண்போம். இந்த வார்த்தைக்கு நவீன ஆங்கிலம் கொடுக்கிற அர்த்தங்களுக்குக் கூடுதலாக சில அர்த்தங்களை வேதாகமும், அது பயன்படுத்தியிருக்கின்ற பிரகாரம், நமக்குத் தெரிவிக்கிறது.  இப்பொழுதும்  பேசப்படுகிற மொழிநடை பிரகாரம், ராஜ்யம் (kingdom) என்ற வார்த்தை ஒரு ராஜாவால் அல்லது ஒரு ராணியால் ஆளப்படுகிற ஆட்சியின் கீழ்ருக்கும் எல்லைகளைக்கொண்ட ஒரு பிராந்தியத்தை (kingdom), தேசத்தை, மக்களை அர்த்தப்படுத்துகிறது.

1.4. வேதாகமம், ராஜ்யம் (kingdom) என்ற வார்த்தைக்குறிய மேற்கண்ட அர்த்தங்களோடு மாண்புமிகு ஆளுபவரை (ராஜாவை)  அல்லது ஆளுபவரின் (ராஜாவின்) ஆளும் உரிமையை (அதிகாரத்தை) (Authority by which he reigns) அல்லது ராஜாங்கத்தை அர்த்தப்படுத்துகிறது.  வேதாகமத்தில் ராஜ்யம்(kingdom) என்ற வார்த்தை ஒரு ராஜாவாது, ஒரு ராணி யாவது ஆளுகிற அதிகாரத்தை(ராஜ்ய பாரத்தை, ராஜாங்கத்தை, ராஜரீகத்தை) அர்த்தப்படுத்துகின்றது என்பது 1 கொரி.15:24; லூக்.22:29,30; யோவா.18:36; தானி.4:31; 7:14, 18, 27 ஆகிய வேத வாக்கியங்களிலிருந்து தெளிவாகிறது.(ஆங்கில வேதாகமத்தையும் தமிழ் வேதாகமத்தையும் ஒப்பிட்டுப் படிக்கவும்).

  ராஜ்யம், ராஜரீக் கூட்டத்தாரைக் குறிக்கும்  

2.1. இந்த வார்த்தை வேதாகமத்தில் ஆளு பவரையும் அல்லது பன்மையில் ஆளுபவர்களையும் அர்த்தப்படுத்துகிறது என்பது, அநேக வேதவாக்கியங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். யாத்.19.5,6 நமது  கருத்துக்கு சரியான எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. "நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும்", "shall be unto me a kingdom of Priests".  இங்கு தேவன் மாம்ச இஸ்ரவேலர்கள், அவரது உடன்படிக்கையை கைக்கொண்டு கீழ்ப்படிந்து உண்மை விசுவாசமுள்ளவர்கள் என்று தங்களை நிரூபித்தால், அவர்களை ஆசாரிய ராஜ்யமாக (பூமியிலுள்ள மற்ற ஜனங்களை ஆளும் ராஜரீகக் கூட்டமாக)  ஆக்குவதாக வாக்குக்கொடுக்கிறார்.  

2.2. இந்த உடன்படிக்கை என்பது, குறிப்பாக 10 கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது. மோசேயின் நியாயப் பிரமாணமும், அதனுடன் இணைக்கப்பட்ட, தேவன் எகிப்தில் பஸ்காவிலிருந்து மோசேயின் ஊழியம் முடிவுவரை கொடுத்த, மற்ற அம்சங்களும் அடங்கியது ஆகும். உபாகமம் புத்தகத்தோடு முடிவடைகிற இவைகளெல்லாம் உடன்படிக்கையைச் சேர்ந்தவையாகும். இவைகளை அவர்கள் கைக்கொள்ளுவார்களேயாகில், தேவன், "சகல ஜனங்களிலும் நீங்கள் எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்" (அதாவது பூமியிலிருக்கும் மற்றெந்த ஜனங்களுக்கும் இல்லாத கருத்தில் இஸ்ரவேலர்கள் தேவனால், தமக்குமட்டும் சொந்தமான ஜனமாக மிகவும் உன்னதமாக மதிக்கப்படுவார்கள்) "பூமியெல்லாம் என்னுடையது, (அதாவது பூமியிலும் வானத்திலும் உள்ள ஒவ்வொன்றும் யாவே தேவனுடையது). "நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்" (அதாவது அவர்கள் தேவனுக்கு முன்பாக ஆசாரியகூட்டமாய் மாத்திரம் இல்லாது, முழுவதும் தேவனுக்கு பிரதிஷ்டைப்பண்ணி, அர்ப்பணித்தவர்களாய், அவரிடமிருந்து இந்த மகத்தான தயவையும் ஆசீர்வாதத்தையும் பெறவிருந்த ஒரு தேசமாக இருந்தனர் ) அவர்கள் தங்களை ஒரு தேசமாக  உண்மை விசுவாசமில்லாதவர்கள் என்று நிரூபித்ததினிமித்தம், ஆசாரிய ராஜாக்களாக ஆகும் சிலாக்கியம் அவர்களிடமிருந்து தேசமாக எடுபட்டு போயிற்று. அது ஆவிக்குரிய இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்டது. மத்.21:43.  

3.1. ராஜ்யம் என்பது ஆவிக்குரிய இஸ்ரவேலரான ராஜரீகக் கூட்டத்தாரைக் குறிக்கிறது என்ற கருத்துக்கு சரியான எடுத்துக்காட்டாக 1 பேது.2:9 உம் அமைந்திருக்கிறது. "நீங்களோ உங்களை அந்த  காரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய (கர்த்தருடைய ஜனம் ஒரு சமயம் தப்பறைக்குள் இருந்தனர். ஆனால் தப்பறையிலிருந்து வெளியேறி, நம்முடைய பரம பிதாவினுடைய சுவிசேஷம், நமக்கு காணப்படுகிற விதமான ஆச்சரியமான, சுவிசேஷத்தின் மகத்தான ஒளியினிடத்திற்கு வரும்படி அழைத்தவருடைய) "புண்ணியங்களை அறிவிக்கும் படிக்கு"(தேவன் கிறிஸ்து  வகுப்பரை தேவனுடைய புகழை அதாவது அவரது ஞானம், வல்லமை, நீதி, அன்பு ஆகிய எல்லா குணா  விசேஷங்கள்  அவரைக்குறித்து பிரதிபலிக்கிற புண்ணியங்களையும் அவரது ஞானம், வல்லமை, நீத, அன்பு ஆகியவைகளின் கட்டுக்குள்ளான அவரது இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை குணசீல நயங்களையும் காண்பிப்பதற்காக). 'நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும்' (அதாவது தலையும் சரீரமும் சேர்ந்த கிறிஸ்துவின்  குனாம்ச சாயலையுடையவர்களாய்) "ராஜரீக ஆசாரியக்கூட்டமாய்" (ராஜ்யபாரமாய், ராஜாங்கமாக அமைகிற ஆசாரியக் கூட்டமாய்)" பரிசுத்த ஜாதியாயும் "(தேவனுக்கு அர்ப்பணித்திருக்கும் ஒரு தேசமாக தேவனுக்கு மட்டுமே பிரதிஷ்டையில் முழுமையாய் அர்ப்பணித்திருக்கும்,  அவ்விதம் பரிசுத்தமாயிருக்கும்  தனிப்பட்டவர்களான தேசமாக) சொந்த ஜனமாயும்  தேவனால் தமக்குமட்டும் சொந்தமாக்கப்பட்ட தனிச்சிறப்புயியல் உரிமை கொண்ட ஜனமாயும்) இருக்கிறீர்கள்".  



3.2 ராஜ்யம் என்பதற்கான இந்த அர்த்தம் வெளி.1:6  இலும் 5:10 இலும் இன்னும் தெளிவாயிருக்கிறது. "நம்மை ராஜாக்களும்............ ஆக்கின"  (hath made us kings) "எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும்.... ஆக்கினீர்" (hath made us kings) ஜேம்ஸ் மொழியாக்கத்தில் (KJV- King James version) ராஜாக்கள்(Kings) என்று இந்த வசனங்களில் மொழியாக்கம் செய்திருக்கிற வார்த்தைக்கு மூலமொழியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை  பெஸிலியா (Basileia) என்பதாகும்.  அதன் பொருள் ராஜ்யம் என்பதாகும். உதாரணம். 2  தீமோ.4:1 இல் 'ராஜ்யத்தையும்' என்பதற்கு மூலமொழியில் பெஸிலியா எனும் கிரேக்க வார்த்தையாகும்.  அங்கு ராஜ்யம் என்று மொழியாக்கம் செய்திருக்கிறதைக் கவனியுங்கள்). வெளி.1:6 இல்  மூலமொழியில் வருகிற பெஸிலியா எனும் கிரேக்க வார்த்தை ராஜாக்கள் என்று மொழியாக்கம் செய்திருப்பது. வேதாகமத்தில் ராஜ்யம் என்பது 'ராஜரீகக் கூட்டத்தாரை' அதாவது 'ஆளுபவர்களை' யும் அர்த்தப் படுத்துகிறது என்ற கருத்துக்கு நிரூபணமாகியிருக்கிறது.  

 

3.3. அதேபோல வெளி.5 10 இல் 'எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும்..... ஆக்கினீர் (hath made us kings) என்பதிலும் ராஜாக்கள்(kings) என்பதற்கும் பதில் ராஜ்யம் (kingdom) என்ற பெஸிலியா என்னும் கிரேக்க வார்த்தையையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரமாக  ரிவைஸ்ட் மொழியாக்கத்தில்(Revised Version) எடுத்துக்காட்டைத் தருகிறோம்‌

 

3.4. இங்கேயும் KJV மொழிபெயர்ப்பாளர்கள், ராஜ்யம் எனும் பொருளையுடைய கிரேக்க வார்த்தைக்கு, ராஜ்யம் எனும் மொழியாக்கம் செய்யாமல் ராஜாக்கள் (Kings) என்று இங்கு மொழியாக்கம் செய்திருக்கும் காரியம் வேதாகமத்தில் ராஜ்யம் என்ற வார்த்தைக்கு ராஜரீகக் கூட்டத்தை, ஆளுபவர்களை அதாவது ராஜாக்களை (Kings) அர்த்தப்படுத்துகிறது என்பதை நிரூபிக்கிறது. 'தேவனுடைய ராஜ்யம்' 'பரலோக ராஜ்யம்' என்ற வாசகம், யாவே தேவனுடைய அதிகாரத்தை அவரது பகர ஆட்களாக (Vicegerents) பிரதிநிதிப் படுத்துகிற ராஜரீக ஆளுபவர்களை எல்லாவிடத்திலும் அர்த்தப்படுத்துகிறதாகத் தெரிகிறது. ரோம. 14:17; 1 கொரி.15:50; ஆகிய பகுதிகளில் இந்த விளக்கம் சரியாக இருக்கிறது. 



3.5. ரோம.14:17 வேதபகுதி, ஆயிரவருடயுகத்து ராஜாக்களின் முக்கிய சிலாக்கியங்கள் ஆகாரத்தைக்  குறித்தும் பானத்தைக் குறித்து தனிசெயலுரிமை (Liberty) என்பதில் அடங்கியிருக்கவில்லை என்றும் அதற்குப்பதில் பரிசுத்தாவிக்குள் நீதியைக் குறித்தும் சமாதானத்தைக் குறித்தும், சந்தோஷத்தைக் குறித்தும் தனிசெயலுரிமை அவர்களுக்கு இருக்கும் என்பதை நிச்சயப்படுத்துகிறது. ஆகவே அவர்கள் பிந்தியவைகளில் ஆர்வமுள்ளவர்களாக, முந்தினவைகளான அவர்களது ஆகாரத்தையும் பானத்தையும் குறித்த சிலாக்கியங்களை தடையின்றி மனமார விட்டுவிடுகிறதை தெரிவிக்கிறது.

 

 3.6. அவ்விதமே 1 கொரி.15:50 இல் அப்போஸ்தலன், மனுஷ ஜீவி என்ற ரீதியில் அல்ல, ஆனால் தெய்வீக ஜீவி என்ற ரீதியில் சபையானது அடுத்த யுகத்தில் (1000 வருடயுகத்தில்) ராஜாக்களாக ஆகும் சிலாக்கியத்தை சுதந்தரித்துக் கொள்கிறார்கள் என்று உறுதிபடுத்துகிறது. 'தேவனுடைய ராஜ்யம்' 'பரலோக ராஜ்யம்' என்பதான வாசகங்களைக் கவனமாகப் படித்தால், அது அடுத்த 1000 வருட யுகத்தில் மனிதர்கள் மத்தியில் அதிகாரத்தை பிரயோக்கிக்கிற அவருடைய பகர ஆட்களாக வைக்கப்பட்ட ஆளும் ராஜாக்களை அவைகள் அர்த்தப்படுத்துகிறது என்பதை மனதார ஏற்றுக் கொள்ளச் செய்யும். வேறுவிதத்தில் சொல்லப்போனால், 1000 வருட யுகத்தில் ஆளுகிற யேசுவும் அவரை உண்மை விசுவாசத்தோடு பின்பற்றின சிறுமந்தை வகுப்பாரும்  (1,44,000 பரிசுத்தவான்களும்) 'தேவனுடைய ராஜ்யம்', 'பரலோக ராஜ்யம்' என்ற  பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். (மத்.5:3; மார்.10:14).

 

 4.1.  இந்தப் பெயர்களை யேசுவைப் பற்றியும், சபையைப் பற்றியும் இரு விதகருத்துநிலையில்வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சில வேத பகுதிகளில் பூலோக ஜீவியத்தில் பாடுகளையும் எதிர்ப்புகளையும் சாத்தானிடமிருந்தும், உலகத்தாரிடமிருந்தும், மாம்சத்தினிடமிருந்தும், அனுபவித்துக் கொண்டிருந்த சபை அங்கத்தினர்களைக் குறிக்கின்றன. இந்தக் கருத்து 'ஆன்மிக போர்புரியும் சபை' (The Church Militant) என்ற கருத்தோடு ஒன்றித்து இருக்கிறது.  

 

4.2. மற்ற வேத பகுதிகள் இந்தப் பெயர்கள்,  பூமியின் மேல் மகிமையாக ஆட்சியின் காலத்தில் பரலோக வாசிகளாய் இருக்கிற சபையை குறிக்கின்றன. இந்தக் கருத்தில், இந்த பெயர்கள், ஜெயங்கொண்ட சபை(The Church Triumphant) என்ற கருத்தோடு ஒரே பொருளைக் கொண்டதாயிருக்கின்றது. ராஜ்ய அங்கத்தினர்களின் பூமிக்குரிய வாழ்நாட்களில்  அதன் நிலையில் சபையானது, கருநிலை அல்லது முதிரா நிலை ராஜ்யம்(Embryonic Kingdom)அல்லது அல்லல்படுகின்ற ராஜ்யம் (Suffering Kingdom) என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. அதன் பரலோகநிலையில், அது ஆயிர வருட யுகத்தில், பிறந்த(born) ராஜ்யமாக அல்லது மகிமைப்படுத்தப்பட்ட (the glorified) ராஜ்யமாக இருக்கிறது. நிச்சயமாக இந்த ராஜ்யம் என்ற வார்த்தைக்கு இரண்டு உபயோகமும் வேதாகமத்தின் அடிப்படையானதே.  

துன்மார்க்கர் நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்களா? 2 தெச 1:10, அவர்கள் “தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக் கொள்வார்கள்”, (2 பேது 2: 1,12 ), “அவர்களுடைய முடிவு அழிவு”  (பிலி 3:19 ). அவர்கள் “நித்திய அழிவாகிய தண்டனை அடைவார்கள் ( நித்தியமாக வதைக்கப்படுதல் அல்ல ) யாக்கோபு  1:15, 4:12 ) ஏனென்றால் “பாவம் பூரணமாகும்போது மரணத்தைப் பிறப்பிக்கும்”, நித்திய மரணம் நித்திய தண்டனை ஆகும். ஆனால் நீதிமான்களோ “நித்திய வாழ்வை அடைவார்கள்”. மத்தேயு 25:46

மேலும் புதிய ஏற்பாட்டில் கிஹென்னா (gehenna) என்ற வார்த்தையும், நரகம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் இது கி-ஹின்னோம்  ( ge-hinnom ) பள்ளத்தாக்கு என்பதாகும். இந்த பள்ளத்தாக்கு எருசலேமுக்கு வெளியே இருந்தது. எருசலேம் பட்டணத்தின் கழிவுப் பொருட்கள் அங்கே போடப்பட்டு, புழுக்களாலும் நெருப்பினாலும் கந்தகத்தினாலும் அழிக்கப்பட்டன. அங்கே குப்பைகளையும் அதிலுள்ள கிருமிகளையும் அழிக்க தொடர்ந்து நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.

“அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அவியாமலிருக்கும்” மாற்கு 9:43-48. இது ஏசாயா 66:24 லிருந்து எடுக்கப்பட்டது. இதில் மில்லினிய காலகட்டத்தில் நடக்கும் ஒரு காரியம் காட்டப்பட்டுள்ளது. பிரேதங்களும் அவைகள் புழுக்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருத்தலையும் காட்டுகிறது. எனவே இது நித்திய வதையை காட்டவில்லை, இரண்டாம் மரணத்தை காட்டுகிறது. ...விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். வெளி 21:8  , வெளி 20:14 ,15

துன்மார்க்கரை கடவுள் அழிப்பது உறுதி. அந்த அழிவு, கி-ஹின்னோம் பள்ளத்தாக்கில் போடப்பட்ட கழிவுப்பொருட்கள் புழுக்களினாலும், நெருப்பினாலும் முற்றிலும் அழிந்து போவதைப் போன்றதாகும் என்று வேதத்தில் காட்டப்பட்டுள்ளது. தேவன் ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே ( பள்ளத்தாக்கிலே ) அழிக்க வல்லவர் ( மத் 10:28, எசே 18:4,20 அப் 3:23 சங் 145:20 ஒபதியா 16 ஏசா 43:17.

 

தேவன் நீதியும், செம்மையுமானவர் (உபா 32:4). அவனவன் பாவத்துக்குத் தக்கதாக தண்டிப்பார் (மத் 12:36, லூக் 12:47,48). ஆனால் அவரது நீதி அவர் சொன்ன தண்டனையாகிய மரணத்திலிருந்து நம்மை தடுத்து நிறுத்துகிறது. ஒரு சராசரி மனிதனனுக்கு ஒரு பூனையைக் கூட ஒரு நிமிஷமாகிலும் தீயில் துன்புறுத்த மனம் இணங்காது. “மனுஷன் தேவனைப் பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ?” மனுப்புத்திரன் தன்னை உண்டாக்கினவரைப் பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? “அநீதி சர்வவல்லவருக்கு தூரமாயிருக்கிறது.” என்று சொல்லப்படிருக்கிறதே (யோபு 4:17, 34:10) 

 

“தேவன் அன்பாகவே இருக்கிறார்” “நாம் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும்” என்று விரும்புகிறார். இம்மையிலும் மறுமையிலும் உள்ள நியாயத்தீர்ப்புக்கு பயந்து அல்ல, அவர் மேல் நாம் கொண்ட அன்பினால் அவரைத் தொழுது கொள்ள வேண்டும். “பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்” (1 யோவான் 4:8-12, 16-21 ) 

 

✡✡✡✡✡✡✡

For More truth contact : 9841540081

www.DivinePlan.in




நரகம் உண்டு எனவும் சிலர் இல்லை எனவும் கூறுகின்றனர். வேதம் நமக்கு பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நரகத்தைப் பற்றி என்ன போதிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

அநேகர் நரகம் என்ற வார்த்தையை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் நரகம் என்றால் நித்திய வேதனை என்ற கருத்தை கொண்டிருக்கிறார்கள். இது இருண்ட காலத்தில் கிறிஸ்தவ மதத்தில் சேர்க்கப்பட்ட தேவனற்ற ஜனத்தின் கருத்தாகும். வேதத்தில் சொல்லப்படும் நரகத்தை பற்றிய உண்மையை நம்பாமல், இருண்ட காலத்தில் சொல்லப்பட்ட கருத்தை இவர்கள் நம்புகிறார்கள்.

உலகம் முழுவதும் இன்று எல்லா மதங்களுமே நரகம் என்ற முடிவற்ற கொடிய வாதிக்கப்படுதலை, சித்ரவதையை போதித்துக் கொண்டிருக்கின்றன. ஆகையால் நாம், வேதத்தில் நமக்குச் சொல்லப்பட்ட நரகத்தைக் குறித்து நன்கு படித்து, கவனமாக ஆராய வேண்டியது மிக முக்கியமாகும்.

பழைய ஏற்பாட்டில் நரகம் (Hell) என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரே எபிரேய வார்த்தை ஷியோல் (Sheol) என்பதாகும். புதிய ஏற்பாட்டில் இதற்கு தொடர்பான கிரேக்க வார்த்தை ‘ஹெடேஸ்’ (Hades) என்பதாகும். 

வேதாகமத்தில் ‘ஷியோல்’ மற்றும் ‘ஹெடேஸ்’ 41 தடவைகள் நரகம் என்றும், 32 தடவைகள் கல்லறை என்றும் , 3 தடவைகள் குழி என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அடிக்கடி பாதாளம் நரகம் என்றும். நரகம் பாதாளம் என்றும் பொருள் படுத்தப்பட்டிருக்கிறது.(சங் 49:15; 55:15; 86:13; ஏசாயா 14:9;  யோனா 2:2,  1கொரி 15:55; வெளி 20:13 )

Revised version (RV), Revised Standard Version (RSV), Hebraic Roots Bible போன்ற ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் இந்த நரகம் (Hell) என்ற விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு, ஷியோல் (Sheol) மற்றும் ஹெடேஸ் (Hades) வார்த்தைகளை மொழிபெயர்க்காமல் அப்படியே உபயோகித்து இருக்கிறார்கள். அதனால் 76 இடங்களிலும் ஒரே பொருளில் இதனை கருத்தில் கொள்ள உதவுகிறது.

இயேசு “தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி” (ஏசாயா 53:10, 12 ) பாதாளத்திற்கு இறங்கினார். ஆனால் அவர் ஆத்துமா பாதாளத்தில் (நரகம் – Hell - Sheol )விட்டு வைக்கப்படவில்லை. (சங் 16:10, அப் 2:27,31 )

பழைய ஆங்கில மொழியில் ‘ஹெல்’ (Hell) என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் ‘மறைத்துக்கொள்’ அல்லது ‘மூடிக்கொள்’ என்பதாகும். ‘helling the potatoes’ என்றால் உருளைக்கிழங்குகளை குழியில் புதைத்தல் என்று பொருள். ‘helling a house’  என்றால் மூடுவது அல்லது கூரை போடுவது என்பதாகும். இருண்ட காலத்தில் இறையியல் மேதைகள் நரகம் என்பதற்கு ‘வேதனை மிகுந்த இடம்’ என்ற தவறான அர்த்தத்தை புகுத்தும் முன் அந்தச் சொல், ‘ரகசிய, மறைந்து இருக்கும் மரண நிலை’ என்ற  சரியான கருத்தையே குறித்தது. அதன்படி பார்த்தால் நரகம் ( Sheol or Hades) என்றால், தன் நினைவற்ற உணர்வற்ற மரண நிலையைத்தான் குறிக்கிறது. 

நரகம் என்றால் நெருப்பு, வேதனை, கூக்குரல் நிறைந்த ஓர் இடம் எண்ட கருத்திற்கு மாறாக, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்”...“செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே (Sheol) செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே”. - பிர 9: 5,10

“மரணத்தில்  உம்மை நினைவு கூர்வதில்லை, பாதாளத்தில் (Sheol) உம்மை துதிப்பவன் யார்?” “பாதாளம் (Sheol) உம்மைத் துதியாது. மரணம் உம்மை போற்றாது”. “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.” ( சங் 6:5, 71:20, 146:4; ஏசாயா 38:18 ) என்று வேதம் கூறுகிறது.

 

நல்லோரும், தீயோரும் இறந்தபின் பாதாளத்திற்கு ( Sheol )  போவார்கள். உதாரணமாக யாக்கோபு ‘துக்கத்தோடு என் குமாரனிடத்தில் பாதாளத்தில் ( Sheol ) இறங்குவேன் என்றான்.  (ஆதி 37:35 ). யோபு தேவனிடத்தில் தன்னை பாதாளத்தில் ( Sheol ) உயிர்த்தெழுதல் மட்டும் மறைத்து வைக்கும்படி கூறுகிறான். (யோபு 14:,13). “மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?”. அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.” (யோபு 14:10; 17:16). நல் ஆத்துமாவும் தீய ஆத்துமாவும் உணர்வுகளற்ற மரண நிலைக்கே போகிறார்கள். அதிலிருந்து மரித்தோரின் உயிர்த்தெழுதலே ஒருவனை மீட்க முடியும்.

தேவன் ஆதாமிடம் பாவத்திற்கான தண்டனையை பற்றி கூறும்போது, “அதைப் புசிக்கும் நாளிலே நித்தியமாய் வேதனையை அனுபவிப்பாய்” என்று கூறவில்லை. ஆனால் “சாகவே சாவாய்” (ஆதி 2:17 ) அதாவது உயிரோடு இருக்கமாட்டாய் (ஜீவன் அற்றவனாய் இருப்பாய்)என்ற உண்மையைத்தான் சொன்னார்.

ஆதாம் புசிக்க வேண்டாம் என்று தேவனால் சொல்லப்பட்ட அந்த கனியை புசித்த அதே நாளில் ( 1000 வருடம் கொண்ட நாள் – 2 பேது 3:8  சங் 90:4 ) 930 வருடங்கள் வாழ்ந்து மரித்துப் போனான். 

தேவன் சொன்னதற்கு மாறாக பிசாசானவன் “நீங்கள் சாகவே சாவதில்லை” என்று பொய் சொன்னான். ஏனென்றால் அவன் இதன் மூலம் கிறிஸ்துவின் உயிர்தெலுதலின் முக்கியத்தை உலகம் காணமுடியாதவாறு செய்கிறான். அவன் பொய்யனும், பொய்க்கு பிதாவுமாயிருக்கிறான். (யோவான் 8:44 ) அன்றிலிருந்து, மரித்தவர்கள் உண்மையில் மரிக்கவில்லை, மரித்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நியாயத் தீர்ப்பின் நாளுக்கு காத்திருக்காமல், பரலோகத்திற்கோ அல்லது நித்திய வேதனைக்கோ சென்று விடுகிறார்கள் என்று அநேகரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால் வேதாகமம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது, “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்”, “மரித்தவர்களும், மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்”. அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்”. “ஆபிரகாம் எங்களை அறியான் இஸ்ரவேலுக்கு (யாக்கோபுக்கு) நாங்கள் அறியப்பட்டவர்க்களும்மல்ல” (பிரசங்கி 9:5, சங் 115:17, யோபு 14:21, ஏசாயா 63:16 )

பரலோகத்திலிருந்து இறங்கின இயேசு ஒருவரே  அல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவருமில்லை (யோவான் 3:13 அப் 2:34 ) என்று கிறிஸ்து சொல்லியிருக்கிறாரே.

வேதம் தெளிவாகச் சொல்லுகிறது, “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசேக் 18:4,20 ). “பாவத்தின் சம்பளம் மரணம்” (ஜீவனின் முடிவு – வேதனை அனுபவிக்கும் வாழ்க்கை அல்ல). ஆனால் “தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்”. இந்த வரத்தை துன்மார்க்கனுக்கு தேவன் கொடுப்பதில்லை. (1 யோவான் 3:15, 5:12, ரோமர் 6:23, அப் 4:12 )

“எல்லோரையும் (ஆதாமையும் அவன் சந்ததியையும் ) மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே”. (1தீமோ 2:4-6, யோவான் 3:16 ), இது குறித்த காலத்தில் விளங்கவிருக்கிறது. ஆதாமுக்கும் அவன் சந்ததிக்கும் உரிய தண்டனை (அபராதம்) நித்திய ஆக்கினையாக இருப்பின் அந்த தண்டனையைத்  தீர்க்க இயேசுவும் எல்லோருக்காகவும் நித்தியமாய் ஆக்கினையை அடைய வேண்டியதிருக்கும் அல்லவா? ஆனால் பாவத்தின் சம்பளம் மரணமே, ஆதலால் “கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்தார்”. ஒவ்வொருவருக்காகவும் மரணத்தைத்தான் ருசிபார்த்தார். அவர் மரித்தோரில் இருந்துதான் எழுப்பப்பட்டார். ( 1 கொரி 15:3,4; எபி 2:9; ரோமர் 5:6-10; கொலோ 1:18; வெளி 1:18 )

மரித்த நல்லவரும், தீயவரும் நித்திரையடைந்திருக்கிறார்கள் என்று வேதம் சொல்கிறது. ( 2 பேது 3:4; 2 இராஜா 21:18; யோவா 11:11-14; 1 தெச 4:13-17 ). அதாவது சுய நினைவற்ற , உணர்வற்ற நிலையில் இருந்து எழுப்பப்படுவதற்காக ஷியோல் அல்லது ஹெடஸில் (பாதாளத்தில்) காத்திருக்கிறார்கள். மரித்தோர் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால்... கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே (அழிந்திருப்பார்களே) என்று வேதம் கூறுகிறது. ( 1 கொரி 15:13-18). 

தேவன் கிறிஸ்துவின் மூலமாக நித்திய ஆக்கினையிலிருந்து அல்ல ஆனால் பாதாளத்தின் (ஷியோல்) வல்லமைக்கே எல்லோரையும் நீங்கலாக்கி மீட்கிறார். (ஓசியா  13:14 ).  இயேசு தமது இரண்டாம் வருகையில் மரித்தோரை உயிரோடு எழுப்பும் முன் மரணத்திலிருந்து ஒருவனும் எழுந்திருப்பதில்லை. (யோவான் 14:3, 1 கொரி  15:21-23, 52 ). பரிசுத்த பவுலும் மற்றவர்களும் தங்களது ஜீவ கிரீடத்தையும் மற்றும் பலன்களையும் பெற்றுக் கொள்ளும் முன் (2 தீமோ 4:8; 1 பேதுரு  1:5; 5:4 லூக்கா 14:14 ) ஒருவரும் மரணத்திலிருந்து எழுந்திருப்பதில்லை அல்லவா!

 

பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் இயேசுவினுடைய சத்தத்தைக் கேட்டு புறப்படுவார்கள் (யோவான் 5:28,29 ). ஆதாமுக்குள் நித்திரையடைந்தவர்களை பாதாளத்திலிருந்து விடுவிக்கும்போது பாதாளம் நிரந்தரமாக இல்லாமல் போகும்; “பாதாளமே நானே உன் சங்காரமாயிருப்பேன். (அழிவாயிருப்பேன்) நானே உன்னை சங்கரிப்பேன் (அழிப்பேன் –O grave [sheol] I will be thy destruction";) மரணமும், நரகமும், பாதாளமும், பிசாசும், மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியும் மரணத்துக்கேதுவான பாவிகளும் அக்கினிகடலிலே தள்ளப்படுவர். அக்கினி பொருட்களை சுட்டெரித்து அழித்து விடுவதால் வேதாகமத்தில் அக்கினிக் கடல் நிரந்தர அழிவைக் குறிக்க அடையாளமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது இரண்டாம் மரணத்தைக் குறிக்கிறது. அளவற்ற முழுமையான, நித்திய அழிவிலிருந்து எவரும் மீட்க்க முடியாது. (ஓசியா 13:14; வெளி 19:20, 20:14,15, 21:8, கலா 6:8, எபி 6:4-8, 10:26-31, 12:29,  1 யோவான் 5:16, யூதா 12,13 ).

வெளி 20:10, 14:10,11 இல் சொல்லப்பட்ட ‘வாதிக்கப்படுவார்கள்’, என்ற சொல் ‘சோதிக்கப்படுவார்கள்’, ‘பரீட்சிக்கப்படுவார்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பிசாசும், மிருகமும், கள்ளத்தீர்க்கதரிசியுமானவனின், தீய செயல்களும் போதகங்களும் நீதிமான்களால் சோதிக்கப்பட்டு  தேவநீதியின்படியே அவர்கள் அழிவிற்குரியவரானார்கள் (ஏசாயா 14:15-17) என்று இரவும் பகலும் சோதித்தறியப்படுவார்கள்.  

“வானத்திலேயும், பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு. இப்படி அநேக தேவர்களும், அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரேதேவன் நமக்குண்டு. அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். ஆகிலும் இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை." (I கொரி. 8:5-7)


இவ்வுலகில், கடவுளை நம்புகிறவர்களும் நம்பாதவர்களும் இருப்பினும் கடவுளை நம்புகிறவர்களே அதிகம். இந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் அநேக பிரிவினைகள் உண்டு. இதில் கிறிஸ்தவ மார்க்கத்தைச் சேர்ந்தோரே அதிகம். இந்தக் கிறிஸ்தவ மார்க்கத்திலும் எத்தனையோ சபைகள், மார்க்க பேதங்கள் இருக்கின்றன. பைபிள் என்ற ஒரே நூலையே வேதப் புத்தகமாகக் கொண்ட இந்தக் கிறிஸ்தவ மார்க்கத்தில் இத்தனைப் பிரிவுகள் ஏன் உண்டாயின? இதைக் குறித்து பவுல் அப்போஸ்தலன், 'உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்க பேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்க வேண்டியதே" என்று I கொரி 11:19-ல் கூறுகிறார். இப்படி பலவிதமான மார்க்க பேதங்கள் உண்டாகக் காரணம் என்ன?


  1. வேத ஆராய்ச்சிக் குறைவு.

  2. மூலபைபிள், பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. இந்த மூல பைபிளை, பிறமொழிகளில் மொழி பெயர்க்கும் போது ஏற்பட்ட சில தவறுகள்.

  3. புதிய ஏற்பாட்டில் சுமார் 4000 கையெழுத்துப் பிரதிகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரதிகளை மூலப் பிரதிகளி லிருந்து நகல் எடுக்கும்போது சில பிழைகள் ஏற்பட்டிருக்கின்றன. புதிய ஏற்பாட்டில் இப்போது பூர்வீக பிரதிகளாக இருப்பவைகள்:

  4. சிநெயாடிக் (SINAITIC-1844ல் கண்டுபிடிக்கப்பட்டது)

  5. வாடிகன் எண் 1209 (VATICAN No. 1209-1475ல் கண்டுபிடிக்கபட்டது.) C. அலெக்ஸாண்டிரியன் பிரதி (ALEXANDRINE-1968ல் கண்டு பிடிக்கப்பட்டது).


மேற்கூறிய பிரதிகளில் சிநெயாட்டிக்தான் மிகவும் பூர்வீகமானது. முதல் இரண்டு பிரதிகளும் நான்காம் நூற்றாண்டிலும், அலெக்ஸாண்டிரியன் பிரதி 5ம் நூற்றாண்டிலும் எழுதப்பட்டவைகள். இந்த பிரதிகளுக்கும், இதற்குப் பின்பு எழுதப்பட்ட பிரதிகளுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. இதனால் நம்மிடையே சில சத்திய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

 

4..ஒரு சிலர் ஓரிரு வசனங்களை மட்டுமே பிடித்துக் கொண்டு, சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு, ஒரு சபையை ஏற்படுத்திக்கொள்கின்றனர். ஒரு விஷயத்தைக் குறித்து ஆராயும்போது, அது சம்பந்தமான எல்லா வேத வாக்கியங்களையும ஆராய்ந்து பார்க்க வேண்டும்; அப்படிச் செய்யாமல், புரியாததை விட்டு விட்டு அல்லது தவறான அர்த்தம் எடுத்துக்கொண்டு புரிந்த சில வசனங்களைக்கொண்டு, ஒரு கொள்கையை வகுத்துக்கொள் கின்றனர். இதற்குக் காரணம் இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் (சாத்தான்) அவர்களது மனக்கண்களைக் குருடாக்கி இருப்பதேயாகும். (II கொரி 4:4).


வேதவாக்கியங்களை ஆராயும் பொழுது, ஒரு வசனம் மற்ற வசனத்திற்கு முரண் பாடாகத் தோன்றினால், நாம் அந்த வசனங்களின் உண்மைப் பொருளை அதாவது அந்த வசனங்கள் எந்தப் பொருளில் எழுதப்பட்டுள்ளதோ, அந்தப் பொருளை நாம் புரிந்து கொள்ளவில்லை என்பது புலனாகிறது; ஏனெனில் வேத வாக்கியங்க ளெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டு, ஒன்றுக்கொன்று இசைவாக இருக்கிற தேயல்லாமல், முரண்பாடாக இருக்காது. ஆகையினால்தான், "வேத வாக்கியங் களை ஆராய்ந்து பாருங்கள்'' என்று சொல்லப்பட்டிருக்கிறது. (யோவான் 5:39)."


கிறிஸ்தவ மார்க்கத்தில் ஒரு பிரிவினர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூன்று தேவர்கள் என்றும், மூவரும் சமம், சம நித்தியர் என்றும், இன்னுமொரு பிரிவினர் திரியேகர் அதாவது, மூவரும் ஒரே ஆளாக இருக்கிறார்கள் அல்லது ஒரே ஆள் மூவராக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். தேவனைப் பற்றி வேதம் என்ன கூறுகிறதென்பதை ஆராயலாம்.


                                                            

                                                                         பிதாவாகிய தேவன்


வானத்திலேயும், பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர் அநேகர் இருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு. இவர் தம்மில் தாமே ஜீவன் உடையவர். இவர் சிருஷ்டிக்கப்பட்டவரல்ல; இவருக்குப் பிறப்பும், இறப்பும், ஆதியும், அந்தமும் கிடையாது. ஆகையால் இவரை அநாதி தேவன் என்று வேதம் கூறுகிறது. (யோவான் 5:26; சங் 90:2 சங், 41:13)


இவர் திரியேக தேவனாக இல்லாமல், ஒருவராய், ஒன்றான மெய் தேவனாக இருக்கிறார் (உபா.32:39; சங். 136:4; ஏசா. 45:5,6; யோவான் 17:3; 1 தீமோ. 2:5). 

இவர் சாகாமையுள்ளவர்; மரிக்காத தன்மையுள்ளவர்; மரணம் இவரை நெருங்க முடியாது. சதா காலங்களிலும் உயிரோடிக்கிறவர் (1 தீமோ. 6:16; உபா. 32:40; ஆதி 21:33; louerf. 10:7).


பிதாவாகிய தேவனையல்லாமல் வேறே தேவன் இல்லை; இவருக்கு ஒப்பானவரோ அல்லது சமமானவரோ யாரும் கிடையாது. (II சாமு 7:22; I இராஜா
8:23; ஏசா 45:5,6; ஏசா 46,9).


தேவர்களுக்கெல்லாம் தேவன், பிதாவாகிய தேவனே என்று வேதம் கூறுகிறது வேதத்தில் தேவன் என்று அநேகரைச் சொல்லியிருந்தாலும், அந்த
(தானி 2:47; 1 கொரி 8:5,6).


இவரே மெய்யான சிருஷ்டிகர்; சகலத்தையும் உண்டாக்கினவர் (ஏசா 45:12; மல் 2:10, I கொரி 8:6).


பிதாவாகிய தேவன் அதரிசனமானவர்; மனுஷரில் ஒருவரும் கண்டிராதவர். காணக்கூடாதவர். ஒரு மனிதனும் இவரைக் கண்டு உயிரோடிருக்க முடியாது. இவரை ஒருவரும், ஒருபோதும் கண்டதில்லை. யாரும் அவருடைய ரூபத்தைக் கண்டதுமில்லை; அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை. (கொலோ 1:15 I தீமோ 6:16; யாத் 33:20; யோவா 1:18; I யோவா 4:12; யோவான் 5:37)


இவர் எங்கும் வியாபித்து இருப்பதில்லை. பரலோகம்தான் இவருடைய வா சஸ்தலம், (I இராஜா 8:30; மத் 6:9; மத் 10:32,33).


இவருடைய நாமம் “யேகோவா” என்பதே. யேகோவா என்பதற்கு இருக்கிற வராக இருக்கிறேன்' என்று பொருளாகும். (யாத் 6:2,3; சங் 83:17 யாத். 3:13,14).


பழைய ஏற்பாட்டில் “கர்த்தர்” என்று தடித்த எழுத்துக்களில் போடப் பட்டிருக்கிற எல்லா இடங்களிலும் “யேகோவா" என்றே வரவேண்டும். ஆங்கில வேதாகமத்தில் "LORD" என்று பெரிய எழுத்துக்களில் போடப்பட்டுள்ள எல்லா இடங்களிலும் "JEHOVAH" என்றே இருக்கவேண்டும். “யேகோவா" என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் சுமார் 7,000 தடவைகள் வருகிறது. அத்தியாவசிய மான சில இடங்களில் மட்டுமே யேகோவா என்று போட்டுவிட்டு மற்ற இடங்களி ளெல்லாம் கர்த்தர் என்றே போட்டிருக்கிறார்கள். (Refer : Strong's Concordance of the Bible)


இவர், சர்வ வல்லமையுள்ள தேவன்; நீதியுள்ளவர், அன்புள்ளவர், பூரண ஞான முள்ளவர். (ஆதி 17:1; யாத் 6:3; சங் 11:7; யோவா 3:16; I யோவா 4:8-11; யோபு 12.13; ரோம 16:27; ரோமர் 11:33).


இதுவரை பிதாவாகிய தேவனைக் குறித்துப் பார்த்தோம். இனி அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவைக் குறித்துப் பார்ப்போம்.


தேவனுடைய குமாரன் - இயேசு கிறிஸ்து

இயேசு என்ற கிரேக்க பதத்திற்கு “இரட்சகர்” என்று பொருள். (மத் 1:21) "மேசியா" என்ற எபிரேய பதத்தைக் "கிறிஸ்து" என்று கிரேக்க மொழியில் கூறப்படுகிறது. கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று பொருளாகும்.


பிதாவாகிய தேவனால் இயேசுகிறிஸ்து சிருஷ்டிக்கப்பட்ட காரணத்தினாலேயே அவர் தேவனுடைய குமாரனென்று அழைக்கப்படுகிறார். தேவன் சகலத்தையும் சிருஷ்டிப்பதற்கு முன்னதாகவே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சிருஷ்டித்து, இவர் மூலமாகவே சகலத்தையும் சிருஷ்டித்தார். தேவன் நேரடியாக இயேசு கிறிஸ்துவை மட்டுமே சிருஷ்டித்ததினால் இவர் தேவனுடைய நேரடி
சிருஷ்டிப்புக்கு ஆதியும், அந்தமுமாயிருக்கிறார். (கொலோ 1:15,16; வெளி 3:14; நீதி 8:22-30; எபி 2;11; வெளி 1:8). இவர் தேவனுடைய நேரடி சிருஷ்டியானதால், தேவனுடைய ஒரே பேரான குமாரனென்று அழைக்கப்படுகிறார். (யோவா1:18 ;யோவா 3:16; ரோம 8:32)


பிதாவாகிய தேவன், சகலத்தையும் தம்முடைய குமாரன் மூலமாகவே செய்து அதைப்பிதாவாகிய தேவன் அறிவிப்பதைப் போலவே, பிரதான தூதனாக இருந்த வந்தார். அதாவது ஒரு காரியத்தை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமானால், இயேசுகிறிஸ்து அவர்களுக்கு வெளிப்படுத்துவார். அதாவது கேட்கின்ற செய்திகள் அனைத்தும் பிதாவாகிய தேவனே பேசுவது போல் இருக்கும். ஆனால் அந்த வார்த்தைகள், குரல்கள் யாருடையவைகள் என்றால் கிறிஸ்துவினுடையவைகள். ஆகையால்தான் இயேசு கிறிஸ்துவுக்கு 'தேவனுடைய வார்த்தை' என்ற நாமம் கொடுக்கப்பட்டுள்ளது. (யோவான் 1:1; I யோவா 1:1 வெளி 19:13) இவர் தேவனுடைய வார்த்தையாகவும், கர்த்தருடைய தூதனாகவும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எவ்வாறு பணியாற்றினார் என்பதனைக் கீழே பார்க்கலாம்.


சீனாய் மலையிலே மோசேயுடன் பேசியதும், நியாயப்பிரமாணத்தைக் கொடுத்ததும் பிதாவாகியதேவனே என்று யாத் 31:12-18 வசனங்களில் பார்க்கிறோம். ஆனால், யாரும் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதும் இல்லை: அவர் ரூபத்தைக் கண்டதுமில்லையென்று, யோவா 5:37 கூறுகிறது. அப்படியானால் மோசேயோடு பேசியது யாரென்று பார்க்கும் போது, தூதனானவரே பேசி, நியாயப் பிரமாணத்தைக் கொடுத்ததாக வேதம் விளக்குகிறது. (அப் 7:38, 53) இந்த தூதரைத் தான்தேவன் இஸ்ரவேலரை வழிநடத்த அனுப்பினதாகவும் அவருடைய உள்ளத்தில் தேவனுடைய நாமம் இருப்பதாகவும் வேதம் கூறுகிறது (யாத் 23:20, 21). ரெவிதீமிலே இஸ்ரேல் மக்களுக்குத்தண்ணீர் கிடைக்காதபோது, இந்தத் தூதனானவர் ஒரேபிலே கன்மலையின் மேல் நிற்க, மோசே கன்மலையை அடிக்க, அங்கிருந்து புறப்பட்ட தண்ணீரைக் குடித்தார்கள் (யாத் 17:6). இவ்வாறு அவர்களோடு கூடச் சென்ற ஞானக்கன்மலை கிறிஸ்துவே என்று அப்போஸ்தலனாகிய பவுல், I கொரி 10:1-4ல் விளக்குகிறார்.


சிம்சோனின் பெற்றோர்களுக்குக் கர்த்தருடைய தூதனானவர் தரிசனம் (நியா 13:18). இந்த " அதிசயம்" என்ற நாமத்தையுடைய கர்த்தருடைய தூதனானவர், கொடுத்தபோது, அவர்கள் அவருடைய நாமத்தைக்கேட்க, அது “அதிசயம்" என்றார் கிறிஸ்துவே என்று ஏசாயா தீர்க்கதரிசி விளக்குகிறார் (ஏசா 9:6). இதிலிருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கர்த்தருடைய தூதனாகவும், தேவனுடைய வார்த்தையாகவும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பணியாற்றி இருக்கிறாரென்பது
ரூபகாரமாகிறது.


இயேசு கிறிஸ்து சுயமாய் எதுவும் பேசாமல், பிதாவாகியதேவனுடைய சித்தத்தின் படியும், கட்டளையின் படியும் பேசுகிறார். (உபா 18:18,19; யோவா 12:49; யோவா 14:10) இயேசு கிறிஸ்து தேவனுடைய தாசனாக (Servant- ஆங்கில பைபிள் காண்க) இருக்கிறார். (ஏசா 42:1; ஏசா 43:10)
பாவத்தில் விழுந்த மனித குலத்தை இரட்சிக்க தேவனே பூமிக்கு வராமல், தன்னிடத்தில் பிரதான தூதனாகப் பணியாற்றிய தம்முடைய ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பினார். (யோவா 3:16; யோவா 17.3; 1 யோவா 4:9, 14) நமக்காக மரித்த கிறிஸ்துவை, தேவனே மரித்தோரி லிருந்து உயிர்த்து எழுப்பினார் (ரோம 10:9; எபி 5:7; கொலோ 2:12);

இவரே தேவனுக்கும், மனுஷருக்கும் மத்தியஸ்தராக இருக்கிறார். ஆகையால் தான், நாம் தேவனிடத்தில் ஜெபிக்கும்போது இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஜெபிக்கிறோம் (I தீமோ 2:5 6; யோவான் 16:23).


இயேசு கிறிஸ்து மனிதனாகப் பூமியில் வருவதற்கு முன்பு தேவனுடைய வார்த்தையாக, அவருடைய தூதனாக, ஆவியின் சரீரத்திலிருந்து கிரியை செய்து வந்தார். அவர் ஆவியின் சரீரத்திலிருந்த போது, தேவனுக்கு எல்லாக் காரியங் களிலும் கீழ்ப்பட்டிருந்தார். அவர், என்னைக் குறித்து புஸ்தகச் சுருளில் எழுதப் பட்டிருக்கிறது; (சங் 40:7; லூக் 24:44) உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற வருகிறேன் என்று கூறி தேவ தூதரிலும் சிறியவராக நம்மைப் போல் மாம்ச சரீரத்தில் வந்தார். இவர் பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடத்தில் பிறந்தார் (லூக் 1:35) இவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவ கிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார் (லூக் 2:52), பின்னர் தனது முப்பதாவது வயதில் யோவான் ஸ்நானகனிடத்தில் ஞானஸ்நானம் பெற்று (லூக் 3:21-23), பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணப்பட்டார் (அப் 10:38). பாவமில்லாத இவர் மேல் நம் பாவம் சுமத்தப்பட்டது. நம்முடைய பாவத்தினிமித்தம் இவர் சிலுவையில் அறையப்பட்டு இரத்தஞ்சிந்தி மரித்தார். மரணபரியந்தம் அதாவது தமது சிலுவை மரண பரியந்தம் தேவனுக்குக் கீழ்ப்பட்டிருந்தார் (பிலி 2:8). குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டிருக்கிறோம் (I பேதுரு 1:19).


கிறிஸ்து ஆதாமினுடைய சந்ததியார் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார். இயேசு கிறிஸ்துவாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவுமில்லை (அப் 4:12) ஆகையால்தான் வேதம், 'குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்' என்றும்; அந்த ஜீவன் தேவகுமாரனில் இருக்கிறது என்றும் கூறுகிறது (I யோ 5:11,12). இதனால்தான் இயேசு, “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்' என்று திட்டமும் தெளிவுமாகக் கூறுகிறார். (யோவான் 14:6).


மரித்த இவரை தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பி, எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி, தம்மில்தாமே ஜீவனுடையவராய் இருக்க அருள் செய்திருக்கிறார். (யோவா 5:26).இதற்கு முன் அவர் தம்மில் தாமே ஜீவனுடையவராய் இருக்க வில்லை. அதாவது, சாகாமையைப் பெற்றிருக்கவில்லை எனவே தான் மனிதனாக வந்து மரிக்க முடிந்தது. இவ்வாறு இவர் சாகாமையைப் பெற்றிருந்தும் கூட, பிதாவாகிய தேவனுக்கு இனிவரும் காலங்களிலும் கூட கீழ்ப்பட்டிருப்பார். அதாவது, ஆயிரவருட யுக முடிவில் இராஜ்ஜியத்தை தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். (I கொரி 15:24-28) எனவே இயேசுவை விட தேவன் பெரியவர் என்றும், இயேசுவுக்கு தேவன் தலையாயிருக்கிறார் என்றும் வேதம் கூறுகிறது (யோவா 14:28; யோவா 10:29; I கொரி 11:3).


இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் விபரமாகப் பார்த்தோம். இனிமேல், இருவரும் ஒரே இதுவரை நாம் பிதாவாகிய தேவனைப் பற்றியும், அவருடைய குமாரனாகிய ஆளல்ல என்பதற்கும், இருவரும் சமமல்ல என்பதற்கும் வேத ஆதாரங்களைப்
பார்க்கலாம்.


பிதாவாகிய தேவன் சிருஷ்டிக்கப்படாதவர், சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவர் சாகாமையுள்ளவர். தம்மில் தாமே ஜீவனுடையவர். ஆனால், இயேசு கிறிஸ்துவோ, பிதாவாகிய தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர். நம்முடைய பாவங்களுக்காக மரித்தவர், இவருக்கு சாகாமை உயிர்த்தெழுதலுக்குப் பிறகே அருளப் பட்டிருக்கிறது. அப்படியிருக்க இருவரும் எப்படி ஒருவராயிருக்க முடியும்? சிந்தித்துப் பாருங்கள்.


பிதாவாகிய தேவன் எல்லாவற்றையும் அறிந்தவர். அவருக்குத் தெரியாது காரியங்கள் ஒன்றுமில்லை. இவர் தமது சுயசித்தத்தின்படி எல்லாவற்றையும் செய்கிறவர். ஆனால் இயேசு கிறிஸ்து அறியாத காரியங்கள் உண்டு. இவர் தம்முடைய சுயசித்தத்தின்படி எதையும் செய்யாமல், பிதாவின் சித்தத்தின்படியே செய்கிறவர் (மாற் 13:32; மத் 20:20-23; மாற் 10:40). ஆகையினால்தான் அவர் தம்மை நோக்கிக் கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லாமல், பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான் என்று கூறுகிறார் (மத் 7:21).


பிதாவாகிய தேவன் நியாயத் தீர்ப்பு செய்யும் அதிகாரத்தையும், ஒருவனுக்கு ஜீவனைக்கொடுக்கும் அதிகாரத்தையும் இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுத் திருக்கிறார். இயேசுவே தேவனென்றால் ஏன் இவருக்கு மற்றொருவர் அதிகாரம் கொடுக்க வேண்டும்? இதிலிருந்து இயேசு கிறிஸ்துவை விட, பிதா பெரியவர் என்பது தெளிவாகிறது (யோவா 5:22, 27; யோவா 10:18; மத் 28:18). பிதாவாகிய தேவனே இயேசுவை, கிறிஸ்துவும், ஆண்டவருமாக்கினார். (அப் 2:36; பிலி 2:9).


பிதா ஒருவரே தேவன், இயேசு கிறிஸ்து தேவனுக்கும், மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஆகையினால்தான் பிதாவாகிய தேவனை நோக்கி, மத்தியஸ்தராகிய கிறிஸ்து மூலம் நாம் ஜெபிக்கிறோம். தேவன், இயேசு கிறிஸ்துவை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி, இயேசு கிறிஸ்துவையும் நாம் கனம் பண்ணவேண்டும் என்பதற்காகத் தான், இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் ஜெபிக்க வேண்டுமென்று கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை அறியாமல் சிலர் இயேசு கிறிஸ்துவையே நோக்கி ஜெபித்து முடிவில் இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஜெபிக்கிறோம் என்று கூறி ஜெபத்தை முடிக்கிறார்கள் (I தீமோ 2:5 யோவா 5:23; யோவா 16:23). இது எவ்வளவு தூரம் பொருத்தமற்றது என்று பாருங்கள்.


மேலும் பிதாவாகிய தேவனுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும்
வித்தியாசங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பிதாவாகிய தேவன்

இயேசு கிறிஸ்து

1.பிதா-ஜீவனைக் கொடுப்பவர்

குமாரன் ஜீவனைப்பெறுபவர் (யோவா 5;26 6:57).

2.இராஜா

இராஜகுமாரன் (மத் 22:1, 2).

3.தோட்டக்காரர்

திராட்சைச்செடி (யோவா 15:1).

4.எஜமான்

தோட்டக்காரர் (லூக் 13:6-9).

5.நியாயாதிபதி(JUDGE)

மத்தியஸ்தர் (MEDIATOR) 1 தீமோ 2:5,6; Iயோவான்2:1).

6. அபிஷேகம் செய்தவர்

அபிஷேகம் செய்யப்பட்டவர் (சங் 2:6; நீதி 8:23;அப்.10:38).

7. ஆலயத்தில் வசிப்பவர்

ஆலயத்துக்கு மூலைக்கல் (ஏசா 28:16; எபோ 2:20).

 



இதுவரை தேவனுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்த்தோம். இனிமேல் தேவனும், இயேசு கிறிஸ்துவம் ஒரே ஆள் என்பதற்கு ஆதாரமாகச் சொல்லப்படும் வசனங்களுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.

 

  1. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் (1 தீமோ 3:16)


பிதாவே, கிறிஸ்துவாக மாம்ச சரீரத்தில் வந்திருந்தால் சாகாமையுடைய தேவன் மரித்திருக்க முடியாது: மரிக்கவில்லையென்றால் உயிர்த்தெழுந்திருக்கவும் இல்லை; கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் இல்லை; நம்முடைய விசுவாசமும், பிரசங்கமும் விருதா, நித்திய ஜீவனும் கிடையாது. ஆகையால், தேவன் மாம்சத்திலே வந்திருக்க முடியாது. மேலும், ஆங்கில வேதாகமத்தில் "GOD WAS MANIFEST IN THE FLESH" அதாவது, தேவன் மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டார் என்றிருக்கிறது. அப்படியானால், யார், யாரால் மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டார்? இயேசு கிறிஸ்து, பிதாவாகிய தேவனால் மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டார்.


இயேசுவையும் தேவன் என்று சொல்லியிருக்கிறதே என்று சிலர் கூறலாம். ஆம் இயேசுவும் ஒரு தேவன்தான். தேவன் என்றால் வல்லமையுள்ளவர் என்று பொருள். வானத்திலேயும், பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் அநேகர் உண்டு. உதாரணமாக மோசேயை ஆரோனுக்கும், பார்வோனுக்கும் தேவன் என்றும் (யாத். 4:16;7:1), வேதத்தை அறிந்தவர்கள் தேவர்கள் என்றும் (யோவா 10:35), சாத்தான் இப்பிரபஞ்சத்தின் தேவன் என்றும் (II கொரி 4:4), இயேசுவையும் தேவன் என்றும் (யோவா 1:1) வேதம் கூறுகிறது, இப்படி அநேக தேவர்கள் இருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு (I கொரி 8:5,6). ஆகையால்தான் வேதம், இயேசுவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்க வேண்டுமென்று கூறுகிறதேயல்லாமல், தேவனாக விசுவாசிக்க வேண்டுமென்று கூறவில்லை (1 யோவா 4:15; 5:5; மத் 16:16).


மேலும் 'தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்' என்ற இந்த வசனத்தில் 'தேவன்' (SINAITIC) இருக்கிறது. ஆகையால்தான் தமிழ் ஒத்துவாக்கிய வேதாகமத்தில் என்பதற்குப் பதிலாக 'அவர்' என்று பூர்வீகப் பிரதியாகிய சிநெயாட்டிக்கில் தேவன் என்ற வார்த்தைக்கு, 'அவர்' என்று மார்ஜினில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், திருத்திய மொழி பெயர்ப்பிலும், கத்தோலிக்க மொழி பெயர்ப்பிலும், மொபெட் (MOFFATT) மொழி பெயர்ப்பிலும், எம்பெடிக் டயகிலாட் (EMPHATIC DIAGLOTT பதிலாக 'அவர்' என்றே மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. எனவே, தமிழில் அந்த WORD FOR WORD TRANSLATION) மொழி பெயர்ப்பிலும், 'தேவன்' என்பதற்குப் வசனத்தின் சரியான மொழி பெயர்ப்பு என்னவென்றால், “அவர் மாம்சத்தில் வெந்து படுத்தப்பட்டார் '' என்பதே. இதிலிருந்து இயேசு, தேவனால் மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்டார் என்பது தெளிவாகிறது.


  1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவான் 1:1)


இந்த வசனத்தில் வார்த்தை என்பது தேவனுடைய வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது (வெளி 19:13; யோவா 1:14). அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்ற பகுதியை எடுத்துக்கொண்டு, கிறிஸ்துதான் தேவனாக இருந்தாரென்றும், தேவனே கிறிஸ்துவாக மாம்சத்தில் வந்தாரென்றும் சிலர் கூறுகின்றனர். ஆதியிலே வார்த்தை இருந்தது என்ற பகுதியை தியானிக்கும் பொழுது வார்த்தைக்கு ஆதி உண்டு. அதாவது ஆரம்பம் உண்டு என்று தெரிகிறது. ஆனால், தேவனுகோ ஆரம்பம் கிடையாது; ஏனெனில், அவர் அநாதிதேவன், ஆகையால், வார்த்தை என்பது பிதாவாகிய தேவனைக் குறிக்காது. 'அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது' என்பதில் உள்ள தேவன் என்ற வார்த்தைக்கும். 'அந்த வார்த்தை தேவனாயிருந்தது' என்பதில் உள்ள தேவன் என்ற வார்த்தைக்கும் வித்தி யாசமான வார்த்தைகள் கிரேக்க மூல பைபிளில் கொடுக்கப்பட்டு இருப்பதையும், இந்த வசனத்தின் எம்பெடிக் டயகிலாட் (EMPHATIC DIAGLOTT-WORD FOR WORD TRANSLATION) மொழி பெயர்ப்பையும் கீழே காணலாம்.


"In a beginning was the word, and the word was with the God and a god was the word".

 

Greek

English

Tamil

 

Hotheos


theos

The God


  a god

தேவன்


(ஒரு) தேவன்

பிதாவாகிய தேவனைக் குறிக்கிறது.

இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.


இதிலிருந்து இயேசு தான் தேவனென்று கூறமுடியாது என்பது தெளிவாகிறது. ஏனெனில், இயேசுவை ஒரு தேவனென்றும், அதாவது வானத்திலேயும். பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்களில், அவரும் ஒருவர் என்றும் பிதாவாகிய தேவனே, ஒன்றான மெய் தேவன் என்றும் வேதம் கூறுகிறது.

  1. என்னைக்கண்டவன் பிதாவைக்கண்டான் (யோவான் 14:9)

இந்த வசனத்தின் மூலம், பிதாவாகிய தேவனும், இயேசு கிறிஸ்துவும் ஒன்று என்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். இது மற்ற வேத வசனங் களுக்கு இசைவாக இல்லை. எப்படியெனில், பிதாவாகிய தேவனை ஒருவனும், { ஒருக்காலும் கண்டதில்லை; கண்டு ஒரு மனிதனும் உயிரோடிருக்கமுடியாது. ஒருக்காலும் அவருடைய சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவருடைய ரூபத்தைக் கண்டதுமில்லை என்று வேதம் கூறுகிறது. (யோவா 1:18; I யோவா 4:12; யாத் 33:20; யோவா 5:37). ஆனால் இயேசு கிறிஸ்துவையோ உலக மக்கள் கண்டனர், அவர் சத்தத்தைக் கேட்டனர் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். அப்படியானால், வேத வசனம் முரணானதா ? அல்லவே. அப்படியானால், இதன் பொருள் என்னவென்று பார்க்கும்பொழுது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமாயிருக்கிறார். அதாவது, அவருடைய தன்மையின் சொரூ பமாயிருக்கிறார். (கொலோ 1:15; II கொரி 4:4; எபி 1:3). இவ்வாறு இயேசு கிறிஸ்து தேவனுடைய தன்மையின் சொரூபமாயிருக்கிறதினாலேயே “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்" என்று கூறினார். ஆகையால், என்னைக் கண்டவன் என்ற வார்த்தை மாம்சக்கண்களால் 'காணுதல்' என்ற பொருளைக் குறிக்காமல், மனக் கண்களால் குணம், பண்பு இவைகளைக் காணுதல் அதாவது, 'அறிதல்' என்ற பொருளையே குறிப்பதாகும். அதாவது, 'என்னை அறிந்தவன் பிதாவை அறிவான்' என்று கூறுகிறார். (யோவா 8:19) ஆகையினால், இந்த வசனத்தை கொண்டு பிதாவும்,குமாரனும் ஒன்று என்று கூறுவது தவறான உபதேசமாகும்.


  1. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் (யோவான் 10:30)


இந்த வசனத்தை வைத்துக் கொண்டு, பிதாதான் கிறிஸ்து, கிறிஸ்துதான் பிதா என்று அநேகக் கிறிஸ்தவர்கள் விசுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்து நானே பிதா என்று கூறாமல், "நானும், பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" (நானும் பிதாவும் என்று கூறும்போதே, அது இரண்டு பேரைக் குறிப்பிடுவதை நாம் கவனிக்கவேண்டும்) என்று கூறுவதை அவர்கள் கவனிக்கிறதில்லை. ஏனெனில், யோவா 17:21ல் "அவர்களெல்லாரும் (சீஷர்கள்) ஒன்றாயிருக்கவும்......... நீர் என்னிலேயும், நான் உம்மிலேயும் இருக்கிறது போல, அவர்கள் எல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்கிறேன்" என்று கூறிகிறார் மேலும், அடுத்த வசனத்தில், 'நாம் ஒன்றாயிருக்கிறது போல. அவர்களும் ஒன்றாயிருக்கும் படிக்கு……” என்று கூறுகிறார். ஆகையால் யோவா 10:30ன்படி பிதாவும், குமாரனும் ஒரே ஆளென்று கூறுவோமேயானால், இங்கே சீஷர்கள் அனைவரும் ஒரே ஆளென்று கூறவேண்டியிருக்கும். இது எவ்வளவு அபத்தமாய் முடியும் பாருங்கள். ஆகையால், “ஒன்றாயிருக்கிறோம்'' என்று ஒருமைப்பாட்டை விளக்குவதற்காகவே கிறிஸ்து கூறுகிறார். (யோவா 17:23). அதாவது, சீஷர்கள் தேவனுடைய ஊழியத்தைச் செய்வதில் ஒரே சிந்தை, ஒரே எண்ணம் உடையவர்களாக இருக்க வேண்டுமென்று கிறிஸ்து ஜெபிக்கிறார். அதே போல, பிதாவும் குமாரனும் தெய்வீக திட்டத்தை நிறைவேற்றுவதில் ஒரே எண்ணம், ஒரே சிந்தை உடையவர்களாக இருக்கிறார்கள். அதாவது கிறிஸ்து சுயசித்தமாய் எதையும் செய்யாமல், தேவ சித்தத்தின்படி எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறார். மேலும் I கொரி 3:5-8ல் நடுகிறவனும், நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் பவுலும், அப்பொல்லோவும் ஒரே ஆளா? அல்லது சமமானவர்களா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் ஒருமனப்பட்டிருக்கிறார்கள் என்பதே பொருளாகும். அடுத்து மத் 19:5,6; எபே 5:31ல் உள்ளபடி கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாயிருக் கிறார்கள். இதை வைத்து கணவனும், மனைவியும் ஒரே ஆள் என்றோ அல்லது சமம் என்றோ கூற முடியுமா? அதைப் போலவே "நானும், பிதாவும் ஒன்றாயிருக்கி றோம்' என்றால், இருவரும் ஒரே ஆளென்றோ, சமமானவர்கள் என்றோ, பொருள் கொள்ளாமல், இரட்சிப்பின் திட்டத்தில், இருவரும் ஒருமனப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.


  1. பிலி 2:6ல் உள்ளபடி, "தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்' என்ற வார்த்தைகளைக் கொண்டு, இயேசு தேவனுக்குச் சமமானவர் என்று சிலர் கூறுகின்றனர். இதுவும் தவறான உபதேசமாகும். இயேசு கிறிஸ்து தேவனாகவோ, அல்லது தேவனுக்குச் சமமானவராகவோ இருப்பது உண்மையென்றால், “கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த வசனத்தை ஆழ்ந்து சிந்திப்போமேயானால், இயேசு கிறிஸ்து தேவனுக்குச் சமமல்ல என்பது தெளிவாகும். மேலும், KING JAMES VERSION மொழி பெயர்ப்பில் பிழையிருப்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 இந்த வசனத்தின் பிறமொழி பெயர்ப்புகளைக் கீழே கொடுத்துள்ளோம்.


  1. "Did not think it a matter to be earnestly desired" Clarke.
  2. "Did not regard........... as on object of solicitous desire" Stewart 

iii. "Though not....... a thing to be seized" Sharpe.


  1. "Did not eagerly grasp" Neeland.

  2. "Did not violently strive" Dickenson.

  3. "Did not meditate a usurpation" Turnbull.


vii. "Who, though being in god's form, yet did not meditate a usurpation to be like God, but divested himself, taking a bondman's form" (EMPHATIC DIAGLOTT).


இந்த பல்வேறு மொழி பெயர்ப்புகளிலிருந்து தேவனுக்குச் சமமாயிருப்பது கொள்ளையாடக் கூடிய பொருளல்ல என்றும், அவர் கொள்ளையாடி தேவனுக்குச் சமமாயிருக்க விரும்பவில்லையென்றும் அறிந்து கொள்கிறோம். அதாவது, இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால், லூசிபர் (சாத்தான்). தான் தேவனுக்குச் சமமாக வேண்டும் என்று எண்ணியதுபோல, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய சாயலைப் (குணநலன்களை) பெற்றிருந்தும்கூட தேவனுக்குச் சமமாக வேண்டுமென்று எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி
அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார் என்பதே.


மேலே சொல்லப்பட்டவைகளிலிருந்து இயேசு கிறிஸ்து, பிதாவாகிய தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவரென்றும், கிறிஸ்து பிதாவுக்குச் சமமானவரல்ல என்றும்,
முக்காலத்திலும் கிறிஸ்து தேவனுக்குக் கீழ்ப்பட்டவர் கீழ்ப்பட்டிருப்பாரென்றும் அறிந்து கொள்கிறோம்.


பரிசுத்த ஆவி


பரிசுத்த ஆவியை, ஆள் தத்துவமுடைய மூன்றாவது தேவனாகப் பெரும் பாலான கிறிஸ்தவர்கள் கூறி வருகின்றனர். இது மிகவும் தவறான உபதேசமாகும். பரிசுத்த ஆவியைக் குறித்து வேதம் கூறுவதை ஆராயலாம்.


பரிசுத்த ஆவி - உன்னதத்திலிருந்து வரும் பெலன், அது உன்னதமான வருடைய (தேவனுடைய) பலம் (Power) என்று வேதம் கூறுகிறது (லூக் 1:35 லூக்
24:19; u 1:8; 2:33; 10:38).


பழைய ஏற்பாட்டுக் காலத்தில், பிதாவாகிய தேவனாகவும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு கிறிஸ்துவாகவும் கிறிஸ்து பரலோகம் சென்ற பிறகு, பரிசுத்த ஆவியானவராகவும் கடவுள் கிரியை செய்துவருகிறாரென்று அநேகக் கிறிஸ்தவர்கள் நம்பி வருகிறார்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கிறிஸ்து தேவனுடைய தூதனாக, ஊழியக்காரராக, தேவனுடைய வார்த்தையாகப் பணியாற்றி வந்தாரென்பதை முன்னமே பார்த்தோம். பரிசுத்த ஆவியும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்தது என்பதைக் குறித்துப்பார்ப்போம். கர்த்தர் தம்முடைய ஆவியை சிம்சோன்மீது இறங்கப் பண்ணினதினால், அவன் பலங்கொண்டு ஒரு சிங்கத்தை, ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுகிறது போலக் கிழித்துப் போட்டான். மேலும், கர்த்தருடைய ஆவி அவன் மீது இறங்கினதினால், அஸ்கலோன் என்னும் ஊரில் 30 பேரைக் கொன்று போட்டான். மேலும், அவன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால். அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் அறுந்துபோயிற்று. ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கொண்டு, 1,000 பேரைக் கொன்று போட்டான். (நியா 14:6, 19:15:14,15) மேலும், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தீர்க்க தரிசனம் உரைத்த தீர்க்கதரிசிகள் அனைவரும் பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே தீர்க்கதரிசனம் உரைத்து, எழுதினார்கள். எனவே, பரிசுத்த ஆவி தேவனுடைய வல்லமை (Power of God) என்று தெரிகிறது.


ஆவி என்ற சொல் 713 முறை வேதத்தில் இடம் பெறுகிறது. ஆவி, ஆவியானவர் என்ற வார்த்தைகள் பழைய ஏற்பாட்டில் "RUACH" என்னும் எபிரேய வார்த்தையி லிருந்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதற்கு 'காற்று' 'ஆவி' என்று பொருள். மேலும், இந்த வார்த்தை கீழ்க்கண்டவாறும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

 

எபிரேய பைபிள்

ஆங்கில பைபிள்

தமிழ் பைபிள்

பழைய ஏற்பாட்டில் வரும் மொத்த இடங்கள்


RUACH

RUACH

RUACH

RUACH

RUACH

BLAST

BREATH

MIND

SMELL

WIND



சுவாசம்

சுவாசம்

மனம்

முகர்தல்
காற்று

யாத்.15:8 (4தடவை)
ஆதி.6:17;7:15 (28தடவை)
ஆதி.26:35 (6தடவை)
ஆதி.8:21 (8தடவை)
ஆதி.8:1                (91 தடவை)




 


புதிய ஏற்பாட்டில் ஆவி, ஆவியானவர் என்ற வார்த்தைகள் PNEUMA என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கும் காற்று, ஆவி என்றுதான் பொருள். மேலும், இந்த வார்த்தை கீழ்க்கண்டவாறும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.

கிரேக்க பைபிள்

ஆங்கில  பைபிள்

தமிழ் பைபிள்

 

PNEUMA

PNEUMA

PNEUMA

LIFE

WIND

SPIRITUAL

ஆவி

காற்று

ஆவி

வெளி.  13:15

யோவா.  3:8

I கொரி. 14:12

 



RUACH, PNEUMA என்ற இரு வார்த்தைகளும் அஃறினையும் ஒன்றன் பாலுமாகும். (ஆதாரம் : A Critical Lexicon And Concordance To English and Greek New Testament By Ethelbert - W-Bullinger (Page:728). Theology of The New Testament By Rudolf Bultmann (Page 153)], மூல பைபிளிலிருந்து பார்க்கும் பொழுது ஆவி, ஆவியானவர் என்ற பதங்களுக்கு ஒரே வார்த்தை இருப்பது தெரிய வருகிறது. ஆவி என்று அஃறினையில் மட்டும் மொழி பெயர்த்திருந்தால் இந்த குழப்பம் வந்திருக்காது. தமிழ் வேதாகமத்தில் ஆவியானவர் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு. அநேகர் பரிசுத்த ஆவியே ஆள் தத்துவ முடைய தேவனாகக் கருதுகிறார்கள். 'ஆவியானவர்' என்பதற்குப் பதிலாக "ஆவி" என்று தமிழ் வேதாகமத்திலே சரியாக மொழி பெயர்க்கப்பட்டிருக்குமேயானால், இந்தக் குழப்பம் ஏற்பட்டிருக்காது. உதாரணமாக, யோவான் 14:17ல் Spirit of Truth என்பதற்கு சத்திய ஆவியானவர் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே பதம் (Spirit of Truth) I யோவா 4:6ல் வரும்போது, சத்திய ஆவியானவர் என்பதற்குப் பதிலாக, மொழி பெயர்ப்பாளர்கள் சத்திய ஆவி என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள் ஏனெனில், I யோவா 4:6ல் Spirit of Error என்ற ஒரு பதம் வருகிறது. Spirit of Truth என்பதை சத்திய ஆவியானவர் என்று மொழிபெயர்த்தால் Spirit of Error என்பதை வஞ்சக ஆவியானவர் என்று மொழி பெயர்க்க வேண்டும். வஞ்சக ஆவியானவர் என்று மொழி பெயர்த்திருந்தால், அது இன்னொரு சாத்தான் இருப்பதாகப் பொருளாகி விடும். சாத்தான் ஒருவனே என்ற காரணத்தினால், அந்த இடத்தில் வஞ்சக ஆவியானவர் என்று மொழி பெயர்க்காமல், வஞ்சக ஆவி என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். Spirit of Error என்ற பதத்தை வஞ்சக ஆவி என்றால், Spirit of Truth என்ற பதத்தை சத்திய ஆவி என்றே மொழி பெயர்க்க வேண்டிய அவசியம் ஆகிவிட்டது. ஆகையால், யோவான் 14:17ல் Spirit of Truth என்பதை சத்திய ஆவி என்றே மொழி பெயர்த்திருக்க வேண்டும். மேலும், ஆவியானவர் என்று இருக்கிற எல்லா இடங்களிலும் 'ஆவி' என்று சரியாக மொழி பெயர்த்திருந்தால், பரிசுத்த ஆவியை, ஆள் தத்துவமுள்ள தேவனாகக் கருத இடமிருந்திருக்காது.


யோவான் 14:16,17,26 வசனங்களில் வருகிற 'தேற்றரவாளன்' என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு, பரிசுத்த ஆவியை தேவன் என்று அநேகர்


கூறுகிறார்கள். தோற்றரவாளன் (Comfortor) என்ற வார்த்தை PARAKLETOS என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இது பெயர்ச்சொல் அல்ல; Verbal Adjective ஆகும். (ஆதாரம் : An Expository Dictionary of Biblical encouragement, Assistance, Strengthening) என்ற அர்த்தத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. இது தேற்றும் ஒன்றாகயிருப்பதால் ஆள் தத்துவமுடைய Words By W.E. Vine, M.A.). இது துணைபுரியும் அல்லது பலப்படுத்தும் (help, தேவனைக் குறிப்பிடுகிறது என்று கூறமுடியாது. ஏனெனில் உமது கோலும், உமது தடியும் என்னைத் தேற்றும் (சங் 23:4) என்பதிலிருந்து கோலும், தடியும் ஒரு ளென்று கூறமுடியுமா? மேலும், உணர்த்துவார், போதிப்பார் என்ற வார்த்தை கூறுகிறார்கள் அப்படியானால், "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக் களை வைத்துக் கொண்டு, பரிசுத்த ஆவியை ஆள் தத்துவமுள்ள தேவனாகக் கொள்ளாதவனை நியாயந்தீர்ப்பது ஒன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும் என்று நமதாண்டவர் கூறியிருக்கிறாரே (யோவா 12:48). ஆளல்லாத வார்த்தை எப்படி நியாயந்தீர்க்கும்? மேலும், 'துரு' மனித மாம்சத்தைத் தின்னுமாமே! 'கூலி' கூக்குரலிடுமாமே! (யாக் 5:3,4) இதெல்லாம் எப்படி? 'பூமி' தன் வாயைத்திறந்து தாத்தானையும், அவன் கூட்டத் தாரையும் விழுங்கிப் போட்டதாமே (எண் 16:30-32). இதெல்லாம் ஆளல்லாத பொருள், ஒரு செயலைச் செய்வதாக அலங்காரமாக வேதத்தில் எழுதப்பட்டுள்ளது அவ்வாறே பரிசுத்த ஆவியும் போதிப்பார், கண்டித்து உணர்த்துவார் என்றும் கூறப் பட்டுள்ளது. மேலும் I யோவா 2:27ல், யாரும் உங்களுக்குப் போதிக்க வேண்டுவ தில்லை நீங்கள் பெற்ற அபிஷேகமே போதிக்குமென்று கூறப்பட்டிருக்கிறது. ஆகையால் பரிசுத்த ஆவியினால் நாம் அபிஷேகம் பெறும்போது, நாம் தேவனுடைய வல்லமையாகிய பரிசுத்த ஆவியால் போதிக்கப்படுகிறோம், உணர்த்தப்படுகிறோம் ஆகையால், 'தோற்றரவாளன்' என்ற வார்த்தையைக் கொண்டு, பரிசுத்த ஆவியை ஆள் தத்துவமுள்ள தேவனென்று கூறமுடியாது.


மேலும், அந்த தேற்றரவாளனை' 'அவர்' என்று கூறுவதால், பரிசுத்த ஆவியை ஆள் தத்துவமுள்ள தேவனாகக் கூறுகிறார்கள் (யோவா 16:13,14). ஆனால், இந்த 'அவர்' என்ற வார்த்தை, எந்த கிரேக்க பதத்தின் தமிழாக்கம் என்பதை ஆராய்ந்தால், அதன உண்மைப் பொருளை நாம் உணர்ந்து கொள்ள முடியும். 'அவர்' என்பது 'EKINOS' என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த 'EKINOS' என்ற வார்த்தையை 'அவர்' என்று மட்டுமல்ல; 'அது', 'அவள்' என்றும் கூட வேதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கீழே கொடுக்கப்பட்டதி லிருந்து தெரிந்து கொள்ளலாம்.



கிரேக்க பைபிள்

ஆங்கில பைபிள்

தமிழ் பைபிள்

 

EKINOS

EKINOS

EKINOS

EKINOS

EKINOS

EKINOS

He

That

She
It

Same

Those

அவர்

அந்த

அவள்

அதைக் குறித்து

அந்த நாள்

அந்நாட்களில்

யோவான் 16:13,14

லூக் 10:12

யோவான் 20:15

I யோவா 5:16

யோவான் 5:9

லூக் 20:1


ஆகையால், 'அவர்' என்ற வார்த்தையை 'அது' என்றும், மொழி பெயர்த் திருக்கலாம். ஆனால் இது தேவனிடத்திலிருந்து வரும் வல்லமையாகையால், உயர் தினையில் ஆண்பாலாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் 'ஆதவன் உதித்தான்' என்று சூரியன் உதித்ததைக் கூறிகிறோம். ஆகையால், சூரியன் ஆளென்று கூற முடியுமா? முடியாது. அதைப் போலவே பரிசுத்த ஆவியையும், ஆள் தத்துவமுள்ள தேவனாகக் கூற முடியாது.


மேலும், பரிசுத்த ஆவிக்கு 'தம்முடைய சுயமாய்' (Himself) என்றபதம் போடப்பட்டிருப்பதால், தம்முடைய சுயமாய் (Himself) என்ற வார்த்தை அஃறினைப் பொருளுக்கு வராமல், உயர்தினை ஆண்பாலுக்கு மட்டுமே வருவதால், பரிசுத்த ஆவியை, ஒரு ஆள் தத்துவமுள்ள தேவனாகக் கூறுகிறார்கள் (யோவான் 16:13). ஆனால், இந்த 'தம்முடைய சுயமாய்' என்ற வார்த்தை, எந்த கிரேக்க பதத்தின் தமிழாக்கம் என்பதை ஆராய்ந்தால் அதன் உண்மைப் பொருளை நாம் உணர்ந்து கொள்ளமுடியும். 'தம்முடைய சுயமாய்' என்பது 'HEAUTOU' என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த 'HEAUTOU' என்ற வார்த்தை 'தம்முடைய சுயமாய்' (Himself) என்ற உயர்தினை ஆண்பாலுக்கு மட்டுமல்ல, பெண்பாலுக்கும் (Herself) அஃறிணைக்கும் (Itself) கூட வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கீழே கொடுக்கப்பட்டவைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

 

கிரேக்க பைபிள்

தமிழ் பைபிள்

ஆங்கில பைபிள்

 

HEAUTOU
HEAUTOU
HEAUTOU
HEAUTOU
HEAUTOU
HEAUTOU
HEAUTOU
HEAUTOU
HEAUTOU
HEAUTOU
HEAUTOU
HEAUTOU

தம்முடைய சுயமாய்

தன் தலையை

தன்னைத்தீர்க்கதரிசியென்று

தற்பொழிவை

நாமே நம்மை

தங்களை

உங்களுக்குள்ளே

உங்களுக்குள்ளே
தன்னுடைய

தானாய்

தனக்கு

தனக்குத்தானே

Himself

Herhead

Herself

Her own

Ourselves
Themselves
Yourselves
In you

Itself

Itself

Itself

Itself

யோவான் 16:13

I கொரி 11:5

வெளி 2:20

I கொரி 13:5

I கொரி 11:31

I கொரி 16:15

லூக் 22:17

யோவா 6:53

மத் 6:34

யோவான் 15:4

எபே4:16

மார் 3:24,25



ஆகையால், தம்முடைய சுயமாய்' என்ற வார்த்தையை உயர்தினை ஆண்:பாலில் (Himself) மொழி பெயர்க்காமல், அஃறினையில் (Itself) மொழி பெயர்க்கப்பட்டிருக்கவேண்டும். இது தேவனிடமிருந்து வருகிற வல்லமையாக இருப்பதால், அதை உயர்தினை ஆண்பாலில் கூறியிருக்கிறார்கள்.


இதுவரை நாம் பரிசுத்த ஆவி, தேவனுடைய வல்லமை என்பதற்கான ஆதாரங் களைப்பார்த்தோம். இனிமேல், பரிசுத்த ஆவி ஆள் தத்துவம் உள்ள தேவனல்ல என்பதற்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள ரூபகாரங்களைத் தியானிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

பரிசுத்த ஆவி ஆள் தத்துவமுள்ள தேவனல்ல என்பதற்கு ரூபகாரங்கள்


  1. பிதாவுக்கு நாமம் - யேகோவா யாத் 6:2,3.

 குமாரனுக்கு நாமம் - இயேசு கிறிஸ்து

பரிசுத்த ஆவிக்கு நாமம் என்ன?


பரிசுத்த ஆவி, ஒரு தேவனாக இருந்திருப்பாரேயானால், அவருக்கு ஒரு நாமம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமே! எனவே, பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய வல்லமையே அல்லாமல் ஒரு தேவனல்ல.


  1. வேதத்தில் பிதாவாகிய தேவனுக்கும், அவருடைய குமாரனுக்கும் ஸ்துதியும், ஸ்தோத்திரமும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பரிசுத்த ஆவிக்கு ஸ்துதியும், ஸ்தோத்திரமும் சொல்லப்படவில்லை. ஏன்? பரிசுத்த ஆவி ஒரு தேவனாக இருந்தால், அவருக்கும் ஸ்துதியும் ஸ்தோத்திரமும் சொல்லப்பட்டிருக்க வேண்டுமே!

  2. பிதாவுக்கும், குமாரனுக்கும் சிங்காசனம் இருந்ததாகப் பார்க்கிறோம். (வெளி 22:1). அதுமட்டுமல்லாமல், வெளி4:6ல், நான்கு ஜீவன்களுக்கு சிங்காசனமும், வெளி 4:4ல் 24மூப்பர்களுக்குச் சிங்காசனமும். மத் 19:28ல் பரிசுத்தவான் களுக்கு சிங்காசனமும் இருந்ததாகப் பார்க்கிறோம். ஆனால், பரிசுத்த ஆவி ஒரு தேவனாக இருந்திருந்தால், அவருக்கும் சிங்காசனம் சொல்லப்பட்டிருக்க வேண்டுமே! ஏன் சொல்லப்படவில்லை?

  3. தேவன் தம்மைப் பற்றி பேசியிருக்கிறார் ஏசா 43, 44 அதிகாரங்கள், கிறிஸ்து தம்மைப் பற்றி பேசி இருக்கிறார் யோவான் 10ம் அதிகாரம், பரிசுத்த ஆவியும் ஒரு ஆளாக இருந்திருந்தால், தம்மைப் பற்றி பேசி இருக்கவேண்டுமே. ஆனால், பேசினதாக வேதத்தில் இல்லையே! ஏன்?

  4. பரிசுத்த ஆவி, ஒரு ஆள் தத்துவமுள்ள தேவனாக இருந்தால், எப்படி ஒரு அஃறினைப்பொருளுக்கு அதாவது, அபிஷேக எண்ணை அல்லது தைலத் திற்கும் (சங்:45:7; 133:2). முத்திரைக்கும் (எபே 4:30), அச்சாரத்திற்கும் (II கொரி 1:22; 5:5), ஜீவத் தண்ணீருக்கும் (யோவா 7:38,39; யோவா 4;14), பனிக்கும் (சங் 133:3), சத்திய ஆவிக்கும் (I யோவா 4:6) அக்கினிக்கும் (அப் 2:3), பொக்கிஷத்திற்கும் (II கொரி 4;7), தேவனுடைய விரலுக்கும் (லூக். 11:20) ஒப்பிட முடியும்?

  5. பரிசுத்த ஆவி, ஒரு ஆள் தத்துவமுள்ள தேவனாகயிருந்தால், எப்படி அளக்க முடியும்? தேவன் பரிசுத்த ஆவியைக்கிறிஸ்துவுக்கு அளவில்லாமல் கொடுத்து இருக்கிறார் (யோவா 3:34). மற்றவர்களுக்கு அளவோடு கொடுத்திருக்கிறார் (ரோம 12:3) மேலும், பரிசுத்த ஆவி ஆளாயிருந்தால், ஒருவரிடமுள்ள ஆவியை 70 பேருக்குப் பகிர்ந்து கொடுக்க முடியுமா? (எண். 11:25)

  6. பரிசுத்த ஆவி, ஒரு ஆள் தத்துவமுள்ள தேவனாகயிருந்தால், எப்படி அவித்துப் போடமுடியும்? ஊற்றப்பட முடியும்? (I தெச 5:19; யோவேல்
    2:28,29 ;அப்.10:45, 46)

  7. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் தேவர்கள் என்றால், சமமானவர்கள் என்றால், தேவன் (பிதா), ஒரு தேவனை (இயேசு கிறிஸ்துவை) இன்னொரு தேவனால் (பரிசுத்த ஆவி) ஏன் அபிஷேகம் பண்ண வேண்டும்? (அப் 10:38) பரிசுத்த ஆவி, ஆள் தத்துவமுள்ள தேவனாக இராமல், தேவனுடைய வல்லமை யாக இருப்பதால் தான் பிதாவாகிய தேவன், தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணினார்.

  8. அப்போஸ்தலர்கள் நிரூபங்களின் துவக்கத்தில் சபைகளுக்கு ஆசீர்வாதம் கூறும் பொழுது பிதா, குமாரன் பெயர்களால் மட்டுமே கூறுகிறார்கள். பரிசுத்த ஆவியாகிய தேவன் (?) பெயரால் கூறுவதில்லையே, ஏன்?

  9. வேதாகமத்தின் முக்கிய நோக்கமே, ஒவ்வொரு மனிதனும் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதுதான். இதற்காகத் தான் பிதாவாகிய தேவன், தம்முடைய ஒரே பேரான குமாரனென்றும் பாராமல், இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பி, பலி கொடுத்தார். நம்முடைய விசுவாசம், ஊழியம், ஓட்டம் எல்லாமே அந்த நித்திய ஜீவனுக்காகத்தான். அந்த நித்திய ஜீவனைப் பெற ஒன்றான மெய் தேவனையும் (யேகோவா) இவரால் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவையும் அறிந்தால் போதுமென்று வேதம் கூறுகிறது (யோவா 17:3). பரிசுத்த ஆவி, ஆள் தத்துவமுள்ள தேவனாகயிருந்திருந்தால் அவரையும் அறிந்து கொள்ள வேண்டுமென்று வேதம் கூறியிருக்குமே.


மேலும், வேதத்தில் பல்வேறு இடங்களில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைப் பற்றி சொல்லப்பட்டிருந்தாலும் அப்போஸ்தலனாகிய பவுல்கொரிந்து சபைக்கு தேவனைப் பற்றிய அறிவை ஒட்டு மொத்தமாக அறிவிக்கும்பொழுது, வானத்தி லேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் அநேகர் இருந்தாலும், பிதாவாகிய தேவன் ஒருவரே தேவனென்றும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மட்டுமே கர்த்தரென்றும், தெளிவுபடுத்துகிறார் (I கொரி 8:5-7). பரிசுத்த ஆவி, ஒரு ஆள் தத்துவமுள்ள தேவனாகயிருந்திருந்தால், இந்த இடத்தில் பரிசுத்த ஆவியைப் பற்றிக் கூறியிருக்கவேண்டுமே ஆனால், கூறப்படவில்லையே ஏன்?


மேலும், இயேசு கிறிஸ்து யாரை விசுவாசிக்க வேண்டுமென்று தன்னுடைய சீஷர்களுக்கு போதிக்கும் பொழுது, பிதாவாகிய தேவனையும், தன்னையும் மட்டுமே விசுவாசிக்க வேண்டுமென்று கூறுகிறார் (யோவா 14:1). பரிசுத்த ஆவி ஒரு ஆள் தத்துவமுள்ள தேவனாகயிருந்திருந்தால், பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்க வேண்டுமென்று இயேசு கிறிஸ்து கூறியிருந்திருப்பாரே. மேலும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்க வேண்டுமென்று வேதத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

 


இவ்விதமாகவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களிளெல்லாம் பரிசுத்த ஆவியாகிய தேவனைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை ஏன்?

I தீமோ 2:5,6

யோவான் 8:17,18

யோவான் 1:18

I யோவான் 2, 22

II யோவான் 9 வசனம்

வெளி 5:13

நீதி 30:4

அப் 7:55

I யோவான் 1:3

வெளி 21:22,23

யோவான் 14:23


ஆகையால், பரிசுத்த ஆவி தேவனுடைய வல்லமையென்பது ரூபகாரமாகிறது. 

வல்லமையே என்பதற்கான ரூபகாரங்களை தியானித்தோம். இனி திரித்துவத்திற்கு இதுவரை நாம் பரிசுத்த ஆவி ஆள் தத்துவமுள்ள தேவனல்ல; அது தேவனுடைய (Trinity) ஆதாரமாகச் சொல்லப்படும் வசனங்களைத் தியானிக்கலாம்.


  1. I யோவன் 5:7: "பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர் பிதா, வார்த்தை பரிசுத்த ஆவி என்பவர்களே. இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் பூலோகத்திலே" இந்த வசனம் King James Versionல் அடைப்புக் குறிக்குள் போடப் பட்டுள்ளது. ஏனெனில், அதுமூலப்பிரதிகளில் காணப்படவில்லை. ஆகையால்தான் திருத்திய மொழிபெயர்ப்புகளில் மட்டுமல்ல, நவீன மொழி பெயர்ப்புகளாகிய, EMPHATIC DIAGLOTT, YOUNG'S BIBLE TRANSLATION, THE AMERICAN BIBLE UNION TRANSLATION, THE IMPROVED VERSION etc. இவைகளி லிருந்தும் இந்த வசனம் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது. ரோமன் கத்தோலிக்க திருத்திய பதிப்பிலிருந்து இந்த வசனம் நீக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டின் மகா பூர்வீகப் பிரதிகளாகிய சிநெயாடிக் (SINAITIC), வாட்டிகன் எண் 1209 (VATICAN No. 1209) ஆகியவற்றில் இந்த வசனம் கிடையாது. எராஸ்மஸ் (ERASMUS) என்பவர் நமது மூன்றாவது பதிப்பில் கி.பி, 1523ல் இந்த வசனத்தைப் புதிய ஏற்பாட்டில் புகுத்தினார். (ஆதாரம்:- EMPHATIC DIAGLOTT BY BENJAMIN WILSON ON PAGE 4).

  2. மத்தேயு 28:19:- 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள்'. இந்த வசனத்தில் “பரிசுத்த ஆவியானவர்" என்று கூறாமல், ‘பரிசுத்த ஆவியின்' என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஞானஸ்நானம் என்பது இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் உடன்படிக்கை பண்ணி, பரிசுத்த ஆவியைப்பெறுதல் என்று பொருள் (I பேது 3.21; அப் 2:38). ஆகை யால், இந்த வசனத்தை வைத்துக்கொண்டு, தேவன் மூன்று ஆட்களடங்கியவர் (திரியேக தேவன்) எனக்கூறமுடியாது. மேலும், மூன்று ஆட்களடங்கிய தேவனாக இருந்தால், 'நாமத்திலே' என்பதற்குப்பதிலாக 'நாமங்களிலே' என்றிருக்க வேண்டும். மேலும் ஒன்றான மெய்தேவன் என்று தான் வேதம் கூறுகிறதே தவிர, திரியேக தேவன் என்று வேதம் எந்த இடத்திலும் கூறவில்லை.

  3. II கொரிந்தியர் 13:14: - இந்த வசனத்தில் 'பரிசுத்த ஆவி' என்றுதான் குறிப் பிடப்பட்டு இருக்கிறதே தவிர, 'பரிசுத்த ஆவியானவர்' என்று கூறப்படவில்லை. மேலும், அந்த வசனம் திரித்துவத்தைக் காண்பிப்பதற்காகச் சொல்லப்படாமல் உங்களிடம் கிருடையும், அன்பும், சகோதர ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக என்ற பொருளிலே தான் சொல்லப்பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியை பெற்ற அனைவரும் சபையாக, கிறிஸ்துவின் ஒரே சரீரமாக இருக்கிறார்கள்.

 


அவர்கள் எல்லோரும் கிறிஸ்துவின் அங்கங்களாக ஒரே சரீரமாக ஐக்கியப் பட்டிருக்க வேண்டுமென்று பவுல் அப்போஸ்தலன் ஆசீர்வாதம் கூறுகிறார். 

  1. எபேசியர் 4:30:- "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரை யாகப்பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.' இதில் பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் என்று சொல்லப்பட்டிருப்பத னால், பரிசுத்த ஆவியை ஒரு ஆள் தத்துவமுள்ள தேவனாகக் கூறுகிறார்கள். ஆனால், அப்படியல்ல, பரிசுத்த ஆவி, தேவனுடைய வல்லமை மட்டுமல்ல; தேவனுடைய சிந்தை, எண்ணம் என்ற பொருளிலும் கூறப்பட்டிருக்கிறது. தன்னுடைய சுயசித்தத்தைவிட்டுவிட்டு, தேவனோடு உடன்படிக்கை பண்ணின வர்கள், பரிசுத்த ஆவியைப் பெறுகிறார்கள். இதன் மூலமாக மாம்ச சிந்தை நீக்கப்பட்டு, தெய்வீக சிந்தை அல்லது எண்ணம் கொடுக்கப்படுகிறது. இதுதான் தேவனுடைய சிந்தை என்றும், கிறிஸ்துவின் சிந்தை என்றும் வேதம் கூறுகிறது. இவ்வாறு தெய்வீக சிந்தையைப் பெற்ற இவர்கள், மாம்ச சிந்தைக்கு அடிமையாகி அதற்கேற்ற கிரியைகளைச் செய்யும் பொழுது தெய்வீக சிந்தையை, அதாவது பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துகிறார்கள். ஆகையால் பரிசுத்த ஆவி ஒரு ஆள் தத்துவமுள்ள தேவனைக் குறிக்காமல், தெய்வீக சிந்தையைக் குறிக்கிறது.


பரிசுத்த ஆவியை ஒரு ஆள்தத்துவமுள்ள தேவனாக எடுத்துகொண்டோ மானால், அதனால் ஏற்படும் விபரீதத்தைப் பாருங்கள். லூக் 1:35ல், தேவதூதன் கன்னிமரியாளிடம், “பரிசுத்த ஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்" என்று கூறுகிறான். இதில் பரிசுத்த ஆவியை ஆள் தத்துவமுள்ள தேவனாக எடுத்துக்கொண்டோமானால், பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கும், கன்னிமரியாளுக்கும் இயேசு கிறிஸ்து பிறந்ததாகிவிடும். இப்படிப் பட்ட விபரீதமான எண்ணம் ஏற்படாத வகையில் தான் வேதம் பரிசுத்த ஆவியை உன்னதமானவருடைய பலம் (POWER) என்று திட்டமும் தெளிவுமாக இந்த இடத்தில் விளக்குவதைக் கவனிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.


இதுவரை வேதத்தை ஆராய்ந்த வரையில், யேகோவா என்னும் நாமமுள்ள ஒன்றான மெய்தேவன் ஒருவரே தேவன் என்றும், இயேசு கிறிஸ்து அவரால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரே பேரான குமாரனென்றும், பரிசுத்த ஆவி தேவனிடத்தி லிருந்து வரும் பெலன், வல்லமை என்றும் அறிந்து கொண்டோம்.


ஆகையால், நம்முடைய பாரம்பரிய கொள்கைகளை விட்டுவிட்டு, வேதத்தின் போதனைகளை ஏற்றுக்கொண்டு, நமது ஓட்டத்தில் தொடர்ந்து ஓடுவோமாக. ஏனெனில், சத்தியம் நம்மை விடுதலையாக்கும் தேவனுடைய வசனமே சத்தியம் (யோவான் 8:32;17:17).