Passover

பஸ்கா 2023

நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவா”வின் ஞாபகார்த்த நாள் இந்த வருடம் 2023 வரும்   ஏப்ரல் 04  (ஆபீப் மாதம் 14 தேதி)செவ்வாய் கிழமை அன்று இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபீப் மாதம் முதல் பிறை தெரிந்த பிறகே சரியாக பஸ்கா நாள் அறிவிக்கப்படும்.  

பிறை பார்த்தல் அறிக்கை:

ஏப்ரல் 3 ஞாயிற்றுக்கிழமை அன்று பிறை எருசலேமில் காணப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே ஏப்ரல் 3 புதிய வருடத்தின் முதல் மாதம் முதல் தேதி (ஆபீப் மாதம் முதல் தேதி).

பார்லி பசுங்கதிர் அறிக்கை - Feb 2022

மார்ச் 15ம் தேதி பார்லி கதிர் விளைச்சல் தேடலுக்கு பின் தேவையான அளவு விளைந்த கதிர்கள் இல்லை. ஆகவே 13 மாதம் கூட சேர்க்கப்படுகிறது. ஆகவே புதிய வருடம் ஏப்ரல் மாதம்3ம் தேதி ஆரம்பிக்கிறது. (ஆபிப் மாதம் முதல் நாள், ஏப்ரல் 3ம் தேதி சூரியன் மறைந்தபின் ஆரம்பிக்கிறது).

1Corinthians 11:25,26

அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து:

இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறதுநீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்துஇந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.